(Reading time: 22 - 44 minutes)

இன்னொரு அறையில் இருந்து வந்தவன் மாடி படிக்கட்டுகளில் கீழே போகலாமா? வேண்டாமா? என்று இருந்தவளே பார்த்து நமட்டு சிரிப்பு ஒன்றே வழங்கினான். அவள் அறியாமல்.

அவள் அருகில் வந்தவன், “என்ன நந்து கீழே போலையா? எனக்காக வைட்டிங்கா?” என்று வினவியவனே கூர்ந்து பார்த்தவள். “என்னை நந்துன்னு நீ கூப்பிடாத எனக்கு புடிக்கல “ என்றாள்.

அவன் அசராமல் “உன்னை நந்துன்னு கூப்பிட்டதா மட்டும் தான் உனக்கு ஞாபகம் இருக்கா, எனக்கு என்னவோ இன்னும் எவ்வளவோ பேரை உனக்கு நான் வைச்சி, உன்னை கூப்பிட்டதா எனக்கு ஞாபகம். அதுஎல்லாம் கூப்பிடட்டுமா? உனக்கு ஒகே னா, எனக்கும் ஒன்னும் பிரச்சனையில்லை “ என்றான்.

இந்த பதிலை எதிர்பார்க்காததால் அவன் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவள் தலைக்குனிந்து நின்றாள். அதை பார்த்தவன் அவளை மேலும் சீண்டாமல், “அது நம்மளோட ப்ரைவசி நந்துமா, நான் உன்மேல எவ்வளவுதான் கோபமா இருந்தாலும், அந்த பெயர் எல்லாம், எல்லார்க்கும் முன்னாடியும் கூப்பிட மாட்டேன். அது நான் மட்டுமே கூப்பிடனும்னு விருப்பப்பட்ட என் பொண்டாட்டி. அதனால நீ ஒன்னும் பீல் பண்ண வேண்டாம் ”, என்றுக் கூறி அவளை அழைத்துக் கொண்டு படியிறங்கினான்.

அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது மூன்று வருடம் ஆகியும் அவன் தன்னைப்பற்றிய சிறு விசயங்களையும் மறக்கவில்லை என்பதில் மகிழ்ந்து அவனிடம் மேலும் வாதாடாமல் அவனுடன் சென்றாள்.

கீழே அவர்களுக்காக காத்திருந்தனர் தினேஷும் ப்ரீத்தியும், வந்தவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு, ஆண்களுடன் ஹரிஷும் மற்ற பெண்களுடன் அனந்திதாவும் கலந்துக் கொண்டனர். ஆனால் புதிதாக ஹரிஷின் தாய் தன்னுடன் நன்றாக பேசுவதில் குழப்பம் அடைந்தாள்.

“அனந்திதா, உனக்கு சமைக்க தெரியுமா?”, என்றார்.

“தெரியும் ஆண்டி, ஓரளவுக்கு சமைப்பேன். ஆனா ரொம்ப நாள் ஆச்சு இப்போ நல்லா வருமான்னு தெரியல” , என்றாள்.

“அதுக்கென்னமா தினமும் பண்ணா எல்லாமே வந்துடும். நாம இனிமே சமைக்கலாம் நான் உனக்கு சொல்லித் தரேன். ப்ரீத்தி !! நீ தினேஷக் கூட்டிட்டு போய் எல்லாம் ரெடி பண்ணுங்க “ என்று கூறினார்.

“என்ன ரெடி பண்ணனும் ஆண்டி? “, என்றாள் புரியாமல்.

அதைப் பார்த்து சிரித்த இருவரும், அவள் முழிப்பதைப் பார்த்து, “ப்ரீத்தி அனந்திதாக்கு என்ன ன்னு சொல்லிட்டு நீ போமா?” , என்று நாசுக்காக சென்றார்.

“உனக்கு நிஜமாவே தெரியாதா அனந்திதா? “, என்று மறுபடியும் சிரித்தவள் பாவம் இதற்குமேல் படுத்தாமல் அவள் காதில் கூறிச் சென்றாள். அதைக் கேட்டவள் முகம் செவ்வானமாக சிவந்தது.

அவளைக் கவனித்துக் கொண்டிருந்த சுமதி அவள் அருகே சென்று, அனந்திதா வின் கையைப் பற்றி அருகில் இருந்த தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றவர்.

அவளிடம் “இங்கப்பாரு அனந்திதா இந்தக் கல்யாணம் எந்த சூழ்நிலையில் நடந்து இருந்தாலும், அதெல்லாம் மறந்துட்டு அவனோட சேர்ந்து நல்லாபடியாக வாழனும் அது தான் எங்களுக்கும் உன்னை பெத்தவங்களுக்கும் குடுக்கிற சந்தோசம். அதை நீங்க ரெண்டுபேரும் செய்விங்க ன்னு நம்பிக்கை இருக்கு. இதுல புடவை ஜெவல்ஸ் எல்லாம் இருக்கு போட்டு ரெடி ஆயிடு. நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன். இன்னைக்கு மட்டும் இங்கயே சாப்பிடு நாளைலிருந்து எங்களோட ஜாயின் பண்ணிக்கோ. “ என்று தன் கையிலிருந்த தம்பலத் தட்டைக் கொடுத்துவிட்டு சென்றார்.

அவளுக்கு அவர் கூறி சென்றதிலிருந்து பெரும் குற்ற உணர்ச்சியாக இருந்தது இவர்களுக்கு எல்லாம் உண்மைத் தெரிந்தால் எல்லார் முன்பும் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்று நினைத்தவள். அவர் கூறிச் சென்ற மாதிரி தயாராக துவங்கினாள்.

அங்கு ஹரிஷோ மற்றவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தாலும் நினைவு முழுவதும் அவளிடமே இருந்தது. அதைக் கலைத்த அவன் அண்ணன், “என்ன டா இன்னும் பொண்டாட்டி நினைப்பவே இருக்கபோல? ” என்றான்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா?” என்றவன். தன் அண்ணி தன்னுடைய அண்ணனை அழைக்கவும். அவன் வருவதாக கூறிவிட்டு அவனிடம் “ உன் பொண்டாட்டிய ப்ரஸ்ட் நைட் ல பாரு டா, அதுவரைக்கும் நாட் allowed “ என்று கூறி சென்றான்.

அவன் சென்றவுடன், “இதுவேறைய இன்னைக்கு நீ செத்த டா, ரொம்ப கோவமா வேற இருப்பா, எனக்கே இவ்வளவோ கில்டி யா இருக்குனா, அவளுக்கு சொல்லவே வேணாம்.”

“என்ன பண்றது? தப்பு பண்ணா அனுபவிக்கவேண்டியதுதான்” , என்று நினைத்துக் கொண்டவன் கடவுளிடம் தங்கள் இருவரையும் மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டான்.

 இனி காலம் நடத்தும் பாதையில் செல்வதைத் தவிர வேற எதுவும் இல்லை. எனினும் தாங்கள் இருவரும் செய்த பிழையால் யாரும் புண்படாமல் இருக்கவே வேண்டுகிறான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.