(Reading time: 24 - 48 minutes)

“சரி மச்சா! நீ சொல்ற மாதிரியே செய்லா” முழுமனதோடு சம்மதிக்கவில்லை தான்... ஆனாலும் நண்பன் சொன்னது போல் இது அவசியமே என்று தன்னை தானே சமாதான படுத்திக்கொண்டான் ஜெய்.

ஹே பொண்டாட்டி என்ன தேடிக்கிட்டிருக்க?” சரயூவிற்கு பின்னாலிருந்து எட்டிப்பார்த்தான்.

“நாளைக்கு மைதி சீமந்தமில்ல...அதான் எந்த புடவை கட்டலாம்னு” பதில் சொன்னாலும் கணவனை திரும்பிக் கூட பார்க்காது அலமாரியிலேயே கண்கள் பதிந்திருந்தன.

இவர்களின் திருமணத்தன்று மட்டுமே அவளை புடவையில் பார்த்திருந்தவனுக்கு அதற்கு பின் அவளை சேலையில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை.  அப்படியிருக்கையில் சரயூ சொன்னதை நம்பமுடியாதவனாய்

“என்னது புடவையா?” ஆச்சரியமாக கேட்டிட

“ம்...அம்மாவோட ஆர்டர்...மீறினா சரியா திட்டு வாங்க வேண்டியிருக்கும்.  ஸோ...” என்று சுரத்தே இல்லாது பதில் வரவும்

அவளை புடவையில் காணும் ஆசை மலையளவு இருந்தபோதும் அவளுக்கு பிடிக்காததை திணிக்க விரும்பாது,

“உனக்கு பிடிக்கலைனா விடு சரூ...அத்தைட்ட நான் சொல்ற”

“நோ சஞ்சு..அப்படியெல்லா விடமுடியாது! அம்மா எனக்கு புடவை கட்டவராதுனு வேற... நேரத்தோட புடவையை எடுத்துட்டு வந்து சேரு...உனக்கு கட்டிவிட்றதுக்கே இரண்டு மணிநேரம் போயிரும்.  அதுக்கு பிறகுதா மைத்ரீயை ரெடி பண்ணனும்னு ஒரே புலம்பல்.  அதான் யூட்யூப் அலசியெடுத்து புடவை கட்டுறதுக்கு ரெண்டு நாளா ப்ராக்டீஸ் பண்ணியிருக்க சஞ்சு!” பெருமையாக சொல்லிவிட்டு

“நான் புடவையில் போயி அம்மாக்கு ஒரு ஷாக் கொடுக்கலாம்னு நினைச்சிருக்க... ஆனா எதை கட்றதுனுதா தெரியலை...நீ கொஞ்ச ஹெல்ப் செய்றியா?”

“செலெக்ஷன் என்ன? புடவையே வேணாலும் கட்டிவிட்ற சரூ” குறும்பாக சொல்லிட...அதை அறியாதவளோ,

“புடவை கட்றதெல்லா நானே பாத்துக்குவ சஞ்சு...இந்த செலெக்ஷன்தா கஷ்டமாயிருக்கு” என்று படு சீரியசாய் பதில் சொல்லிவிட்டு மறுபடியும் தலையை அலமாரிக்குள் நுழைத்திருந்தாள்.

இவன் ஏதும் சொல்லுவான் என்று நினைத்து திரும்பி பார்க்க அவனை காணவில்லை.

‘ஒரு புடவை செலெக்ட் செய்றதென்ன அவ்ளோ பெரிய வேலையா? இப்படி தப்பிச்சு போயிட்டா?’

“சரூ... இதை பிடிச்சிருக்கானு பாரேன்!” என்று மயில் பச்சை வண்ண பட்டை ஜெய் ஆசையாக அவளிடம் நீட்டிட...

அவனிடமிருந்து அவசரமாக பிடுங்கி அதை பிரித்து பார்த்தவள், “வாவ் சஞ்சு! இது ரொம்ப நல்லாயிருக்கு” என்றபடி தன்மீது வைத்து பார்த்து கண்ணாடியில் அழகு பார்க்க அவன் மனம் குளிர்ந்து போனது.

இவர்களின் திருமணத்தின் போதுதான் அவளுக்கென்று ஆசையாக வாங்கியிருந்தான் அந்த பட்டை.  கல்யாணப் பரிசாக கொடுக்க காத்திருந்தவனுக்கு கிடைத்த ஏமாற்றங்களில் அது இவனிடமே தங்கிவிட்டிருந்தது.  சரயூவே புடவையை பற்றி பேசவும், அவளிடம் கொடுத்திருந்தான்.

தன்னவளின் நிறத்திற்கு சேலை எடுப்பாக இருக்குமென அதை தேர்ந்தெடுத்திருந்தாலும் அவளுக்கு பிடிக்குமோ என்னவோ... என்ற கேள்வியாக இருந்தவனுக்கு... சரயூவின் இந்த செயல் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அவளுக்கு பின்னால் நின்றுகொண்டு கண்ணாடியில் அவளை பார்த்து, “அழகாயிருக்கு சரூ!” என்று காதலொழுக சொல்லிட...

“தாங்க் யூ சஞ்சு! எனக்கிதை ரொம்பவும் பிடிச்சிருக்கு.  நாளைக்கு இதையே கட்டிக்குறே” என்றவளிடத்தில் ஒரு பெட்டியை கொடுத்தான்.

அதிலிருந்த வைர நெக்லெசும் அதற்கேற்றார் போன்றிருந்த தோட்டையும் பார்த்தவள், “சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் கொடுத்து அசத்துற! என்ன விஷயம் சஞ்சு?”

அவளுடைய முகமே நகையும் அவளுக்கு பிடித்திருப்பதை சொல்லிட, “இதுவரைக்கும் பெரிசா எதுவுமில்லை... ஆனா நீ மனசு வச்சா இந்த நாளை விசேஷமா மாத்தலாம்”

“விசேஷமாவா? எப்படி சஞ்சு?” அதெப்படி முடியுமென்பது அவளுக்கு.

“நான் செலெக்ட் செய்த புடவை நகையெல்லாம் பிடிச்சிருக்குல்ல... அதனால...” என்று இழுத்தவனை கேள்வியாக பார்த்திட

“இன்னைக்கு ஒரு முத்தம் கிடைச்சா நான் ஸ்பெஷலா ஃபீல் பண்ணுவே” என்று குறும்பு மின்ன புன்னகைத்தவனை பார்க்க முடியாது வெட்கத்தில் தலை தாழ்ந்தது.

முகம் சிவக்க நின்றிருந்தவளை பார்க்க பார்க்க போதவில்லை அவனுக்கு.  அவளையும், அவனுக்கான அவள் வெட்கத்தையும் ரசித்து கொண்டிருந்தான்.

முத்தம் கொடுப்பான் என்று நினைத்து நின்றிருந்தவள்... அப்படியேதும் நடக்காது போகவும்... கேள்வியாக அவனை பார்த்திட...

“கிஃப்டை நான் கொடுத்திட்ட... நான் கேட்டதை நீதான் கொடுக்கனும் சரூ” என்று சொன்னதுதான் தாமதம் என்பது போல் அங்கிருந்து ஓடிவிட்டாள் சரயூ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.