(Reading time: 22 - 44 minutes)

தொடர்கதை - இரு துருவங்கள் - 02 - மித்ரா

Iru thuruvangal

அனந்திதாவின் இல்லம்:

நித்யவோ இன்று நடைபெற்ற இத்திருமணத்தால் மிகவும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி எங்கோ வெறித்துப் பார்த்துக் கொன்டிருந்தாள். வந்ததில் இருந்து, தன்னுடன் வந்த மதுமிதாவைக் கூட பொருட்படுத்தாமல் இன்று அவள் அப்பா தன்னிடம் கேட்டதை நினைவு கூர்ந்தாள்.

அனைவரும் சென்றவுடன் தன் அருகில் வந்த தந்தை, “கண்ணு, அப்பா இப்படி முடிவெடுத்துட்டனு கோபமாக இருக்கியா டா? “ என்றார்.

“எனக்கு இங்க என்ன நடக்குதுன்னு புரியமாட்டான்கது பா, அவருக்கு விருப்பம் இல்லனா முன்னாடி யே சொல்லி இருக்கலாம் தான, ஏன் இப்படி ஆசைய காட்டி மோசம் பண்ணனும். நான் அவ்வளவோ மோசமான பொண்ண பா, நான் அவரை ஒன்னும் விரும்பல பா, ஆனா அவர் தான் என்னோட ஹஸ்பண்டனு மட்டும் மனசால நினைச்சேன் பா “, என்றாள்.

அதைக் கேட்ட அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது, அனந்திதாவோ குற்ற உணர்ச்சியில் நித்யாவை பார்க்க முடியாமல் தலைக் குனிந்து இருந்தாள்.

ராம்ப்ரகாஷ், “எனக்கு புரியுது மா, என்ன பண்ண அந்த பையன் இப்படி பண்ணிட்டான். அவன் உன்ன வேணாம்னு சொன்னாலும் இந்த கல்யாணம் மண்டபத்திலிருந்து போகல, ஆனா அக்காவ பண்ணிக்க கேட்கறான். இந்த சமுதயாத்துல முதல ஒரு கல்யாணம் பண்ணி விவாகரத்துன்னு ஒன்னு நடந்தாவே அந்த பொண்ண எல்லா நல்லது கேட்டதுல இருந்து ஒதுக்கி வெச்சிடும், உனக்கே தெரியும் அக்காவுக்கு எவ்வளவோ பேர பார்த்தோம் எத்தன பேரு நம்ம அனந்திதாவ வேணாம்னு சொன்னாங்க. இப்போ இந்த மாதிரி சமயத்துல அக்காவ விருப்பப்பட்டு கேட்கறான் வேணாம்னு சொல்ல முடியல டா? “ என்றாள்.

நித்யவோ அவர் கூறுவதை நன்கு புரிந்துக் கொண்டு தன் அக்காவின் அருகில் வந்தாள். அழுகையின் இருந்தவளின் முகத்தை தன் கைகளால் துடைத்து, “இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கொள் அக்கா. எனக்கு தெரியும் உனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னு இருந்தாலும் உன்னை செட்டில் செய்யனும்னு நாங்க எல்லாரும் நினைச்சோம். உன்னை இந்தியா வரசொல்லி, கட்டயப்படுத்தனதும் அதுக்காக தான். ப்ளீஸ் அக்கா எங்க எல்லார்க்காகவும் ஒத்துக்கோ அக்கா. “ என்றாள்.

அவள் பேசுவதைக் கேட்டு அனைவரும் வேறுவேறு மனநிலையில் இருந்தனர். அவள் தந்தையோ இப்படி ஒரு பெண்ணை பெற்றதற்கு பெருமையாகவும், அவள் தாயோ தன்னுடைய கஷ்டத்தைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய அக்காவின் வாழ்கைக்காக அக்காவே சமாதனப்படுத்துபவளே பார்த்து பூரிப்பாகவும், அனந்திதாவோ நான் இந்த திருமணத்திற்கு வராமல் இருந்து இருந்தால் தன் தங்கையின் வாழ்க்கை வீணாகப்பட்டிருக்கும் எனவும், வந்ததால் அவள் திருமணம் தடைப் பெற்றது எனவும் ஒருபுறம் சந்தோசமாகவும் ஒருபுறம் வருத்தமாகவும் அவளைப் பற்றியோசித்தாலேத் தவிர தன் எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் அந்த முடிவை எடுத்தாள்.

அனைவரையும் ஒரு முறை தன் கண்களால் பார்த்தவள், அவர்கள் மனநிலை உணர்ந்தவளாக, “சரி, நித்யா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றாள் அழுகையுடன்” அதைப் பார்த்த அனைவரின் மனதிலும் ஒன்றேத் தோன்றியது அவள் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிருக்கிறாள், அதனால் ஒத்துக்கொண்டுவிட்டாள்.

எப்படியோ இந்தப் பிரச்சனையால் ஆவது திருமணத்திற்கு சம்மதித்தாலே என்றே கருதினர். அவர்களுக்கு தெரியவில்லே அதனால் மட்டும் அல்ல என்று. ஏன் அவளுக்கே தெரியாது ஏன் ஒத்துக்கொண்டாள் என. அதன் பிறகு திருமணம் நடைப்பெறும் வரை இருந்தவள் அனைவரின் பரிதபமான பார்வையை உணர்ந்து விட்டிற்கு வர வேண்டினாள்.

இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்தவளின் முதுகையேப் பார்த்துகொண்டிருந்த மது இவளே திசைதிருப்ப முயன்றால் அதுவும் அனந்திதாவிற்கு எதிராக பேசி.

திடிரென்று அவளேத் திருப்பி, “எனக்கு உங்க அக்காவ புடிக்கல, எங்க அண்ணணுக்கு பையித்தியம் புடிச்சிடுச்சு, உன்ன மாதிரி நல்லா பொண்ண விட்டுடு இப்படி ஒரு முடிவ எடுத்துட்டான்”, என்றாள்.

அதைக் கேட்டு அதிர்ந்த நித்யா, “லூசாடி நீ, அவ என்னோட அக்கா, அதுவும் இல்லாம உன்னோட அண்ணி இந்த மாதிரி உள்ளாரத. “

“எனக்கு தெரியாது எனக்கு அவங்கள புடிக்கல, அவங்க என்னோட அண்ணாவ என்கிட்ட இருந்து பிரிச்சிருவங்க ! “

இதில் கோபமடைந்த நித்யா, “உனக்கு அவள பத்தி என்ன தெரியும், இப்படி வாய்க்கு வந்தபடி பேசாத அப்படி பேசன உன்னோட பிரிண்ட்ஷிப்பே வேணாம்ன்னு சொல்லிடுவேன். அவள் எவ்வளவு நல்லாவ தெரியுமா? அவள மாதிரி ஒருத்தி உனக்கு அண்ணிய வரதுக்கு நீ புண்ணியம் பண்ணிருக்கணும்.

 அவ கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு இருந்தவ என்னோட கம்பல்சனுக்காக இந்தியா வந்து இப்படி மாட்டிக்கிட்ட. எனக்கு தான் கில்டி யா இருக்கு. அவளுக்கு முதல் கல்யாணமே சரியா அமையல இப்பவாது ஒரு நல்லா family யா பார்த்து கல்யாணம் பண்ணி வெக்கலாம்ன, உங்க அண்ணா இப்படி ஒரு காரியத்த பண்ணி எல்லாரையும் ஒருவழி ஆக்கிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.