(Reading time: 20 - 39 minutes)

"எனக்கு என்னவோ போல இருக்கு"

"இங்க பாரு. நான் என் பொண்டாட்டி முன்னாடி ஒன்னும் இல்லாம கூட இருப்பேனே ஒளிஞ்சு அவளுக்கு தெரியாம டிரெஸ் எல்லாம் மாத்த மாட்டேன் புரிஞ்சுதா? அது மட்டும் இல்லாம நீயும் அப்படி செஞ்சா எனக்கு டபுள் சந்தோசம் தான்", என்று கூறி உல்லாசமாக சிரித்தான்.

"ஆன்", என்று வாயை பிளந்த படி நின்றாள் மதி.

"கண் முன்னாடி கும்முன்னு இப்படி போஸ் கொடுத்துட்டு நின்னா நான் எப்படி சும்மா இருப்பேன். இன்னைக்கு கொடுக்க வேண்டிய முத்தத்தை கொடுக்கவா?", என்று கேட்டான்.

"ம்ம் அப்புறம் கொடுங்க. இப்ப பள்ளு விளக்கலை", என்று தயக்கத்துடன் கூறினாள் கலைமதி.

"ஏய் நான் விளக்கிட்டேன் டி"

"உங்களை சொல்லலை. என்னை சொன்னேன்"

"பரவால்ல. அது நான் தான் கவலை படணும்", என்று கூறி கொண்டே அவள் முகம் நோக்கி குனிந்தான்.

அதன் பின் அவனிடம் இருந்து தப்பித்து குளித்து முடித்து வெளியே வந்தாள்.

அப்போதும் கலைமதியை முறைத்த படியே தான் இருந்தாள் வள்ளி. அதை கண்டு மனம் கலங்கினாலும் முந்தின நாள் சூர்யா  சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் நினைவில் கொண்டு வந்து வள்ளியை கண்டு கொள்ளாமல் மங்களம் அருகில் சென்றாள்.

"வா டா மதி. காபி குடிக்கிறியா?", என்று கேட்டாள் மங்களம்.

"வேண்டாம் அத்தை. அப்புறம்  குடிச்சிக்கிறேன். எதாவது செய்யட்டுமா?"

"ஹ்ம்ம் பூண்டு மட்டும் உரிச்சு தரியா? காலைல மட்டும் தான் சாப்பாடு செய்யணும். மதியம் ஹோட்டல்ல வாங்கிக்கலாம். நைட் மண்டபத்துல சாப்பிட்டுரலாம் சரியா?"

"சரிங்க அத்தை"

"அப்புறம் மதி, பியூட்டி பார்லர்ல இருந்து ஆள் வர சொல்லணும். நான் சொல்லிரவா?"

"அதெல்லாம் வேண்டாம் அத்தை. தேவை இல்லாத செலவு. என் பிரண்ட் காவ்யா வருவா. வீட்லயே பண்ணிக்கிறேன்"

"சரி மா. எனக்குமே வீட்ல அலங்காரம் பண்ணுனா தான் பிடிக்கும்.  உன் கல்யாணத்தன்னைக்கு அவ்வளவு அழகா இருந்த. ஜாக்கெட் போட்டு பாத்த தான? சரியா இருக்கா?"

அதை போடும் போது அவனை வெளியே போக சொல்லி கெஞ்சியது நினைவில் வந்தது. "நான் பாக்க கூடாதா?", சிரித்து கொண்டே வெளியே சென்ற சூர்யா முகம் மின்னி மறைந்தது. வந்த வெட்கத்தை மறைத்து கொண்டு "சரியா இருந்தது அத்தை", என்றாள்.

"என்ன மா உன் மருமக முகம் ஒரு மார்க்கமா இருக்கு?", என்று கேட்டு கொண்டே வந்து வம்பிழுத்தான் சூர்யா.

"அவளை ஏண்டா ஓட்டுற?", என்று கேட்டு கொண்டே அந்த பக்கம் எதையோ எடுக்க சென்றாள் மங்களம்.

"நேத்து உன் மேல படுத்த சீன நினைச்சு தான வெக்க பட்ட?", என்று அவளிடம் கேட்டான் சூர்யா.

"அது சேலை கட்டும் போது உங்களை வெளிய போக சொன்னதை  தான் நினைச்சேன்", என்று உளறி நாக்கை கடித்து கொண்டாள் மதி.

"ஆக மொத்தம் உன் புருசனோட நினைப்புல தான் சுத்திகிட்டு இருக்கன்னு சொல்லு". என்று அவளை பார்த்து சிரித்தான். பதிலுக்கு அவளும் வெக்கத்துடன் சிரித்தாள்.

தூரத்தில் இருந்து இதை பார்த்து கொண்டிருந்த வள்ளிக்கு பற்றி கொண்டு வந்தது.

அவள் வயிற்றெரிச்சலை இன்னும் கூட்டவென்றே கலைமதியை நோக்கி சென்றார் அவளுடைய அப்பா சண்முகம்.

"மதி மா. இந்தா டா உன் அம்மாவோட நகை. அன்னைக்கே கொடுக்க நினைச்சேன். முடியலை. இந்தா வாங்கிக்கோ", என்று கூறி ஒரு பையை நீட்டினார்.

அதை பார்த்ததும் அப்படியே சூர்யா பின்னாக மறைந்து நின்றாள் மதி.

சூர்யா முன்னால் எதையும் சொல்ல முடியாமல் பல்லை கடித்து கொண்டு நின்றாள் வள்ளி.

"நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க மாமா. கலைக்கு இந்த நகை வேண்டாம்", என்றான் சூர்யா.

"நீ சும்மா இரு சூர்யா. இது அவளோட அம்மா நகை. அவளுக்கு தான் சீரா போகணும்"

"அம்மாவோட நகை பொண்ணுக்கு தான் சீரா போகணும். ஆனா கல்யாணம் முடிஞ்சு இத்தனை நான் கொடுக்காம இப்ப கொடுக்க என்ன காரணம் மாமா? இத்தனை நாள் கொடுக்க கூடாதுனு உங்களை தடுத்து நிறுத்துனவங்க இப்ப தடுக்கலையா?"

"யாருப்பா என்னை தடுத்து நிறுத்த முடியும்? இது அவளுக்கு தான் போய் சேரனும்"

"திடிர்னு நீங்க வீரனானது அதிசயம் தான். அப்பறம் அவளோட அம்மாவே உயிரோட இல்லை. அந்த நகையை மட்டும் வச்சு என்ன செய்ய போறா"

"சூர்யா"

"விட்டுருங்க மாமா. என்னோட பொண்டாட்டிக்கு எனக்கு நகை எடுத்து கொடுக்க தெரியும். அம்மா கிட்ட நேத்தே நான் வாங்கி கொடுத்துட்டேன். அதனால இதை நீங்களே வச்சிக்கோங்க"

"மதி வாங்கிப்பா தம்பி"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.