(Reading time: 12 - 23 minutes)

அவளோ “தேங்க் காட், நாம சைட் அடிச்சுக்கிட்டு இருந்துட்டு. அவன் இழுக்கவும் அவன் மேல போய் விழுந்து தப்பு பண்ணிட்டேன் அதுவும் தெரியாமதான். நான் அவன அப்படி பார்த்திட்டு இருந்ததை அவனுக்கு தெரிஞ்சு இருந்தா, எந்த முகத்தை வெச்சுக்கிட்டு அவன்கிட்ட பேசறது. நல்ல வேளை தப்பித்தேன்” என்று நிம்மதியடைந்தாள்.

ஆனால் அங்கு நடந்ததை மித்திலா பார்த்தாள். இருவருக்கும் ஏதோ ஈர்ப்பு உள்ளது என்று நினைத்தாலே தவிர. அவன் தந்த முத்தம் எதிர்பார்க்காமல் நடந்தது என்று அனந்திதாவைப் போல அவளும் எண்ணினாள்.

ஆனால் இன்னொருத்தியோ அவன் வேணுமென்று செய்தது என்று அறிந்திருந்தாள். அவள் ப்ரீத்தி (இவர்களின் இக்காதல் கதையை மாற்றும் சூத்திரதாரி).

ப்ரீத்தி, இவளைப்பற்றி கூற வேண்டும் எனில் அவள் ஒரு புரியாத புதிர் ஆவாள். வடஇந்திய பகுதியில் உள்ள ஜெய்ப்பூரில் உள்ள மேத்தா என்ற குடும்பபெயரைக் கொண்ட பாரம்பரியம் மிகுந்த வசதி படைத்த வீட்டில் பிறந்தவள். இந்த ப்ரீத்தி மேத்தா.

அவள் நினைப்பதை அடையும் ஒரு குணத்தையும், அதற்காக எந்தவிதமான நிலைக்கும் சென்று அதனை தன் வசம் ஆக்கும் முறையையும் அறிந்தவள்.

அவள் குருர எண்ணத்தை அறிந்த அவன் அண்ணன் கூட, அவளிடம் விலகினான், இல்லையில்லை விலக்கிவைக்க எண்ணிய அவள், அதில் வெற்றியும் அடைந்தாள்.

மிகவும் புத்திசாலி, இவளும் இவர்களின் குழுவில் ஒருத்தியே. அவளின் இப்போதைய ஆசை ஹரிஷ் மட்டுமே. அவனை ஏர்போர்ட்டில் பார்த்ததில் இருந்து பின் தொடர்ந்தவள்.

அவனும் தன்னைப் போலவே வந்துள்ளான் என்று நினைத்து அவனை தன் வசபடுத்திவிடலாம் என்று இருமார்பில் இருந்தவளை அனந்திதா அசைத்துவிட்டாள். காரணம், ஹரிஷ் அவளிடம் நடந்துக்கொண்ட முறையே அவளுக்கு சான்று ஆகியது.

மேலும் அவள் அறிந்த ஒன்று ஹரிஷைப் போலவே அனந்திதாவிற்கும் அவனிடம் ஈர்ப்பு உள்ளதை அறிந்துக் கொண்டாள்.

இருக்காத பின்னே, விமானம் கிளம்பி 5 மணி நேரம் ஆகியும், அவள் பார்வை அவர்களிடமே நிலைத்து இருந்தது. முதலில் அவளுக்கு இவர்கள் இருவரும் பேசும் மொழி அறியாமல் இருந்தது உண்மையே. ஆயினும் அவர்களின் உடல்மொழியை அவள் அறிய முயன்று அதில் வெற்றியும் அடைந்தாள்.

பின் அவர்களின் நெருக்கம் அவளை அந்த இருப்பிடத்தில் இருக்க முடியாமல் செய்தது எங்கு தன்னையும் மீறி எதாவது நடந்துவிடுமோ என்று பயந்து அவளின் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விட்டாள். எங்கு சென்றுவிடுவான் என்னை மீறி என்று நினைத்துக்கொண்டு அவள் உறங்க முயற்சித்தாள்.

இவளின் இந்த நிலைக்கு காரணகர்த்தாவான அந்த இருவரும், தங்களுடைய பழைய நிலைக்கு மெதுவாக மாற்றிக் கொண்டு பேச முயன்றனர். அதில் வெற்றியும் அடைந்தனர்.

பின் 1௦ மணி நேரம் பயணமாயிற்றே, எவ்வளவு நேரம் இப்படியே இருப்பது, இருவரும் நன்றாக பேசக் கூடியவர்கள் அந்த அமைதியே அவர்களை ஒருவழியாக்கி விடும் என்றெண்ணி தங்கள் பயணத்தை இனிமையாக்க முயன்று அதில் வெற்றியும் அடைந்தனர்.

 இவர்களுக்கு தெரியவில்லை இவர்களின் சந்தோசத்தை கெடுக்கவே தங்களோடு பயணித்துக்கொண்டு இருப்பவளைப் பற்றி. இருந்தும் என்ன செய்ய, இவர்களும் அவளின் கையில் ஆடும் பொம்மைகளாக மாறியிருப்பதை அறியவில்லை.

ஆனால் விதியோ, வேறு ஒரு கணக்கை இந்த மூவருக்கும் எழுதி இருந்தது. அதில் யார் வெற்றி பெறுவார்கள் யார் தோற்பார்கள் என யாரும் கணக்கிட முடியாது. அதுவே வாழ்வின் ரகசியம்.

ஆனால் இந்த பயணமே மூவருக்குமான வாழ்க்கையை மாற்றப் போகிறது. ஹரிஷ் அனந்திதாவின் நட்பு என்னும் எல்லைக் கோட்டை எப்பொழுது வேண்டுமென்றாலும், தாண்டும் நிலைக்கு கொண்டுவந்து விடப்போகிறது இந்த காதல், இதை அறியாத இருவரும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

அவர்களின் இந்த கடந்த கால எண்ணத்தை தடை செய்ய முயல்வதுப் போலவே, பக்கத்தில் விழித்த ஹார்ன் ஒலியில் இருவரும் தங்கள் நிகழ் காலத்தை அடைந்தனர்.

அதில் கலைந்த இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். பின் அவளிடம், “என்ன யோசிச்சிட்டு இருந்த அனந்திதா?” என்றான்.

“நம்ம ப்ரஸ்ட் லண்டன் ட்ரிப் பத்திதான் ஹரிஷ்” என்றாள்.

அவளும் தன்னைப் போலவே கடந்த காலத்தில் இருந்ததை எண்ணியவன் அவளை சீண்ட எண்ணி “என்னங்க அம்மிணி, அன்னைக்கு உனக்கு குடுத்த கிஸ்ஸா திரும்பி தரட்டுமா” என்று கண்ணாடித்துக் கூறினான்.

அவன் கூறியதில் முதலில் திகைத்தவள். பின் போலியாக கோபம்கொண்டு, “நீ சரியான ப்ராடுடா, என்னை கிஸ் பண்ணிட்டும் எதுவும் நடக்காத மாதிரி என்ன பில்டப் பண்ண. நானும் லூசு மாதிரி நீ தெரியாம பண்ணிட்டன்னு நினைச்சிட்டேன்.”

அவள் கூறியதைக் கேட்டு இன்னும் சத்தமாக சிரித்தான். பின் ஏதோ நினைத்துக் கொண்டிருந்த அனந்திதா அவன் தோளின் மேல் சாய்ந்துக் கொண்டாள் மௌனமாக.

“என்னாச்சு பேபி?”

“நீ நேத்துல இருந்து என்னை ஏன் அம்மணின்னு கூப்பிடல? இப்போதான் என்னை அப்படி கூப்பிடற” என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.