(Reading time: 18 - 35 minutes)

“ஹ ஹ ஹ, எஸ் மிஸ்டர் குப்தா.இந்த விஷ்ணுவை வைத்து, அவனைப் போல் எந்த முயற்சியும் செய்யாமல் நம்மைத் திட்டும் அனைவருக்கும் ஒரு பாடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆதற்காகத்தான் இந்த நாடகத்தை நிகழ்த்தினேன்” என்றார் எமன்.

“சரிதான் பிரபு, நன்றாக செய்திற்கள். விட முயற்சி விஷ்வ ரூப வெற்றி என்று எத்தனைச் சான்றோர்கள் கூறினாலும் சிலர் அதை கேட்பதே இல்லை.” என்றார் குப்தா.

“ஆம் குப்தா ஜீ, அதை அனைவருக்கும் எடுத்துக் கூறவே இந்த நாடகம். நௌ தே வில் அன்டர்ஸேண்ட” என்றார் எமன்.

“ஆனால் பிரபு, இவன் வாழ்வில் நடந்ததுதான் யாருக்குமே தெரியாதே பின்பு எப்படி” என்றார் குப்தா.

அதற்கு எமன் கையை அசைத்தார், அவர் கையில் முத்து குமரன் எழுதிய “உனக்காக மண்ணில் வந்தேன்” புத்தகம் இருந்தது. “இது விஷ்ணுவின் வாழ்க்கையை வைத்து நான் எழுத வைத்த புத்தகம்” என்று சித்ர குப்தரிடம் கொடுக்க, அதை வாங்கியவுடனே அதன் முழுக் கதையும் அவருக்குப் புரிந்தது.

“பிரபு யு ஆர் கிரேட்” என்று குப்தா பாராட்ட, “ஐ நோ” என்று பதிலளித்தார் எமன், தன் கையை அசைத்தார். மீண்டும் நேரம் சுழல ஆரம்பித்தது. உரைந்து போயிருந்தவர்கள் அனைவரும் மீண்டும் பழைய நிலைக்கு வந்தனர். அவர்களுக்கு இப்போது நடந்த எதுவும் தெரியாது.

மேளம் தாலம் முழங்க, அனைவரும் அச்சதை துவ அனுவின் கழுத்தில் தாளிக் கட்டினான் விஷ்ணு.

சிறிது நேரத்தில், சடங்கு சம்பிரதாயம் முடியவும், ஒரு சிலர் மேடைக்கு வந்து பரிசுகளுடன் மன மக்களுக்கு வாழ்த்துக் கூறினர்.

விஷ்ணுவின்  கடைசி நிமிட அழைப்பை ஏற்று, விஷ்ணுவின் எம்டி கதிரவனும், வித்யா மற்றும் சில சக தெழிலார்களும் திருமணத்திற்கு வாழ்த்த வந்திருந்தனர். மன மேடை சென்ற கதிரவனை அனுவிற்கு அறிமுகம் செய்து வைத்தான் விஷ்ணு.

விஷ்ணுவின் கையில், ஒரு கவர் கொடுத்து “கங்ராஜீலேஷன் விஷ்ணு ஃபார் யுவர் மேரேஜ். விஷ் யு ஹாபி மேரிட் லைஃப். அது மட்டும் இல்ல, உன் கையில் இருக்குரது, உன்னுடைய ப்ரோமோஷன் ஆடர். நம்ம புக் கிரேட் சக்ஸஸ். ஸோ யு ஆர் அபாண்டட் அஸ் ஹெட் ஆப் போட்டோகிராபி” என்று கூறி விஷ்ணுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதைக் கேட்ட அனுவும் மகிழ்ச்சி அடைந்தாள். இருவருமாய் அவருக்கு நன்றிகளைக் கூறினர்.

இப்படியாகச் சிறிது நேரம் செல்ல, விஷ்ணு அனுவிடம் “அனு, நான் உன்கிட்ட ஒரு முக்கியமான நபரை அறிமுகம் செய்து வைக்கனும். கொஞ்சம் வரியா” என்றான். அவளும் சிரித்து தலையாட்டி குட சென்றாள்.

அவளை அழைத்துக் கொண்டு எமன் இருக்கும் இடத்திற்கு வந்தான் விஷ்ணு. “நாம இரண்டு பேரும், இன்னைக்கு ஒன்று சேர்ந்து இருக்கிறோம் என்றால் அதற்கு இவர்தான் காரணம்” என்று விஷ்ணு கூற, எப்படி என்று காரணம் தெரியாவிட்டாலும், எமனைப் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டாள் அனு.

இருவரும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அவர்களை வாழ்த்திய எமன், விஷ்ணு தோளில் கை வைக்க, விஷ்ணு, எமன், சித்ர குப்தர் ஆகிய மூன்று பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் உரைந்து போய் நின்றிருந்தனர், நேரம் உட்பட. அது விஷ்ணுவிற்கு அதிசயமாய் இருந்தது. இருந்தாலும் கடந்த சில நாட்களாக நிறைய அதிசயத்தைப் பார்த்துவிட்டான்.

“என்ன விஷ்ணு, இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாயா” என்றார் எமன்.

அதற்கு தன் இரு கையையும் கூப்பி நன்றி கூறிய விஷ்ணு, “ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ரொம்ப ரொம்ப நன்றி” என்றான்.

“நன்றி எனக்குக் கூறாதே. நான் முன்பே கூறியது போல் உன் வாழ்க்கை உன் கையில்தான் இருக்கிறது. உன்னுடைய முயற்சிதான் உன்னுடைய இந்தச் சந்தோஷத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணம். எப்போதும் முயற்சியை கை விடாதே. நீயும் அனுவும் நூறு வருடம் நல்ல படியா வாழ்விங்க” என்று கூறி அவன் தோளில் இருந்து கை எடுக்க, அனைவரும் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்தனர்.

சிறிது நேரத்தில் அங்கிருந்து எமனும் சித்ர குபதரும் மறைந்தனர்.

விஷ்ணுவும் அனுவும் கை குப்பி“ எங்கள் திருமணத்திற்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. மறக்காமல் சாப்பிட்டுட்டுதான் போகனும்”.

சுபம்

Episode # 19

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.