(Reading time: 24 - 48 minutes)

31. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

ன்ன சஞ்சய் இது?! கேம்பஸ் இண்டர்வியூ நடந்தன்னைக்கு தானே இது... அந்த மரத்தடியில நாம ரெண்டு பேரு மட்டும் தானே உட்கார்ந்திருந்தோம்... அன்னைக்கு கூட உங்களையெல்லா பிரிஞ்சு நான் அமெரிக்கா போறத பத்தி தானே பேசிட்டிருந்தோம்... ஆனா வேற எதேதோ நீ பேசுற மாதிரி....” காவல்துறையில் பணியாற்றி இதுபோன்ற தில்லுமுல்லுகளை கண்டிருந்தாலும், அந்த காணொலியில் தானும் இருப்பதில் சற்று திகைத்து போனான் ரூபின்.

“ஆமா மச்சா! அன்னைக்கு நமக்கே தெரியாம எவனோ இந்த வீடியோவை எடுத்திருக்கா.  அவனுக்கு உங்க யாருக்குமே தெரியாத இன்னொரு விஷயமும் தெரிஞ்சிருக்கு... அன்னைக்கு நான் சரூவை ப்ரபோஸ் பண்ணது கூட” காதலை சொன்ன போது வெட்கத்தை பூசியிருந்த சரயூ இன்றும் மனதிலாட முகம் கனிந்து மென்னகை படர்ந்தது.

“அப்றம்...என்னாச்சு மச்சா?” இருக்கும் பிரச்சனையை மறந்து, ஆர்வமாக கேட்க...

“அப்றமென்ன? வழக்கம் போல ஊத்திக்கிச்சு!”

“அச்சச்சோ....ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லியிருந்தா சரயூவை இம்ப்ரெஸ் பண்ண எத்தனை ஐடியா கொடுத்திருப்ப தெரியுமா?”

அவனை திரும்பி பார்த்த ஜெய்யின் கண்களில் ‘யாரு? நீயா?!’ என்ற கேள்வியிருக்க...

“நீ என்ன நினைக்கிறன்னு தெரியுது மச்சா! ஒத்துக்குற...சௌம்யாவை கரெக்ட் பண்ண தெரியாம முழிச்சப்போ சரயூதா ஹெல்ப் செய்தா.  ஆனாலும் காதல்ல, நான், உனக்கு சீனியருங்குறத மறந்துடாத சஞ்சய்!”

“சரிங்க சீனியர் சர்! இப்பவும் என் காதல் ஜெயிக்குறது உங்க கையிலதா இருக்கு... ஜோக்ஸ் அபார்ட், மச்சா...நீதா எனக்கு ஹெல்ப் பண்ணனும்.  யாரிவன்னு தெரியல? எவ்வளவு வருஷமா நம்மளை ஃபாலோ பண்றானு தெரியல? சரயூவை நான் ப்ரபோஸ் செய்தப்போ, அங்க யாரும் இருக்கலை... ஆனா அது கூட இவனுக்கு தெரிஞ்சிருக்கு.  அவனோட மோட்டோ என்னவா இருக்கும்? எதுக்காக என்னோட குரலில் யாரையோ பேசவச்சு இப்படியொரு வீடியோவை தயாரிக்கனும்?”

“எனக்கு புரிஞ்சவரைக்கும் அவனுக்கு உன்னோட காதல் பிடிக்கலை”

“இல்லை மச்சா! அப்படியிருந்திருந்தா ஏன் இந்த வீடியோவை எங்க கல்யாணத்துக்கு முன்னாடி யூஸ் செய்திருக்க கூடாது?” என்று யோசித்தவன், “ஆனா நீ சொன்னது கூட மோட்டாவா இருக்குமோ? இந்த வீடியோ எப்போ சரயூட்ட வந்ததுனு நமக்கு தெரியாதே!”

“மனச போட்டு குழப்பிக்காம, பிரச்சனைய எங்கிட்ட விடு... நான் பார்த்துக்குற! சரயூ வேற ஏதாவது சொன்னாளா மச்சா... இல்லை இந்த வீடியோ மட்டும் காட்டினாளா?”

கிரணின் துரோகத்தையும், சரயூ இவன் மீது சுமத்திய குற்றச்சாட்டையும் சொல்ல... தாவி வந்து நண்பனை அணைத்திருந்தான் ரூபின்.

“சரயூ தப்பிச்சிட்டாளேனு மனசை தேத்திக்கோ மச்சா! அந்த நாயை கொன்னாக்கூட என்னோட ஆத்திரம் தீராது.  ச்சீ....இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்க எப்படிதா முடிஞ்சதோ? இத்தனைக்கும் உண்மையோ...பொய்யோ.... சரயூவை காதலிக்கிறதா வேற சொல்லிட்டு திரிஞ்சான்.  இவனையெல்லா நடுரோட்ல நிறுத்தி கல்லால அடிச்சு கொல்லனும்! இந்த மாதிரி நாய்கிட்டயெல்லா வேறென்ன எதிர்பார்க்க முடியும்?” கோபத்தில் பொரிந்து தள்ளினான் ரூபின்.

நண்பனுக்கு சற்றும் குறையாத கோபத்தோடு, “அவன் கையில கிடச்சா கண்டதுண்டமா வெட்டி போட்டிருப்ப... அவன் செத்து எங்கிட்ட இருந்து தப்பிச்சிட்டா! மச்சா...இந்த விஷயம் வெளிய வந்தா சரூ ஜெயிலுக்கு போக வேண்டியிருக்குமா என்ன? எனக்கு ரொம்ப கவலையா இருக்குடா! முதல்லயே ரொம்ப கஷ்டபட்டுட்டா இன்னும் கோர்ட் கேஸ் ஜெயில்னு அவளை அலையவிட என்னால முடியாது.  என்னடா ஒரு போலிஸ்காரங்கிட்டயே இப்படி பேசுறானேனு நினைக்காத... அவள் என்னோட உயிர்டா...அவளுக்கு ஏதாச்சும்னா நானிந்த உலகத்துலயே இருக்கமாட்டே! அவளோட ஃப்ரெண்டா உனக்கு அவளை பத்தி நல்லாவே தெரியும்.  அந்த தைரியத்துலதா இதையெல்லா உங்கிட்ட சொல்லிட்டிருக்க” என்றவனின் கலக்கத்தில் உருகிய ரூபின்,

“புரியுது மச்சா! அப்படியெல்லா சரயூவை விட்றமாட்டேன்டா... அதுவேற இல்லாம இது அட்டெம்ட் டூ ரேப் என்றதாலா... ஒரு பொண்ணு அவளை தற்காத்துக்க பண்ற கொலைக்கு தண்டனை கிடையாதுடா.  இதுல வேறேதும் சிக்கல் வராம பார்த்துக்கலாம்.  கவலைபடாம போயி சரயூக்கு ஆறுதல் சொல்லு”

“தாங்க்ஸ் மச்சா!” என்று கிளம்பிவிட்டான்.

‘ஜூனியர்ஸ்க்கு ஸ்டடி ஹாலிடேஸ் விட்டிருக்க, அந்த இடத்துல கூட யாருமில்லைனு தெரிஞ்ச பிறகு தானே என்னோட மனசுல இருந்ததை பேசின.  என்னை சமாதான படுத்தினதை இப்படி மாத்தியிருக்காங்க.  ஒரு வேளை யஷ்விதாவோட வேலையா இருக்குமோ? இல்லை அப்படியிருக்குமோ?’ இவனின் கேள்விகளுக்கு பதிலை அறிந்திட, 

“ஒரு நிமிஷம் சஞ்சய்! இந்த வீடியோல சொல்லியிருக்குறத வச்சு பாத்தா, நீ சரயூவை ஒரு பேட் நோட்ல மீட் செய்தியா, என்ன?”

ரூபினின் கேள்வியில் ஜெய்யின் பார்வை, ‘நீயுமா?’ என்ற கேள்வியை தாங்கியிருக்க, மனமோ தன்னை யாருமே நம்பவில்லையா என்ற வேதனையில் துடித்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.