(Reading time: 22 - 44 minutes)

அனைவரும் உணவருந்தியவுடன் தினேஷும் ப்ரீத்தியும் கிளம்ப தயாரானார்கள். தினேஷ் ஹரிஷிடம் “ALL THE BEST” என்றுக் கூறி சென்றான். அவனும் சம்பிரதாயமாக “தேங்க்ஸ் அண்ணா” என்றதுடன் நிறுத்திக் கொண்டான்.

எல்லாருக்கும் நடந்த திருமணத்தில் நடந்த குழப்பத்தால் வேறு எதையும் வற்புறுத்தாமல் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் தனிமை தர எண்ணி அவர்களைத் தவிர மற்ற அனைவரும் அவர்களுடன் சென்றனர்.

போகும்முன் அனந்திதாவிடம் வந்த சுமதி “நாங்க எல்லோரும் தினேஷ் வீட்டுக்கு போறோம். காலைல வந்துடுவோம். எதுவும் சமைக்க வேணாம். நான் வந்து பார்த்துக்கிறான். நீ ரூம்க்கு இப்போ போ என்று பால் செம்பைக் கொடுத்து, ஹரிஷ் வீட்ட லாக் பண்ணிட்டு வருவான்” என்றுக் கூறி சென்றார்.

அவளுக்கு “அப்பாடா!” என்று மனதில் நினைத்தாள். ஏனெனில் பெரியவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்காக தானும் அவனும் நடிக்க வேண்டி வரும் அவன் வருவதற்கு முன்பு அறைக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்தவள், இருப்பினும் எதற்காக அவனிடம் தயக்கம் அவன் ஒன்றும் புதியவன் இல்லையே !! என்று யோசித்தவள் தன் மாமியார் கூறிச் சென்றதற்காகவே சென்றாள்.

ஹரிஷிடம் விடைபெற்றுச் செல்ல வந்தவர்கள் அனந்திதாவிடம் பொறுமையாகவும் சண்டைஇடாமல் இருக்கவும், ஒரு பெண்ணாக சுமதியோ “அவளிடம் கடுமையைக் கட்டாதே” என்று வெளிப்படையாகவே கூறிச் சென்றனர் அவன் பெற்றோர்.

அவனுக்கோ நீங்கள் நினைக்கற மாதிரி நடக்க வாய்பேயில்லை, இதுல இவர்கள் நான் அவகிட்ட முரட்டுத்தனமாக நடந்துக் கொள்ள போவதுப் போல பில்ட் அப் குடுத்துட்டு போறாங்க. அவ என்ன அடிக்கறதுக்கு ஆன வாய்ப்புகள் அதிகம் இத வெளிய சொன்னா வெட்ககேடு.

கடவுளே அவ நல்லா முட்ல இருக்கணும் எந்தவித சேதாரம் இல்லாம நாளைக்கு நான் ரூமை விட்டு வெளிய வந்தா வாரவாரம் உனக்கு தேங்காய் உடைக்கிறேன் என்று தன் இஷ்ட தெய்வத்திற்கு வேண்டுதல் ஒன்றை வைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றான்.

அறைக்குச் சென்றவன் அசந்துதான் போனான் அவ்வளவோ அழகாக தன்னுடைய அறையை அலங்கரித்து இருந்தனர். அதைப் பார்த்தவன் இதை ரசிச்சு அனுபவிக்க நமக்குதான் குடுப்பனையில்லை என்று நினைத்தவன் அவளைத் தேடினான்.

அவள் அறையில் இல்லாததால் குளியலறையில் இருப்பாள் என்று அதன் கதவைத் தட்ட போக கதவு தானாக திறந்தது.

அவள் அங்கு இல்லாததால் பால்கனியில் சென்று பார்த்தவன் அசந்து தான் போனான். அவள் துளிர் இலை நிறத்தில் பட்டுப்புடவையும் ஆரஞ்சு நிற பார்டர் புடவையில் அழகாக இருந்தவளைப் பார்த்து மயங்கி நின்றான்.

அவனை மறந்து நின்றவன், உள்ளே வரும்போது இருந்த பயம் தயக்கம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அவன் அறியாமல் அவள் அருகில் சென்றவன் அவளை பின்புறமாக அணைத்துக் கொண்டு, அவள் கழுத்தில் அவன் முகத்தை வைத்துக் கொண்டு அவள் வாசம் அறிய முற்பட்டான்.

அவன் தொட்டதும் கோபம் கொண்டு அவனைத் திட்டவே எண்ணினால் ஆனால் முடியவில்லை, ஏனெனில் தங்களுடைய அறைக்கு வந்தவள் அதன் அலங்காரத்தைப் பார்த்தவளின் நினைவுகள் தங்களுடைய கடந்த காலத்தை அடைந்தது. அவனுடனான நினைவுகள் அவளுடைய மிகபெரிய பலவினமே, இன்னும் சிறிது நேரம் சென்றால் எங்கே அவன் செய்ததை மறந்து அவனிடம் தன்னுடைய பலவினத்தை கட்டிவிடுவோமோ என்று பயத்திலேயே பால்கனிக்கு சென்று விட்டாள்.

இருப்பினும் அவன் தன்னை அணைத்ததும் அதில் வெறும் அன்பே காதலை மட்டுமே அறிந்தாள். அதனால் ஆன வரைக்கும் பொறுமையாக, தன்னை அணைத்தவனை காயப்படுத்த வேண்டாம் என்றே தோன்றியது. ஏனெனில் அவனிடம் தனக்கான கேள்விகளுக்கு பதிலை பெற வேண்டும் என்பதில் உறுதியை இருந்தாள்.

“அதி ! அதிமா ! ஐ மிஸ்டு யு சோ மச் ! நீ இல்லாம இந்த மூன்னு வருஷமா எப்படி இருந்த தெரியுமா ! உன்னோட கோபத்துக்கான காரணம் தெரிஞ்சும் நீ என்னை நம்பலயே னு ஒரு ஈகோ. அப்பறம் ஒரு தடவ கூட ரீசன் கேட்காம நீயே decide பண்ணிட்டு என்ன விட்டுடு போயிட்டியேன்னு கோவம்டா. என்னை மறந்துட்டியாடி !” என்றான் மனகுமறலுடன்.

அவன் கூறியதைக் கேட்டவள் மனம் இளகினாலும் அவனிடம் “எதுக்கு நித்யாவ கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்ட? “ என்று நேரடியாக தாக்கினால் அவனின் அணைப்பில் இருந்து விலகாமலும் அவன் புறம் திரும்பாமலும்.

அவள் கேட்டதில் முதலில் அதிர்ந்தவன், பின் சிரித்து அவளை விலக்கி அங்கே போடப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து அவளையும் தன்னருகில் அமர்த்திக் கொண்டவன் அவள் கண்களைக் கூர்ந்து நோக்கி, “நீ ஏன் பிரதீப் ஆ கல்யாணம் பண்ணிகிட்ட? “ என்றவன்.

அவன் கேள்வியை விட அவன் தன்னிடம் பார்த்த பார்வையில் கொஞ்சம் கூட மென்மை என்பது இல்லாமல் இருந்ததால் அவள் முதுகு சில்லிட்டது. அவள் பதில் கூற முடியாமல் “அது வந்து ! வந்து !” என்ற பதில் கூற இழுத்தவளைப் பார்த்து முறைத்தவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.