(Reading time: 18 - 35 minutes)

அதைக் கேட்டு அந்த இடமே அமைதியாக இருக்க, விஷ்ணு மட்டும் தான் இருக்கும் இடத்தை மறந்து, “அனு என்ன லவ் பண்றாங்க, என் அனு என்னை காதலிக்கிறே னு சொல்லீட்டாங்க. எமன் ஸார், அனு என்னை லவ் பண்றாங்க, குப்தா ஸார் அனு என்னை லவ் பண்றே னு சொல்லிட்டாங்க, நான் உடனே என் அனுவைப் பார்க்க” என்று அவன் கூறும் போதே எங்கே இருக்கிறோம் என்று நினைவுக்கு வர அமைதியானான். கண்களில் கண்ணீர் மட்டும்.

அவன் பேசி நிறுத்திய சற்று நிமடத்திற்க்குல்லாகவே, விஷ்ணுவைக் காணாமல் அழுது கொண்டிருக்கும் அனுவின் உருவம் அங்கே இருந்த அனைத்து லெயிடு ஸ்கிரினிலும் தெரிந்தது.

அதைப் பார்த்த விஷ்ணு பதரிப் போனான். அவனுக்காக அழும் முதல் ஜிவன் அவள். அவள் தெரியும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டு அழுது கொண்டிருந்தான். அதற்கு மேல் அவனால் வேறு என்ன செய்ய முடியும்.

அடுத்த நொடி விஷ்ணு எமலோகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தான். சித்ர குப்தர் உட்பட மற்றவர் அனைவருக்கும் அங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எமன் மட்டும் ஒரு சிறு புன்னகையோடு நடப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

எம லோகத்தில் இருந்து மறைந்தவன், பூமியில், தன் வீட்டில் அழுது கொண்டிருக்கும் அனு முன்னாள் நின்று கொண்டிருந்தான். என்ன நடக்கிறது என்று விஷ்ணுவிற்கும் புரியவில்லை. இனி அவனுக்குப் புரிய தேவை இல்லை.

தன் முன் அழுது கொண்டிருக்கும் அனுவின் தோளைத் தொட்டு, “அனு” என்றான் விஷ்ணு.

அவன் குரல் கேட்டு தலையை நிமிர்த்திப் பார்த்தாள். கண் முன் மீண்டும் விஷ்ணு. பிரிந்த உயிர் மீண்டும் வந்ததைப் போல் உணர்ந்தாள் அனு.

விஷ்ணுவை அனைத்துக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து அழுதால் அனு. விஷ்ணுவின் கண்களிலும் கண்ணீர். இருவருக்கும் ஏன் அழுகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் அழுகையைத் தவிர வார்த்தை வரவில்லை. அந்த அறை முழுதும் இவர்கள் அழுகை மட்டுமே நிறைந்திருந்தது.

“ அனு ப்ளீஸ் அழாதீங்க” என்ற விஷ்ணுவின் வார்த்தைகள் அந்த அமைதியை உடைத்தன.

அவனை அனைத்துக் கொண்டு நின்றிருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள் அனு. அவனை விற்று சற்று விலகினாள்.

அவனைப் பார்த்து “எங்க டா போன என்ன விட்டு. எவ்வளவு பயந்து போயிடேன் தெரியுமா” என்று கூறிக் கொண்டே சிறு பிள்ளை போல் அவன் மார்பில் குத்தினாள் அனு. அது வலிப்பது போல் விஷ்ணுவின் முகம் மாறவே, “ஸாரி டா” என்று அவனை மீண்டும் அனைத்துக் கொண்டாள் அனு.

அவளுக்காக எமனை ஏமாற்றி வந்தவனுக்கு இந்தக் குத்து சாதாரணம்தான். இருந்தாலும் அவனுக்கு அவளின் அணைப்பு பிடித்திருந்தது. மீண்டும் அங்கு அமைதி. இருவருக்கும் அந்த அமைதி பிடித்திருந்தது.

விஷ்ணு அந்த வாய்ஸ் மெசேஜில் அனு கூறியதை கேட்டான். இருந்தாளும் அதை நேரில் கேட்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குத் தோன்றியது.

மெல்லமாக “அனு”என்று அவளை அழைத்தான். “உம்” என்று மட்டும் பதில் கூறினாள் அனு. வேறு எந்த அசைவும் இல்லை அவளிடம்.

“அனு, இங்க என்ன பண்றீங்க” அவனும் விடுவதாக இல்லை.

அட பாவி, நீதான் சரண் என்று உன் மார்பில் விழுந்து கிடக்கிறேன், இங்க என்ன பண்றீங்க நு கேட்குற என்று கடுப்பானால் அனு.

அவன் மார்பில் இருந்து தலையை எடுத்து “மண்டபத்தில் இருந்து தாம்பூலம் வாங்காமல் வந்துடீங்க, அதான் கொடுக்கலாம் என்று வந்தேன்” என்று சிறு கோவத்தோடு பதில் கூறினாள் அனு.

விஷ்ணுவிற்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. அவள் கூறியதை ஒற்றுக் கொள்வது போல் “ஓ” என்றான்.

அதைக் கேட்டு மீண்டும் கடுப்பானால் அனு. “என்னது ஓ, டேய் விடிஞ்சா எனக்கு வேறு ஒருவன் கூட கல்யாணம். ஆனா இப்போ இங்க உன்னைக் கட்டி பிடிச்சிக்கிட்டு நிற்கிறேன். ஆனா நீ என்னடானா எதுக்கு வந்த நு கேட்குற. இன்னுமா புரியல உனக்கு” என்றாள் அதே கோபத்தோடு.

அது அவனுக்குத் தெரியாமல் இல்லை. இருந்தாலும் அவள் வாயால் கேட்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. ஒன்றும் தெரியாதவன் போல், “இல்ல அனு எனக்கு புரியல. ப்ளீஸ் நீயே சொல்லீடு” என்றான் கெஞ்சுவது போல்.

அவன் தெரியாதவன் போல் நடிப்பது எதற்கு என்று அவளுக்கும் தெரியும். விஷ்ணுவின் கண்களை நன்றாக உற்றுப் பார்த்து “இன்னுமா தெரியல” என்றாள் அனு.

அவளின் கண்களை அவ்வளவு அருகில் பார்த்தவனின் மனதில் தோன்றியதெல்லாம், “பா என்ன கண்ணு ட இது. அப்பிடியே இதயத குத்தி கிழிக்குது”. அந்தக் கண்களை பார்த்து விளையாட்டுக்குக் கூட அவனால் பொய் சொல்ல முடியவில்லை. “ப்ளீஸ் டி கெஞ்ச வைக்காதே” என்பதைக் கண்ணாலே கேட்டான் விஷ்ணு.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.