(Reading time: 12 - 23 minutes)

அவனுக்கு புரிந்துவிட்டது அவள் வருத்தம் எதற்கு என்று என்னதான் படித்து பெரிய பதவியில் இருந்தாலும் அவளுக்கும் சரி அவனுக்கும் சரி தங்கள் கோவை மொழியின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது.

 தாங்கள் பழகிய சில மாதங்களில் கூட, இவர்கள் இருவரும் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இவர்களின் நட்புக்கூட மிகவும் அதிகமாக 3 மாதங்களே நிலைப்பெற்றது. அதற்குமேல் இவர்களின் டாம் அண்ட் ஜெர்ரி சண்டைகள் ஆரம்பிக்கத் தொடங்கியது, அங்கு சிறுசிறு காதலும் தெரிந்தது.

ஆனால் ஒரு தடவை, இவளின் மேல் உள்ள கோவத்தில் அவன், “இந்த அம்மனிக்கு ரொம்ப தானுங்க திமிரு, மனுஷன புரிஞ்சுகிறால பாருங்க !!” என்று அவன் கடுகடுத்ததை அவள் காதில் சரியாக விழ.

 அவளும் அவனுக்கு நிகராக, “ஏனுங்க, நான் ஒன்னும் உன்ற ஊட்டுக்காரி கிடையாதுங்க, உங்கள புரிஞ்சுகிட. உன்ற வேலைய மாத்திரம் பார்த்துகிடுங்க. இல்லனா என்ற எச்சுதான் கிடைக்கும்” என்றுக் கூறியவளை வாயை பிளந்துக் கொண்டு பார்த்துக்கொண்டிருந்தவனை மித்திலாதான் இவ்வுலகத்திருக்கு திரும்பக் கொண்டு வந்தாள்.

அவர்கள் இருவரும் பேசியதை புரியாத அவள், “வாட் தா லங்குவேஜ் ஷி ஸ் ஸ்பீகிங்?” என்றுக் கேட்டு அவள் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தாள். அதனை நினைத்து இப்பவும் அவன் சிரிக்கவும்.

அவன் தோளில் இருந்து எழுந்து அவனைப் பார்த்தாள். அதை புரிந்தவன், “நாம ப்ரஸ்ட் டைம் கோயம்பத்தூர் பாஷை பேசும்போது, மித்திலா ஒரு ரியாக்ஷன் விட்டா பாரு. நீ அதை பார்கலடி. செம காமெடியா இருந்துச்சு” என்றான்.

அவளும் சிரித்தாள் அவனைப் பார்த்து. இருந்தும் அவன் ஏன் விளக்கத்தை தரவில்லை என மனதில் கேட்டுக் கொண்டாள். அவளுக்கு மிகவும் பிடிக்கும் அவன் பேசும் விதத்தை எண்ணி மிகவும் மகிழ்வாள். அவனை அடிக்கடி பேசுமாறு கூறி அவள் கேட்டு ரசிப்பாள். அதை இப்பொழுதும் எதிர்பார்த்தாள்.

 பின் ஜன்னல் பக்கம் தன் பார்வையை செலுத்தி தன்னுடைய கவனத்தை திருப்பினாள். அதனைப் பார்த்தவன் அவளின் கையைப்பற்றி அவளருகே இழுத்தவன். பிறகு வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு அவள்புறம் திரும்பினான்.

“இப்போ எதுக்கு திரும்பற? என்ன கோவம்?”

“அப்படி எதுவும் இல்லை, இதக் கேட்கவா வண்டிய நிறுத்துன? சீக்கிரம் வண்டிய எடு ஹரிஷ் போகலாம்.” என்றாள் பேச்சை மாற்ற முயன்று.

அதைப் புரிந்தவன் போல, அவள் கண்களை நோக்கி அவன் கண்களை கலக்கவிட்டவன். “எப்போ எப்படி பேசணும்னு எனக்கு நல்லவே தெரியும், அதனால நீ குழப்பிக்காத. எப்பவும் நான் உனக்குதான் புரிஞ்சதுங்களா என்ற அம்மனி ”.

அதை புரிந்து தலையை ஆட்டியவளைப் பார்த்து அவன் மயங்கினான். பின் அவள் பின்னங்கழுத்தில் கைவைத்து தன் பக்கம் இழுத்து, தன்னுடைய இரு கைகளில் அவள் கன்னத்தைப் பற்றியவன்.

அவள் முகம் நோக்கி குனிந்து அவள் இதழை சிறைப்பிடித்தான். அதில் கரைந்தவள் அவன் மீதே சரிந்து இசைந்துக் கொடுத்தாள். பின் இருவரும் விலகி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர்.

“இப்போ நாம லண்டன்ல இல்லாம போய்ட்டோம், இருந்திருந்த என்னாயிருக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும்” என்று கூறி அவன் சைகை செய்தான். அதை உணர்ந்தவள் அவன் தோளில் அடித்து “வண்டிய எடு ரிஷு” என்றாள் அவன் கண்பார்க்காமல்.

அதையறிந்துக் கொண்டவன் வண்டியை எடுத்தான் வேகமாக. இன்னும் அரை மணி நேரத்தில் சென்று சேர வேண்டிய இடத்தை இருபது நிமிடங்களில் அடைந்தான்.

அந்த கெஸ்ட் ஹவுஸைப் பார்த்தவுடன் அவள் மிகவும் மகிழ்ந்துதான் போனாள். அது அவ்வளவு அழகாக அமைக்கப்பட்டு இருந்தது. சுற்றியும் தென்னை மற்றும் பாக்கு மரங்களையும் வீட்டைச் சுற்றி வாழை மரங்களும் அழகான பூந்தோட்டமும் அதன் அழகைக் கூட்டியது.

இயற்கை காற்றும் அதன் குளுமையும் எங்கு சென்றாலும் கிடைக்காது என்பதுப் போல தோன்றியது இருவருக்கும்.

அப்போது ஹரிஷ் அவளிடம், “உனக்கு ஒண்ணு தெரியுமா அதி, இப்போதான் நான் உள்ளயே வரேன். இத வாங்கும்போது எல்லாரையும் கூட்டிட்டு வந்தேன் ஆனா உள்ள வரலை. அவங்க எல்லாரையும் அனுப்பிட்டு நான் திரும்ப வீட்டுக்கு போய்டேன்”.

“ஏன்??....” என்றாள்.

“நீ இல்லாம எனக்கு எந்த சந்தோசமும் வேணாம்னு நான் எப்பயோ முடிவு பண்ணிட்டேன். அப்பா கூட எவ்வளவு கூப்பிட்டரு ஆனா எனக்கு வர புடிக்கல. நீ என்னோட லைப் ல வந்துட்ட இப்போ, அதுதான் நான் உன்னோட சேர்ந்து வர ஆசைப்பட்டேன்” என்றான்.

அவன் பதிலில் உணர்ச்சிவசப்பட்டவள் அவனை அணைத்து கொண்டாள். சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள் பிறகு உள்ளே நுழைந்தனர். அந்த வீடு சுத்தமாக, அனைத்து சமையல் பொருட்களும் வைக்கப்பட்டு நீட்டாக இருந்தது. அவனிடமே கேட்டாள் அதைப்பற்றி.

அவனும், “இங்க maintenance –க்கு ஆள் போட்டு இருக்கோம். அப்பறம் நாம வரோம்னு காலைதான் சொன்னேன். அதுதான் எல்லாம் ரெடி பண்ணி வைச்சிட்டு நமக்கு தொந்தரவு தராம கிளம்பிட்டாங்க போல” என்று கூறி சிரித்தான்.

பின் அங்கு இருந்த சோபாவில் உட்கார்ந்து இருவரும் 5 நிமிடமே பேசியிருப்பார்கள். அதற்குள் அவனின் அலைப்பேசி அழைத்தது. அதன் நம்பரைப் பார்த்தவன் பிரைவேட் நம்பர் என வரவும் குழம்பி அவளைப் பார்த்தான். அவளும் யாராக இருக்கும் என்றுக்கருதி ஸ்பீக்கர் ஆன் செய்து பேச சொன்னாள்.

எதிர்முனையில் பேச பேச, ஹரிஷ் கோபத்தில் வெகுண்டு எழுந்தான். அவள் மனையாளோ முகம் வெளிறி பயத்துடன் அதனைக் கேட்டாள். இவர்களின் சந்தோசத்தை கெடுக்க வந்த அழைப்பால், இருவரும் அங்கிருந்த ஏகாந்த நிலையை மறந்திருந்தனர். அப்படி யார் பேசியது??? என்ன பேசினார்கள்? என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

தொடரும்...

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1192}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.