(Reading time: 15 - 30 minutes)

வர்கள் சென்றதும் அடுத்து அவன் தன் அன்னையை பார்க்க ஐ.சி.யூக்கு சென்றான். அவன் அங்கே செல்லவும், உள்ளிருந்து மருத்துவர் வெளியே வரவும் சரியாக இருந்தது.

“ஹலோ டாக்டர்.. ஐ அம் சார்லஸ் அமுதவாணன்.. உள்ள இருக்க பேஷண்ட் ஆனந்தி என்னோட அம்மா.. நாங்க நேத்து தான் லண்டன்ல இருந்து வந்தோம்.. அவங்க இப்போ எப்படி இருக்காங்க..”  என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் தன் அன்னையை பற்றி மருத்துவரிடம் கேட்டான்.

“ஓ நைஸ்.. இப்போ அவங்க நல்லா இருக்காங்க.. கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிடும்.. ஆனா அவங்களுக்கு இருக்க ப்ராப்ளம் உங்களுக்கு தெரியுமா?”

“யெஸ் டாக்டர் தெரியும்.. இப்போ அவங்களுக்கு ப்ரெயின் ட்யூமர்.. அவங்களுக்கும் அது தெரியும்.. அது தெரிஞ்சதுல இருந்து இந்தியாக்கு வந்துடம்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.. அதான் இங்கேயே அவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்..”

“ஓ அப்படியா.. எந்த டாக்டர் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டீங்களா? ஏன்னா இங்கேயே அதுக்கான ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்க.. ஸ்கேன் ரிப்போர்ட் இப்போ தான் பார்த்தோம்.. நீங்க சொன்னீங்கன்னா ஸ்பெஷலிஸ்ட்டை வர வச்சிடுவோம்..”

“ஓகே டாக்டர்.. நான் இந்த நோய்க்கான இந்தியால இருக்க ஸ்பெஷலிஸ்ட் பத்தி இன்டர்னெட்ல பார்க்கும்போதே உங்க ஹாஸ்பிட்டல் நேம் பார்த்தேன்.. இப்போ எப்படி அம்மாவை இங்க அட்மிட் செஞ்சு தான் ட்ரீட்மென்ட் கொடுக்கணுமா?

“அது டாக்டர்ஸ் பார்த்துட்டு சொல்வாங்க.. இப்போ போய் நீங்க உங்க அம்மாவை பாருங்க..” என்று மருத்துவர் அனுப்பி வைத்தார்.

அமுதன் உள்ளே நுழையும் போது ஆனந்தி கண் விழித்திருந்தார். அவனை பார்த்து புன்னகை புரிய முயற்சி செய்தார்.

“என்னம்மா.. வீட்ல இருங்க, வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் வாங்கிட்டு கொஞ்ச நேரத்துல வந்துட்றேன்ன்னு சொல்லிட்டு போனா.. அதுக்குள்ள ஏம்மா வெளியப் போனீங்க..”

“இங்க வந்ததும் கதிர்கிட்ட பேசணும்னு நேத்துல இருந்து சொல்லிக்கிட்டு இருந்தேன்.. நீ என்னடான்னா இன்னும் சிம் கூட வாங்கி கொடுக்கல.. நீ பாட்டுக்கு தனியா விட்டுட்டு போயிட்ட.. சரி கதிரை நேர்ல போய் பார்த்துட்டு வரலாம்னு தான் கிளம்பி போனேன்.. இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல அமுதா..”

“உங்க ஹெல்த் இருக்க நிலைமைக்கு உடனே கதிர் அங்கிளை பார்த்தாகணுமா? நான் தான் ஈவ்னிங் வரும்போது கண்டிப்பா சிம் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு போனேனே..”

“சரி விடு அமுதா.. இப்படி ஆகும்னு எதிர் பார்க்கல, ஆமாம் நான் எப்படி ஹாஸ்பிட்டல் வந்தேன்..”

“மயக்கம் போடும் முன்னே தமிழ் டிபார்ட்மென்ட் போக வழி கேட்டிங்களே ஒரு பொண்ணு.. அவ தான் உங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்து சேர்த்தா..”

“என்னடா அமுதா இது.. உன்னோட சின்ன பொண்ணா இருந்தாலும் முதலில் பார்க்கிற பொண்ணை இப்படித்தான் அவ இவன்னு சொல்வியா?”

“சாரிம்மா..”

“தேவையில்லாம அந்த பொண்ணுக்கு கஷ்டத்தை கொடுத்திட்டேன்.. யாருக்கோ என்னன்னு போகாம ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணியிருக்கா பாரேன்.. எனக்கு அந்த பொண்ணை பார்த்தஉடனேயே பிடிச்சிடுச்சு.. ஆமாம் அந்த பொண்ணை நீ பார்த்தீயா? பேர் என்னன்னு கேட்டியா? தேங்க்ஸ் சொன்னியா? அவ இருக்காளா? போயிட்டாளா?

“அம்மா அந்த பொண்ணு பேர் அருள்மொழி.. உன்னை அவ சாரி அவங்க தான் ஹாட்பிட்டலில் சேர்த்திருக்காங்கன்னு சொன்னதுமே தேங்க்ஸ் சொல்லிட்டேன்.. எனக்கு உடனே தகவல் சொல்ல முடியாததால, அவங்களை பணம் கட்ட சொன்னாங்க போல.. கையில் பணம் இல்லன்னு யாரோ ரிலேஷன் பணத்தோட வந்தாங்க.. நான் வந்துடவே டைம் ஆகுது வேலை இருக்குன்னு அருள்மொழியை கூட்டிட்டு போயிட்டாங்கம்மா..’

“ஓ அப்படியா.. எனக்கு அருள்மொழியை நேர்ல பார்த்து தேங்க்ஸ் சொல்லணும் அமுதா.. அருள்மொழி பத்தி உனக்கு எதுவும் தகவல் தெரியுமா? எனக்கு உடனே அவக்கிட்ட பேசணும், அப்புறம் பார்க்கணும்..”

அவனுக்கும் தான் திரும்ப அவளை பார்க்க வேண்டும் போல் இருந்தது. வாழ்நாள் முழுதும் கூட இருந்திருக்க வேண்டியவளை இப்போது இன்னொரு முறை பார்க்க முடியாதா? என்று ஏங்கும் அளவுக்கு நிலைமையை கொண்டு வந்த தன் முட்டாள்தனத்தை நினைத்து பெருமூச்சு விட்டான்.

“தெரியலம்மா.. நான் எதுவும் அவங்கக்கிட்ட கேக்கல.. ஹாஸ்பிட்டலில் ஏதாச்சும் தகவல் கொடுத்திருக்காங்களன்னு அப்புறம் கேட்டு சொல்றேன்.. இப்போ கொஞ்சம் அமைதியா படுங்க.. இங்கேயே உங்களுக்கு ட்ரீட்மென்ட் பார்க்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.. இப்போ கொஞ்ச நேரத்துல டாக்டர்ஸ் வந்துடுவாங்க..” என்று அவரை படுக்க வைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.