(Reading time: 24 - 48 minutes)

ஒரு காவல்துறை அதிகாரியாக ரூபின் தன்னை சந்தேகப்படுகிறான் என்பது புரிந்தாலும் நண்பனாக அவனுடைய கேள்வி ஜெய்யை இடித்து தள்ளியிருந்தது. 

காதல் நட்பென இரண்டிலும் அவன் தோற்றுப் போனதாய் ஒரு எண்ணமெழுவதை தவிர்க்க முடியவில்லை.

சரயூவால் பாதிக்கபட்டது ஜெய்யாக இருக்கும் பட்சத்தில் அந்த காணொலியில் சொல்லியிருப்பது போல இவன் செய்திருக்க வாய்பிருக்கிறதே! எல்லாவற்றிற்கும் மேலாக நண்பனை கைக்குள் போட்டு கொண்டு தன் மீது சந்தேகம் எழாதாவாறு காய்களை நகர்த்தியிருக்கலாமே!

இதெயெல்லாம் யோசித்துதான் ஜெய்யை ஆழம் பார்க்க அந்த கேள்வியை கேட்டிருந்தான் ரூபின்.

வீடியோவை காண்பித்தவளோ ஜெய் தன்னிடம் இது குறித்து பேசுவான்....ஏதாவது விளக்கம் கொடுப்பான் என்று எதிர்பார்த்து ஏங்கி போனாள்.  என்னதான் அந்த வீடியோவை நம்பினாலும், காதல் மனமோ ஜெய்யின் காதலின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தது.  இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என பலவாறு அந்த சம்பவத்திற்கும் வீடியோவிற்கும் கணவனுக்கும் சம்மந்தம் இருக்காதென்று கற்பனைகளை செய்துவைத்து அவன் விளக்கத்திற்காக காத்திருந்தது. 

ஆனால் அவனோ அதைப் பற்றிய நினைப்பே இல்லாதது போல் நடந்து கொண்டான்.  சரயூவின் மாற்றத்திற்கான காரணம் தெரிந்த போதிலிருந்து ஜெய்யின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டிருந்ததுன. 

எப்போதும் சரயூவோடு நேரம் கழிப்பான்தான்.... இப்போதோ வேலைக்கு செல்லும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அவளுடனேயே இருக்கும்படி பார்த்துகொண்டான்.  இரவுகளிலும் அவளை விட்டு பிரியாது தன் கையணைப்பிலேயே வைத்து பாதுகாத்தான்.

சில நாட்களாக அவன் தொழில் சம்மந்தமான சில ஃபைல்களை கொடுத்து சரயூவை சரிபார்க்க சொன்னான். 

“கொஞ்ச கொஞ்சமா கத்துக்கோ சரூ... அப்போதா நாளைக்கு நீ ஆஃபிஸ்கு வரும்போது எல்லாத்தையும் ஈஸியா ஹேண்டல் பண்ணமுடியும்” அவன் என்னவோ சாதரணமாகதான் சொல்லியிருந்தான்.

இவளுக்குதான் பல கேள்விகள் தோன்றி மனதை குழப்பியது.  வீடியோவைப் பற்றி அவன் பேசவில்லை என்றாலும், அன்று கிரணால் வந்த பேராபத்தின் போது இவனுக்கு அழைத்தாளே....அவளிருந்த இடத்தை இவனுக்கு தெரியபடுத்தினாளே... கணவனின் காதல் உண்மையென்ற பட்சத்தில் அவளை காக்க வந்திருக்க வேண்டுமே! ஏன் வரவில்லை? என்றால் தன்னை மீண்டும் ஏமாற்றுகிறானா?

இவளை தனியாக விடாது அவனுடனேயே வைத்துகொள்வது...அவன் வீட்டில் இல்லாத நேரங்களில் இவள் யோசிக்க கூடாதென்பற்காகவே தொழில் சம்மந்தபட்ட கோப்புகளை பார்க்க வைத்தானோ? 

கணவனின் கைவளைவில் தூக்கமின்றி மனம் சஞ்சலத்தில் உழல....அவனிடமிருந்து வந்த மெல்லிய முணகலில் கவனம் திரும்பியது. 

தூக்கத்தில் உளறுவான் போலும் என்று நினைத்து அசட்டை செய்து படுத்திருக்க...மறுபடியும் முணுமுணுத்தவனின் பிடி இறுகியது.

‘இன்னைக்கு என்னாச்சு இவனுக்கு?’ அவன் கையை விலக்க முயற்சிக்க... ஜெய்யின் பிடி மீண்டும் இறுகியது.

வலியில் இவள் அவனை பிரிக்க முயல, இவளை தன்னோடு சேர்த்தணைத்து, “உனக்கு ஒன்னுமில்ல சரூ...பயப்படாதடா...நானிருக்க வரைக்கும் உங்கிட்ட கூட, அந்த கிரணை வரவிடமாட்ட”

அவன் வார்த்தைகள் இவள் மனதில் நங்கூரமாய் இறங்க, குழம்பிக்கொண்டிருந்த மனதின் ஆட்டம் அடியோடு மறைந்து போனது.

அந்த நொடி அவன் அன்பின் பாய்ச்சலில் நனைந்து கொண்டிருந்த நங்கையினுள் அத்தனையாய் உயிர்ப்பு பெற்று வளர்கிறது காதல் கொடி.

“ப்ளீஸ் சரூ! என்னை நம்புடா...” அவன் கெஞ்சிட இவள் மொத்தமும் உருகுகிறது.  தானாக கை கணவனின் நெஞ்சை தடவிட, “எனக்கு ஒன்னுமில்லை சஞ்சு...நீ தூங்கு” என்றது தான் தாமதம் என்பதாக அவன் முகத்தில் நிம்மதி நீர்வீழ்ச்சி.  அமைதியாய் தூக்கத்தை தொடர்ந்தான்.

சொல்லுடா மச்சா!”

“..........”

“என்ன சொல்ற ரூபின்?! நம்பவே முடியல!”

“...........”

“உன்னோட கஸ்டடியிலா?”

“.........”

“இது சரியா வருமா?” தயங்க

“...........”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.