(Reading time: 22 - 44 minutes)

“என்ன மேடம்? பதில் இல்லையா இல்லை எங்கிட்ட சொல்ல இஷ்டம் இல்லையா?” என்பதைக் கேட்டவன். அவள் தலைக்குனிந்து இருப்பதை பார்த்தவன் அவள் காதுக்குஅருகில் சென்று “ நீ எதுக்காக கல்யாணம் பண்ணிகிட்டயோ, அதுக்காக தான் நான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன் புரிஞ்சதா? “ என்றான்.

அவனைப் பார்த்தவள் தன் கண்களை முடி தன்னை சமன் செய்துக் கொண்டு, அவனிடம் இருந்து விலகி அறைக்குள் சென்றாள்.

அவளின் பின்பு வந்தவன் “நான் சொன்னா பதிலுக்கு ரெஸ்பான்ஸ் இல்லாம நீ பாட்டுக்கு உள்ள வந்துட்ட பதில் சொல்லுடி? “ என்று அவள் தோளைப் பற்றினான். அதில் கோபம் கொண்டு அவனை அறைந்து விட்டாள்.

“ இன்னொரு தடவை என்னை தொட ட்ரை பண்ணிடாத ! “ என்று கூறிச் சென்றவளைத் தன்னருகே இழுத்து “ஏன் நான் உன்னைத் தொட்டதே இல்லையா?” கண்களில் விஷம சிரிப்புடன் அவள் அறைந்ததையும் பொருட்படுத்தாமல்.

அவன் பதிலில் முகம் சிவந்தவள் “ உன்னை, நான் தொடறதுக்கு அல்லோவ் பண்ணதால தான் என்னை நீ தொட்டு இருக்க இப்போ உனக்கு பெர்மிஷன் இல்லை. இனிமேலும் கிடையாது. “ என்றாள் வீராப்பாக.

தன்னிடம் இருந்து சிறிது தூரம் விலகி நடந்து சென்றவளைக் கோவத்துடன் தன்னருகே இழுக்கவும் அவள் கழுத்திலிருந்து வெளியே வந்து விழுந்தது இரு தாலிகள். அதைப் பார்த்து சிரித்தவன்.

அவள் முகம் நோக்க “ அய்யோ !! இப்படியா நீ மாட்டுவ அனந்திதா ! “ என்று மனதில் புலம்பினாள்.

“என்ன சொன்னா ! உன்னை தொடறதுக்கு உன்கிட்ட பெர்மிசன் தேவையா? லூசாடி நீ நான் கட்டுன ரெண்டு தாலியும் உன் கழுத்துல தொங்குது. இதவிட வேற என்ன பெர்மிசன் வேண்டும் .” என்றவன்.

“ மூன்று வருஷம் ஆகியும், நாம பிரிஞ்சும் இப்ப வரைக்கும் அந்த தாலி செயின நீ ஏன் கலட்டல? அவள் மார்பு பகுதியைத் தொட்டு காட்டி இங்க நான் இல்லைன்னு நீ சொல்லு?” என்றான் அவளைக் கூர்மையுடன்.

அவனேத் தொடர்ந்தான், “ உன்னை கல்யாண மண்டபத்துல பார்த்தேன் பாரு அப்பவே உன் கழுத்துல நான் போட்ட தாலிய பார்த்துட்டென்டி. ஒருவேளை உன் கழுத்துல அந்த செயின் பார்கலனா, நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்தியிருக்க மாட்டேன் “ என்றான் உறுதியாக.

அதைக் கேட்டவள் உடல் அதிர்ந்தது, அவன் கூறியதில் பயந்தவள். அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளின் கண்களில் நீர் வழிந்தது. அதைப் பார்க்க முடியாமல் அவளை அணைத்தான், அவளும் அவனுக்கு இணங்கினாள்.

மூன்று வருட பிரிவு அனைத்தும் அந்த அணைப்பில் கொடுக்க முயன்றும் முடியாமல் தோற்றனர். முதலில் பிரிவால் ஏற்பட்ட நெருக்கம் மாறி, இப்போ அவளின்பால் ஏற்படும் காதல், தாகம், நேசம், தாபம் இவை அனைத்தும் அவனுடைய அவளுக்கான தேவைகள் தலைத் தூக்க ஆரம்பிக்கவும்.

 அவளை விட்டு விலகி? “ நீ போய் தூங்கு அதி “ என்றான் அவளைத் திரும்பியும் பார்க்காமல். அதில் சோர்ந்தவள் அவனை மீண்டும் அணைத்துக் கொண்டாள்.இதற்குமேல் முடியாமல் “அதி வேணாம்டி என்னால இதுக்குமேல கண்ட்ரோல் பண்ணிக்க முடியாது போய் தூங்குடா. “ என்றவன்.

அவளைப் பிரிக்க பார்க்க. அவளோ “ப்ளீஸ் கொஞ்சம் நேரம். நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்டா !” என்று அவளைக் கட்டிக் கொண்டாள்.இதற்குமேல் முடியாமல் அவளைத் தூக்கிக்கொண்டு கட்டிலை அடைந்தான். அப்பொழுது தான் உணர்ந்தாள் தன்னுடைய முட்டாள்தனத்தை. அவளை நெருங்கவும் “வேணாம் ரிஷு !” என்றவளை.

நானும் இதைத்தாண்டி சொன்னான் “அப்போ கேட்காம இப்போ வேணான்னு சொல்லாத. எனக்கு தெரியும் நமக்குள்ள பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் இன்னும் இருக்கு, இருந்தாலும் நாம ஒருத்தர ஒருத்தர் விரும்பறோம் நாம காந்தம் மாதிரி எதிரெதிர் துருவங்கள் எவ்வளவு தான் பிரிக்க முயன்றாலும் சேரத்தான் பார்க்கும். LIKE ‘OPPOSITE POLES ATTRACT EACH OTHERS’. சோ இதுக்குமேல நாம பிரிஞ்சு இருக்கறது வேணாம்.” என்றவன் அவளைப் பார்த்தான்.

அவள் அமைதியாக இருக்கவும் “அண்ணாவும் அண்ணியும் சூப்பரா DECORATION பண்ணிருக்காங்க வேஸ்ட் பண்ண வேணாம் அதி ப்ளீஸ்! “ என்றான்.

அவளும் யோசித்தால் என்னதான் இருந்தாலும் தன் கணவனாகிவிட்டான் இனிமேல் மறுப்பதும் தேவையற்றது. தங்கள் இருவரின் பெற்றோர் முன்பும் இருவரும் நன்றாக வாழ வேண்டிய கட்டாயம் வேறு. நித்யாவிற்கு ஏற்படும் குற்ற உணர்ச்சி எல்லாவற்றிர்க்கும் மேல் தான் அவன் மேல் வைத்திருக்கும் காதல். ஆகையால் தான் ஒத்துக்கொள்வதாக தன் கண்களை முடி சம்மதம் சொன்னாள்.

 இது ஒன்றே போதுமானதாக அவன் அவளை ஆக்கிரமித்தான் காதலால். இரு துருவங்கள் மீண்டும் இணைந்தது திருமணம் என்றும் பந்தத்தால். இருப்பினும் மனதில் இருவருக்குமான வருத்தங்களும் கோபங்களும் காயங்களும் இருக்கவே செய்தது.

காதல் என்ற ஒரு வார்த்தையால் அனைத்தும் ஒதுக்கி வைக்கபட்டாலும் எப்போது வெளியே வரும் என்பதை விதி ஒன்றே அறியும். இருவருக்குமான புரிதல் உடையும், காலம் என்னும் மாயம் செய்யும் வேலை. முன்பொரு முறை நடைபெற்ற செயலால் இருவரும் பிரிந்தனர்.

மேலும் அதன் விளைவுகளை அனுபவித்தும் தங்களின் தவறை உணர்ந்து செயல்பட்டால் ஒழிய வரும்காலங்களில் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

 இருவரின் திருமண வாழ்க்கையும் கடந்த கால பிரச்சனைகளின் நுனியும் ஆராய ஆரம்பிப்பவர்களை வரும் வாரங்களில் பார்க்கலாம்.

தொடரும்...

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1192}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.