(Reading time: 18 - 35 minutes)

20. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

unakkaga mannil vanthen

றையில் விஷ்ணுவைக் காணவில்லை என்றவுடன் தவித்து போனால் அனு. வெளியே உள்ளே எனத் தேடியவளின் கண்களின் விஷ்ணு தென்படவில்லை. அவன் அலை பேசியும் அருகில் இருந்த மேஜை மேல் இருந்தது. தன்னை விட்டு நிரந்தரமாகச் சென்றுவிட்டான் என்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் உடைந்து அழத் தொடங்கினாள்.

அதே சமயம், விஷ்ணு கண்களில் ஓடி வந்த அனுவின் உருவம் மறைந்து, எதிரில் அமர்ந்து இருக்கும் எமனின் உருவம் தெரிந்தது.

என்ன நடக்கிறது என்று விஷ்ணுவிற்கு ஒன்றும் புரியவில்லை. அனுவின் குறளை கேட்டான், அவள் வந்து கதவை திறந்ததைப் பார்த்தான், ஆனால் அடுத்த நொடி எம லோகத்தில் இருந்தான்.

அங்கே இருந்த அமைதியைக் களைத்தது எமனின் பேச்சு.

“என்ன குப்தா ஜி, எங்கேயே பார்த்த முகம் போல் இருக்கிறது” என்று விஷ்ணுவை சுட்டிக் காட்டி கூறினார் எமன்.

“தர்ம ராஜாவே, ஸார் தான் விஷ்ணு. 90 நாட்களுக்கு முன் உங்களுடன் சவால் விட்டு பூலோகம் சென்றவர்” என்று விஷ்ணுவை வாருவது போலவே பேசினார் சித்ர குப்தர்.

“ஓ ஆமாம் ஆமாம், அந்தப் பெண்ணை காதலிக்க வைப்பேன், இங்கே திரும்பி வர மாட்டேன் என்று கூறி விட்டுச் சென்றானே, பின்னே ஏது இவ்வளவு தூரம்” என்று தெரியாதது போலவே கேட்டார் எமன்.

“பிரபு, இன்றோடு 90 நாள் கெடு முடிவடைந்தது. அதுதான் தூக்கி விட்டோம்” என்று பதில் அளித்தார் சித்ர குப்தர்.

“சபாஷ் குப்தா கவ்டிங்கில க்ஹன் மாதிரி இருக்கிங்களே” என்று குப்தரை புகழ்ந்தார் எமன்.

அப்போதுதான் விஷ்ணுவிற்கு எல்லாம் புரிந்தது. எமனிடம் போட்ட சவாலின் கடைசி நாள் இன்று. அணுவுடன் இருந்ததால் அதை முற்றிலும் மறந்து போயிருந்தான் விஷ்ணு. இன்று சவாலில் தோற்றதால் இங்கு நின்று கொண்டு இருக்கிறான். அவன் தன் தலையைக் குனிந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் நின்று கொண்டிருந்தான், அதற்கு அவமானம் மட்டும் காரணம் அல்ல, அனுவை விட்டுப் பிரிந்து வந்ததும் தான். அவளின் முகம், இந்த 90 நாள் அவளுடன் பழகிய பழக்கம் என அனைத்து சந்தோஷமானா நிகழ்வுகளும் அவன் மனதில் ரணமாய் மாறி முள்ளாய் குத்தியது.

“என்ன பா விஷ்ணு, 90 நாட்களுக்கு முன்னர் நீ இங்கு வந்த போது நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தாய். இப்போது என்ன பேச்சையே காணவில்லை” என்று விஷ்ணுவை உசுப்பேற்றினார் சித்ர குப்தர்.

பதில் பேசும் நிலைமையில் விஷ்ணு இல்லை.

“விஷ்ணு, நீ கேட்டுக் கொண்டது போல் இந்த 90 நாள் நாங்கள் யாரும் உன் வாழ்க்கையில் குறுக்கிடவில்லை. உன் வாழ்க்கை உன் கையில் தான் இருந்தது. ஆனாலும் நீ இங்கு வந்து நிற்கிறாய். இதில் இருந்து உனக்கு என்ன தெரிகிறது” என்றார் எமன்.

மறுபடியும் விஷ்ணு மௌனத்தையே பதிலாய் தந்தான்.

“கேட்கிறேன் பதில் கூறாமல் நிற்கிறாய்” என்ற எமனின் கூறலில் அந்த இடமே அதிர்ந்தது. அதைக் கேட்டு அனைவரும் நடுங்கிப் போயினர், விஷ்ணுவும் தான்.

“என்ன மன்னிச்சிடுங்க. நான் பேசினது எல்லாம் தப்புதான்” என்று மட்டும் கூறிவிட்டு மீண்டும் தலையை குனிந்து கொண்டான் விஷ்ணு.

“மன்னிப்பா, ஹ ஹ ஹ. போன முறையே கூறினேன், நீ தோற்று வந்தால் அதற்கான தண்டனை கடுமையாக இருக்கும். இப்போது உனக்குத் தர போகும் தண்டனை, கடவுள்களைத் திட்டும் அனைத்து மனிதர்களுக்குப் பாடமாகவும், பயத்தை ஊட்டும் விதமாகவும் இருக்கும்” என்று கூறிவிட்டு, சித்ர குப்தரை பார்த்து, “ குப்தா ஜீ, இவனுக்காகவே நாம் ஸ்பெஷலா ஒரு தண்டனை ரெடி செஞ்சி வெச்சோமே, அந்த பைலை ஓபன் பண்ணுங்க. இவன் வெச்சி செஞ்சிறலாம்” என்று சித்ரகுப்தரை பார்த்துக் கூறினார் எமன்.

சித்ர குப்தரின் முகத்தில் ஆயிரம் விளக்கு பிரகாசமாக எரிந்தது. போன முறை விஷ்ணு பேசிய பேச்சுக்காகவே அவன் விஷயத்தில் கூடுதல் அக்கரை எடுத்துக் கொண்டு அவன் நாட்களைச் சரியாக எண்ணி, அவனுக்காகவே பார்த்து பார்த்து இந்தத் தண்டனையை ரெடி செய்து வைத்திருந்தார் சித்ர குப்தர்.

“கடைசியாக நடந்த சம்பவங்களை பார்க்கும் போது நான் பயந்தே போய்விட்டேன் பிரபு. எங்கே இந்தத் தண்டனை வினாகப் போய்விடுமோ என்று” என்று கூறிக் கொண்டே தன் கணினியில் பைலை ஓப்பன் செய்து கொண்டிருந்தார் சித்ர குப்தர்.

“என்ன குப்தா, இத்தன வருஷம் எக்ஸ்பிரியன்ஸ்ல இவன் மாதிரி எத்தனைப் பேர பார்த்திருக்கிறோம். 26 வருஷம் சாதிக்காததையா இந்த 90 நாளில் சாதிச்சிட போறான். எனக்கு அன்றைக்கே தெரியும். போனா போகிறது என்று தான் இவனைப் பூமிக்கு அனுப்பினேன்” என்றார் எமன்.

தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்று விஷ்ணுவிற்குத் தெரியும். ஆனாலும் பேசும் நிலைமையில் அவன் இல்லை. கடைசியாக அவன் மறையும் போது அவன் காதில் விழுந்த அனுவின் குறள் நிஜமா அல்லது பிரமையா என்று தான் அவன் சிந்தனை. உன்மை என்றால் அவள் எதற்கு அங்கு வந்தால் என்பதெல்லாம் அவனுக்குக் குழப்பமாகவே இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.