(Reading time: 24 - 48 minutes)

ன்னவளுக்காக முதன்முதலாக வாங்கியிருந்த புடவையில் அவளை கண்டிட ஆவலாக காத்திருந்தான் ஜெய்.

மூடியிருந்த கதவு எப்போது திறக்குமென தவமிருக்க... சரயூவோ ஒரு மணி நேரமாக தயாராகிக் கொண்டிருந்தாள்.

“சரூ! ஏதாவது ஹெல்ப் வேணுமா?”

“இல்லை சஞ்சு! ஐ ம் ஃபைன்”

“ஏதாவது வேணும்னா சொல்லுடா.  நீ உள்ள போயி ரொம்ப நேரமாச்சே... அதான்... உனக்கு புடவை கட்ட வரலைனா விடுடா! நீ வேற சுடிதார் ஏதாச்சும் போட்டுக்க.... அத்தைட்டயே கட்டிக்கலாம்”

“நோ சஞ்சு! நான் ஒன்னும் அவ்ளோ மோசமில்லை.  புடவையெல்லா கட்டியாச்சு... இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துருவ”

“ஒன்னும் அவசரமில்லை! டேக் யுவர் டைம்” என்று சொல்லிவிட்டாலும், காத்திருக்கும் பொறுமையின்றி குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்றான்.

சற்று நேரத்திற்கெல்லாம் கதவு திறக்கும் ஓசையில் திரும்பியவன் ஆவலோடு எட்டிப்பார்க்க...

“எப்படியிருக்கு சஞ்சு? எல்லா சரியா வந்திருக்குல்ல?” என்றபடி தன்னையே குனிந்து பார்த்து கொள்ள...

பதிலேதும் சொல்லாது இவளருகே வந்து, புடவை கொசுவ மடிப்பை சரிசெய்துவிட்டு நிமிர்ந்தவன், “பெர்ஃபெக்ட் சரூ! ரொம்ப நல்லா கட்டியிருக்க” என்று பாராட்ட...

இவளுக்கோ அவன் சரிசெய்துவிட்ட கொசுவ மடிப்பு கவலையாகி போனது. 

‘வீடியோல சொன்னதையெல்லா சரியா செஞ்சனே! நான் கண்ணாடில பார்த்தப்போ கூட நல்லாதானே தெரிஞ்சுது.  எப்படி மிஸ் செயத? பரவாயில்ல... அடுத்த முறை இதை சரி செய்திடனும்’

இவளிடம் பதிலில்லாது போகவும், “என்னடா யோசனை?”

“இல்லை சஞ்சு! நான் பாத்து பாத்துதா கட்டின... இது எப்படியோ மிஸ்ஸாயிடிச்சு போலும்”

இவள் தலையை வருடியவன்...சிறு புன்னகையோடு சென்றுவிட்டான்.

ஹே சரயூ! உனக்கென்ன ஆச்சு? என்ன ஜெய்யோட டூயட்டா?” என்று குறுபாக கேட்டிட

“ப்ரியா! மைதி புடவையை சரியாதானே இருந்தது?”

“ஓ... நீ அந்த ஆராய்ச்சில இருக்கியா? இது ரொம்ப சாதாரணமா நடக்குற விஷயம்தா சரயூ.  நான் என்னதா பார்த்து பார்த்து தயாராயி நின்னாலும் ஆதர்ஷ் குறை சொல்லாம இருந்ததே இல்லை.  முதல்ல நான் கூட நமக்கு புடவை கட்ட தெரியலையோ யோசிச்சிருக்க... ஆனா இது ஆல்மோஸ்ட் எல்லா வீட்லயும் நடக்குறதுனு தெரிஞ்சப்போ ஃப்ரீயா விட்டுட்ட” என்று ப்ரியா விளக்க கொடுக்க....

சரயூ, “அம்மா! உங்களுக்கும் அப்பா இப்படி புடவையை பிடித்து விட்டிருக்காரா?” என்று ஆவலாக கேட்க

“சும்மா... இங்க நின்னு கதை பேசாமா போயி, சாப்பாடு வந்தாச்சானு விசாரி” என்று மகளை விரட்டுவதில் குறியாக இருந்தார் சாரதா.

“அம்மாதா வெட்க பட்றாங்க... நீங்க சொல்லுங்க அத்தை” என்று வடிவை இழுத்து விட்டாள் ப்ரியா.

“சொல்லுமா...” என்று மைத்ரீயும் சேர்ந்துகொள்ள

“ஆமா! அவரும் இப்படி செய்துவிட்டிருக்கார்.  மனைவியை நேசிக்குற எல்லா கணவன்களும் செய்றதுதா.  நாம என்னதா ஒழுங்கா புடவையை நிறுத்தியிருந்தாலும்.... அதுல சின்னதா ஏதாவது ஒரு குறை அவங்களுக்கு தெரிஞ்சிடும்... அதை உடனே சரியும் செய்துவிடுவாங்க.  தன்னோட மனைவி எல்லாரை விட அழகாயிருக்கனும்னு ஒரு நினைப்பிருக்கும்.  அதனாலதா இப்படி எல்லாத்துலையும் பெர்ஃபெக்ஷன் தேடுவாங்க” என்றவர் தொடர்ந்து,

“எங்க காலத்துல இதெல்லா நாலு சுவத்துக்குள்ளதா நடக்கும்.  ஆனா இந்த காலத்து பிள்ளைங்க, யாரை பத்தியும் எதை பத்தியும் யோசிக்கிறதில்லை! அன்பை வெளிப்படையா காட்டுறாங்க”

காலையில் ஜெய்யின் செயலுக்கும் அவன் சிரிப்பிற்குமான காரணம் புரிந்திட சரயூவிற்குள் ஆனந்த அலைகள். 

தன் பிறகு வளையகாப்பு விழா துவங்கவும்... எல்லோரும் மைத்ரீக்கு நலங்கு பூசி, பரிசளித்து வாழ்த்தி செல்ல... சுற்றுபுறத்தை மறந்து மனைவியை மட்டுமே பார்த்திருந்தான் ராகுல்.

என்னதான் வாரிசு வேண்டுமென்று முடிவெடுத்து விட்டாலும் எல்லா கணவர்களுக்கும் பிரசவத்தை குறித்து சிறு அச்சமிருப்பது இயல்புதான்.  அதை யாரிடமும் சொல்லாது மனதினில் மறைத்து வைத்திருப்பர்.

டிலிவெரி தேதி நெருங்க நெருங்க ராகுல் கலவரமடைந்தான்.  தங்கள் குழந்தையை பூமிக்கு அறிமுக படுத்த, உட்ச பட்ச வலியை மனைவி சந்திக்க வேண்டுமே... அவள் தாங்குவாளா?! எத்தனை தைரியம் சொல்லி தன்னை தானே தேற்றி கொண்ட போதும் மனதிலிருக்கும் பயம் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்ததே அன்றி குறையவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.