(Reading time: 18 - 35 minutes)

சித்ர குப்தரும் வெகு நேரமாக தன் கணினியில் அந்த பைலை தேடிக்கொண்டிருந்தார்.

“என்ன குப்தா பைலை ஓபன் பண்ண இவ்வளவு நேரமா. இன்றைக்கு நமக்கு எண்டர்டைன்மெண்டே இவன் தான். சீக்கிரம் ஆகட்டும்” என்று ஆவலாய் கேட்டார் எமன்.

“பிரபு, பைலை இங்குக் காணவில்லை அதைத் தான் தேடிக் கொண்டு இருக்கிறேன். நேற்று கூட இந்த போல்டரில் தான் இருந்தது. இன்று காணவில்லை.” என்று பதற்றமாக கூறினார் குப்தர்.

“என்ன சொல்கிறீர்கள் குப்தரே. இவ்வாறு ஆனதே இல்லையே” என்றார் எமன்.

“அதுதான் எனக்கு ஒன்றும் புரியவில்லை பிரபு.” என்றார் குபதர்.அவர் முகத்தில் ஒரு பதற்றத்துடன் கணினியை உற்று நோக்கி தேடிக் கொண்டிருந்தார்.

விஷ்ணுவும் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“இல்லை பிரபு, நாலைந்து முறை நன்றாகத் தேடிவிட்டேன். பைலை காணவில்லை. ஆனால்” என்று இழுத்து நிறுத்தினார் குப்தர்.

“என்ன ஆனால் குப்தரே, கூறவந்ததைத் தைரியமாக கூறுங்கள்” என்று குப்தரின் தயக்கத்தைப் புரிந்து கொண்டு கூறினார் எமன்.

“இல்லை பிரபு, அந்த பைல் காணாமல் போனது மட்டும் அல்ல, இவன் சம்பந்தமான எந்த ஒரு பைலயும் ஓபன் செய்ய முடியவில்லை. அனைத்து பைலும் ஃப்ரிஸ் ஆகி நிற்கிறது. ஒரே ஒரு வாய்ஸ் மெசேஜ் பைலை தவிர” என்று தயக்கத்தோடு நிறுத்தினார் சித்ர குப்தர்.

“ஹொவ் ஸ் ட் பாஸிபில் குப்தா. நீங்கள் கூறுவதை என்னால் நம்ப முடியவில்லை.” என்றார் எமன்.

“என்னாலும் தான் பிரபு. இத்தனை ஆண்டுகளில் இவ்வாறு ஆனதே இல்லை.” என்றார் சித்ர குப்தர்.

“ஏதோ வாய்ஸ் மெசேஜ் என்று சொன்னீர்களே, அதைப் பற்றி கூறுங்கள்” என்றார் எமன்.

“அது வந்து பிரபு” என்று குப்தர் நிறுத்த, சொல்லுங்கள் என்பதைப் பார்த்தார் எமன்.

“அந்த மெசேஜ் சற்று நேரத்திற்கு முன்புதான் இவன் கைப்பேசிக்கு வந்தது. அதுவும் அந்தப் பெண்ணிடம் இருந்து” என்று அவர் முடிப்பதற்குள் “ என் அனுவிடம் இருந்து வந்த மெசேஜா” என்று ஆவலோடு கேட்டான் விஷ்ணு.

அவனை முறைத்துவிட்டு, எமனைப் பார்த்து ஆமாம் என்று தலை அசைத்தார் குப்தர். விஷ்ணுவிற்கு உள்ளுக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. அப்போது நாம் மறையும் போது கேட்டது உண்மைதான் பிறமை இல்லை. அப்படி என்றால் அனு எதற்காக அங்கே வந்தாள், என்ன நடக்கிறது என்று அவன் மனதில் ஆயிரம் கேள்விகள்.

எமன் அவன் மனதைப் படித்தவர் போல் “குப்தா ஜீ, அந்த மெசேஜ ஓபன் பண்ணி ப்ளே பண்ணுங்கள்” என்றார் எமன்.

தன் மனத்துக்குல்லையே எமனுக்கு நன்றி கூறிவிட்டு, இனிமேல் தான் கேட்கவே முடியாது என்று நினைத்த தனி உயிரியின் குறளை மீண்டும் கேட்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் சித்ர குப்தர் எப்போது பட்டனை தட்டுவார் என்று பார்த்து கொண்டே இருந்தான்.

சிறிது தயக்கத்துடனே ப்லே பட்டனை அழுத்தினார் சித்ர குப்தர்.

சிறிது நேரத்திற்கு முன்னர்.

தன் தந்தையின் அனுமதியோடு விஷ்ணுவைப் பார்க்க துள்ளிக் குதித்து ஓடி வந்த அனு, மின்னல் வேகத்தில் காரை ஓட்டினாள். இரவு நேரம் என்பதால் சாலை ஆள் நடமாட்டம் இல்லாத சாலையை கிழித்துக் கொண்டு அந்த கார் சென்றது.

அந்த ரம்யமான இரவு நேரம், அவள் நினைவு முழுதும் விஷ்ணுவே நிறைந்து இருந்தான். அவனைப் பார்த்த முதல் கனத்தில் இருந்த அவன் போகிறேன் என்று கூறிவிட்டு சென்ற நிமிடம் வரையிலான அத்தனை நிகழ்ச்சிகளையும் அசை போட்டது. சில நிகழ்ச்சிகள் அவளுக்கு வெட்கத்தையும், சில நிகழ்வுகள் அவளுக்கு மகிழ்ச்சியையும் தந்தது. அதில் ஒன்று அவள் மகிழ்ச்சியை முற்றிலும் மாற்றியது.

ஜீஸ் ஸாபில் வைத்து விஷ்ணு அவன் வெளிநாட்டு போவதாக கூறியது அவளுக்கு ஞாபகம் வரவே ஒரு நொடி துடித்துப் போனால். உடனே தன் கைப்பேசியை எடுத்து விஷ்ணுவிற்குக் கால் செய்தாள்.

தன் வீட்டில் மரம் போல் கிடந்தவனுக்கு அவன் கைப்பேசியின் அழைப்பு ஓசை கேட்க வில்லை.

இரண்டு மூன்று முறை டிரை செய்தால் எந்தப் பலனும் இல்லை. நான்காவது முறை கால் செய்தும் அவன் எடுக்க வில்லை. கடைசியாக அவளுக்கு வாய்ஸ் மெசேஜ் ஆப்ஷன் வரவே, அவன் கண்களை பார்த்துக் கூறவேண்டும் என்ற இருந்த வார்த்தையை மெசேஜீலே கூறி விடலாம் என்று முடிவெடுத்தாள்.

“ஹாலோ விஷ்ணு, நான் அனு. நீ இந்த மெசேஜ்அ கேட்பியா னு கூட எனக்கு தெரியல,  பட் இத நான் சொல்லியே ஆகனும். ஐ லவ் யு விஷ்ணு, லவ் யு சோ மச். நம்ம கல்யாணத்திற்கு அப்பாவும் ஓகே சொல்லிட்டாறு. நான் உன்ன பார்க்கத்தான் வறேன். பிளிஸ் என்னை விட்டு போயிடாத விஷ்ணு. ஐ நீட் யு இன் மை லைஃப்” என்று அனு பேசி முடித்து மெசேஜ் ஸெண்டு செய்தாள்.

ற்போது எம லோகத்தில் அனு பேசி ப்லே ஆகி நின்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.