(Reading time: 9 - 18 minutes)

இங்க பாருங்கம்மா நானாச்சு உங்க பொண்ணோட வாழ்க்கைக்கு நான் பொறுப்பு ஆனா பாருங்க என்னோட குடும்ப நிலைமை சரியில்லை தண்ணி வண்டிமாதிரி இருக்கிறே இந்தாளுட போராடியே என் வாழ்க்கை பாழாப்போச்சு, அதனால தான் என் நாத்தனார் மூணுலட்சம் பணமும் தந்து 25 பவுனும் போடறேன்னு அதை வைச்சு உம்பிள்ளையை ஏதாவது தொழில் பண்ணி பிழைச்சிக்கச் சொல்லு, ஏன்னா வர்ற எம்பொண்ணு கஷ்டப்படக்கூடாதுன்னு பேசினா, அதனாலதான் நானும் சரின்னு சொல்லிட்டேன். இந்த பாவி பய இப்படி உங்க பொண்ணுகூட பழக்கம் வைச்சிருப்பான்னு நான் எதிர்பார்க்கலை பாக்கியம். என்ன பண்றது பிள்ளைங்க நடந்துக்கிறது பெத்தவங்களுக்கு தெரியுதா என்ன ? நீ மட்டும் எத்தனை கஷ்டப்பட்டு அதுங்களை படிக்கவைச்சே, சும்மாவா சொன்னாங்க ஊமை ஊரைக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டைக் கெடுக்குமின்னு, கமுக்கமா இருந்துட்டு எம்பிள்ளையை வளைச்சு போட்டுட்டா இல்லை

அக்கா நடந்த தப்புக்கு அவ மட்டும் காரணம் இல்லை, உங்க பிள்ளையும் தான். 

புரியுது, ஆயிரந்தான் இருந்தாலும் அவ உங்க பொண்ணு இல்லையா ? நான் அவ பக்கம்தான் ஆனா என்னை மாதிரி அவளும் கஷ்டப்படாம நல்லாயிருக்கணுமின்னா என் நாத்தனார் சொன்னாமாதிரி நீதான் எம்பிள்ளையை கைதூக்கிவிடணும். முடிஞ்சா சொல்லு, இதை எனக்காக மட்டும் கேட்கலை, உனக்காகவும் உம்பிள்ளைக்காகவும் தான், 

அத்தனை பணத்துக்கு நான்....எங்கே போவது, யோசித்தபோது அதற்கும் அந்தம்மாளே வழி சொல்லித்தந்தாள். அதான் இத்தனை பெரிய வீடு இருக்கல்ல அதை வித்துடு இல்லை அடமானம் வைச்சு ஏதாவது வழி செய் ! அவசரம் உனக்குத்தான் நான் பிள்ளையைப் பெத்தவ, நினைவு வச்சிக்க .,,, பாதி மிரட்டலும், ஏச்சரிக்கையுமாய் அவர்கள் சொல்லிவிட்டுப்போனதும்,நீ விடும்மா இவங்க அப்படித்தான் பேசுவாங்க நான் சங்கர்கிட்டே பேசறேன் என்று அக்கா நம்பிக்கைத் தந்தாலும் அதுவும் பொய்த்துதான் போனது. அவனும் அம்மா சொல்லுவதுான் சரியென்றான்.

அம்மா நம்ம நல்லதுக்குத்தானே டியர் கேட்குறாங்க. உங்கம்மா யாருக்கு செய்யப்போறாங்க... உனக்குத்தானே.. காதலித்தவனின் வேஷம் கலைதுந்து போனதை அக்காவாலும் தாங்கிக்கொள்ள முடியாமல் போனாலும், என்ன செய்வது, எல்லை தாண்டி போன பிறகு இனி .....கசப்புகளை விழுங்கியபடி தாலியை வாங்கிக்கொண்டாள். ஆனால் அம்மாதான் அரை உயிராகிப்போனாள், எவ்வளவோ சிரமப்பட்டு அக்காவை வழியனுப்பிய பிறகு அவள் பட்ட வேதனை சொல்லில் அடங்காததாகிவிட்டது. ஆடி சீர், தீபாவளி என்று ஏற்கனவே சிரமபட்டு இருந்த அவர்களை மேலும் உறிஞ்சத் துவங்கிவிட்டார்கள் அக்கா வீட்டு மனிதர்கள். மற்ற பிள்ளைகளுக்கு மிச்சம் பிடிப்பது எப்படி ? வீட்டை மீட்பது எப்படி இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அப்பாவின் மறைவு என்று அம்மாவை அரை உயிராக்கிவிட்டதுதான் மிச்சம். 

பள்ளியிறுதியாண்டு முடித்து அதன்பிறகு பகுதிநேர வேலை தேடிக்கொண்டு உபகாரச் சம்பளத்தில் மதிய நேர கல்லூரியில் படித்து டிகிரியும் முடித்து பின்தான் அந்த நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றது. அள்ளிக் கொடுக்கவில்லையென்றாலும் கிள்ளிக்கொடுக்கவில்லை, ஏதோ ஒரளவிற்கு குடும்பத்தை கொண்டு செல்ல வழி வகுத்தது. 

அம்மாவின் அடுப்பங்கரை காரியங்களுக்கு ஓய்வு கொடுத்தாலும் படிப்பு ஏராத தங்கை அதே சமையல் பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னபோது மனது கணக்கத்தான் செய்தது. அம்மாவிற்கு கொடுத்த அந்த ஒய்வே அவரை படுக்கையில் தள்ளிவிட்டது. ஆனால் கடன் கழுத்தை நெறிக்கும்படி வருவதற்குள் வட்டிக்கேனும் சமாளித்துக் கொள்ளலாமே என்றுதான் அதற்கு ஒப்புக்கொண்டாள் உத்ரா. எல்லாப் பொறுப்பும் குருவி தலையில் பனங்காய் வைப்பதைப் போல மாதக் கடைசி முதல் கடைசி வரை இழுபறிதான். 

அடிக்கடி வீட்டுக்குள் வந்து நிற்கும் மூத்தவளுக்கு கணிசமான செலவு ஆகத்தான் செய்தது. மூத்தவளை சுமையாக நினைக்காத போதும், என்ன செய்வது ? அக்காள் கணவனின் சின்னத்தனமான காரியங்களை கண்டும் காணாமல் விட முடியவில்லை. அப்படித்தான் அன்று கமலி குளித்து விட்டு வரும் போது பாத்ரூம் வாசலில் நின்றுகொண்டு விளையாட்டு காட்டினான். 

கேட்டால் சண்டை, அசிங்கமான வசவுகள், கொடுத்த பணத்தையும், நகையையும் சாப்பிட்டாகிவிட்டது. அகப்பட்டதை சுருட்டிக்கொண்ட பெற்றோரும் தங்களுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வேறு ஊருக்குப்போய் செட்டிலாகிவிட, இருண்டு விட்ட வாழ்க்கையை எண்ணி அழுதாளே தவிர எந்தவிதத்திலும் உதவியாய் இருக்கவில்லை, யார் யாரிடமோ பேசி அவள் படித்த படிப்பிற்கு நர்சரியில் டீச்சர் வேலை வாங்கித் தந்தால் அங்கேயும் போய் தொந்தரவு செய்த அந்த வேலையையும் காலி செய்தான். கடைசியில் அவனின் டார்ச்சர் தாங்காமல் அக்காவே போலீஸில் புகார் தந்து விட்டாள். செமத்தியாய் அவர்கள் நிமிர்த்திய பிறகு, இனி உன் சங்கார்த்தமே வேண்டாம் என்று எழுதி வாங்கிக்கொண்டு, இன்னொருத்தியை சேர்த்துக்கொண்டு அதே வீட்டில் குடித்தனம் நடத்துகிறான். 

இவள் பிரச்சனைக்கு வரவில்லை கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ் நடக்கிறது. வாழ்க்கை சூன்யமாகிவிட்டது இனி சாகத் துணிந்தவளை சமாளித்து இப்போதான் ஒருவழியாக டைலரிங் கற்று அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு ஜாக்கெட் தைத்து தருகிறாள். இப்படிப்பட்ட குடும்பச் சூழ்நிலையில் தான் உத்ராவிற்கு அந்த வரனும் வந்தது.

தொடரும்...

Episode # 01

Episode # 03

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.