(Reading time: 15 - 30 minutes)

“ஆன்ட்டி நீங்களா? நான் உங்க பையன்னு நினைச்சிட்டேன்..”

“என்னோட பையன் நம்பர் உனக்கு தெரியுமாம்மா” சகஜமாக பேசியதை வைத்து கேட்டார்.

“உங்களை அட்மிட் பண்ணிட்டு உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு காண்டாக்ட் பண்ண உங்க மொபைல் எடுத்தப்ப தான் இந்த நம்பர் எனக்கு தெரியும் ஆன்ட்டி..”

“ஓ சரிம்மா.. இப்போ உனக்கு தேங்க்ஸ் சொல்லத்தான் போன் பண்ணேன்ம்மா.. அன்னைக்கு நீ மட்டும் இல்லன்னா என்னோட நிலைமை ரொம்ப கஷ்டமாயிருக்கும் ரொம்ப தேங்க்ஸ்..”

“என்ன ஆன்ட்டி.. இதுக்காக தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு.. அந்த நேரம் நான் அங்க இல்லன்னாலும் வேற யாராச்சும் ஹெல்ப் செஞ்சிருக்க தான் போறாங்க.. ஆனா உங்க உடல்நிலை இப்படி இருக்க நேரத்துல நீங்க தனியா ட்ராவல் செய்யலாமா ஆன்ட்டி.. “

ஒவ்வொரு முறையும் அருள்மொழி ஆன்ட்டி என்று அழைத்ததில் அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “லண்டன்ல இருந்து கூட்டிட்டு வந்து தனியா விட்டுட்டு வெளியே போயிட்டான்ம்மா.. எனக்கு சென்னை புதுசு.. இங்க எனக்கு தெரிஞ்சது ஒரே ப்ரண்ட் தான்.. அவனோட வீடு கூட எனக்கு சரியா தெரியாது.. இன்னும் இந்தியா நம்பர்க்கு ஒரு சிம் கூட வாங்கி தரல இவன்.. அதான் அவனை நேர்ல பார்த்துட்டு வரலாம்னு போனேன்.. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு..”

அவர் சொன்னதை வைத்து பார்த்தால், ஆனந்தி ஆன்ட்டி கதிர் சித்தப்பாவை பார்க்க தான் அங்கே வந்திருக்க வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டாள். ஆனால் இவர்கள் இங்கே வந்தது அவருக்கு எப்படி தெரியாமல் போனது என்பது தான் புரியவில்லை.

“இருந்தாலும் இது வெயில் டைம் ஆன்ட்டி.. தேவையில்லாம வெளிய அலையாதீங்க.. வீட்ல நல்லா ரெஸ்ட் எடுங்க..”

“சரிம்மா நான் இனி கவனமா இருக்கேன்.. எனக்கு  உன்னை நேர்ல பார்க்கணும் போல இருக்கும்மா.. என்னை பார்க்க வர்றியா?” எதிர்பார்ப்போடு கேட்ட போது மறுக்க முடியவில்லை. அதேசமயம் அமுதவாணனை திரும்ப பார்க்க நேரிடுமே என்றும் நினைத்தாள். ஆனாலும் இல்லை என்று அவள் வாய் சொல்லவில்லை.

“ஹாஸ்பிட்டல் தானே ஆன்ட்டி கண்டிப்பா பார்க்க வரேன்..”

“இல்லம்மா டாக்டர் இப்போ வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாரு.. நீ வீட்டுக்கு வந்து பார்க்கிறியாம்மா..” என்றவர், “இரு வீட்டு அட்ரஸ் எனக்கு தெரியாது.. அமுதா கிட்ட கொடுக்கிறேன் பேசிக்கோ..” என்று அவனிடம் கொடுத்துவிட்டார். அவன் அலைபேசியை வாங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேச் சென்று பேசினான்.

“ஹலோ அருள்..”

“அம்மாவோட ட்ரீட்மென்ட்க்கு தான் இங்க வந்திருக்கீங்களா?”

“ஆமாம்.. அம்மாக்கு இந்த ட்ரீட்மென்ட்ல பிழைப்போமா இல்லையான்னு பயம்.. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அது இந்தியால நடக்கணும்னு சொல்லிட்டாங்க.. அதான் இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்..

“அதெல்லாம் ஒன்னும் ஆகிடாது.. ஆமாம் ஆன்ட்டி வந்தது சித்தப்பாக்கு தெரியாதா?”

“சித்தப்பான்னா கதிர் அங்கிள் தானே.. இன்னும் அவர்க்கிட்ட பேச தயக்கமா இருக்கு.. அவர் இன்னும் அந்த விஷயத்துல என் மேல கோபமா இருக்கார்..”

“இங்கப்பாருங்க அதைப்பத்தி நான் பேச விரும்பல.. இப்போ ஆன்ட்டி என்னை வீட்டுக்கு வரச் சொல்றாங்க.. என்னால அங்கல்லாம் வர முடியாது..”

“ப்ளீஸ் அருள்.. என்னன்னு தெரியல அம்மா உன்கிட்ட ப்ரண்ட்லியா பேசறாங்க.. இந்த நேரம் அவங்களை வந்து பார்த்தா அவங்களுக்கு அது சந்தோஷமா இருக்கும். அவங்க ஹெல்த்க்கும் நல்லது.. நீ தனியா வர மாட்டேன்னு தெரியும்.. ஆனா ஒருமுறை அம்மாக்காக வந்தா சந்தோஷப்படுவேன்..”

“ஒருமுறையா..??  இதேபோல ஒருமுறை நான் தனியா வந்து பட்ட அவஸ்தையெல்லாம் போதாதா.. எந்த தைரியத்துல என்கிட்ட திரும்ப அப்படி கேக்கறீங்க.. வர முடியாதுன்னு சொல்ல தான் எனக்கு ஆசை.. ஆனா ஆன்ட்டிக்காக வரேன். அதுவும் தனியா இல்ல.. ஆமாம் உங்க வீடு எங்க?”

“இங்க  போருர்ல லண்டன்ல செட்டில் ஆன ப்ரண்டோட வீட்ல தான் ஸ்டே பண்ணியிருக்கோம்.. நான் அட்ரஸ் உனக்கு செண்ட் பண்றேன்..”

“ம்ம் ஓகே..” நான் நாளைக்கு வரேன்னு ஆன்ட்டிக்கிட்ட சொல்லுங்க..” என்றவள் அலைபேசி அழைப்பை துண்டித்தாள்.

அவளிடம் பேசியது அவன் மனதிற்கு இதமாக இருந்தது. தன் அன்னையை இங்கே அழைத்து வந்த நேரத்தில் சுடரொளியிடம் பேசி சமாதானப்படுத்தி அன்னையை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான். இந்த நேரத்தில் அவள் தன் அன்னையோடு அதிக நேரம் செலவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் சுடரோ அவனுக்கு பேச கூட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. இப்போதைக்கு அருள் வருகிறேன் என்று சொன்னதில் மகிழ்ச்சியடைந்தான். ஆனால் அவளது கோபம் தான் அவனை என்னவோ செய்தது. அருள் தன்னை மனப்பூர்வமாக மன்னிப்பாளா? என்று ஏங்கினான்.

உறவு வளரும்...

Episode # 11

Episode # 13

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.