(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 10 - தேவி

Kaathalana nesamo

ஷ்யாம் வந்து இருப்பதை அறியாத அவனின் அத்தை குடும்பத்தினர் அவனை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும் மித்ராவின் மகிழ்ச்சி அவள் முகத்தையே பிரகாசமாக காட்டியது.

அவள் ட்ரெஸ் செலெக்ஷன் பற்றி சொன்னதை கேட்டவன்

“ஒய்.. மித்து.. அப்போ அதுக்கு தான் என்னை எதிர்பார்த்தியா? உன் கல்யாணத்துக்கு இல்லியா?

“போங்க அத்தான். நீங்க கல்யாணத்துக்கு கண்டிப்பா வருவீங்கன்னு தான் கல்யாணத்துக்கே ஓகே சொன்னேன். அதிலே டவுட் இருந்து இருந்தால், நீங்க வர வரைக்கும் நான் வெயிட் பண்ணிருப்பேன்.”

“ஹ..ஹ.. சும்மா கதை விடாதே. இப்போ தான் பார்த்தேனே.. “

“அது ரெண்டு நாளா எனக்கு ஒரே குழப்பம் அத்தான். இந்த பர்சேசிங் வரவே பிடிக்கலை தெரியுமா? உங்கள பார்த்ததும் என்னோட பர்ஸ்ட் கவலை தீரப் போகுதுன்னு சந்தோஷத்திலே துள்ளி குதிச்சிட்டேன்.”

“ஹ்ம்ம்.. நம்பறேன். அப்புறம் மிஸ்டர்.மித்ரா எப்படி இருக்கார்?

“நல்லா இருப்பார்ன்னு தான் நினைக்கிறேன். “

“ஏன் காலையில் குட் மார்னிங் மெசேஜ் இன்னும் வரலையா?

“அது எல்லாம் அனுப்ப மாட்டார் அத்தான்.”

“இப்போ எல்லாம் தினமும் பேசுறார்ன்னு சொன்னியே “

“ஆமாமா.. அது சாயந்திரம் மட்டும் தான். “

“மத்த நேரம் மெசேஜ் அனுப்ப மாட்டாரா?”

“அதுக்கு எல்லாம் அவருக்கு டைம் இருக்காது அத்தான். “

“சரி. அதான் ஈவ்னிங் சேர்த்து வச்சு பேசறாரே.. “

இப்போது அவன் அத்தை சபரி “ஷ்யாம் எப்போ வந்தே? இன்னும் ஒரு வாரம் கிட்ட ஆகும்ன்னு அண்ணி சொன்னாங்களே “

“நேத்திக்கு நைட் வந்தேன் அத்தை. சடன்னாதான் கிளம்பினேன் அத்தை. அதான் யார் கிட்டேயும் சொல்லலை.”

“ரொம்ப நல்லதுப்பா.. எங்களுக்கு எல்லாம் அண்ணா, அண்ணி நல்லா மாரல் சப்போர்ட்டா இருக்காங்க. நம்ம குடும்பத்திலே நீதான் முதல் பையன். அண்ணா எப்படி எங்களுக்கு எல்லாம் சப்போர்ட்டா இருக்காங்களோ, அடுத்த தலைமுறைக்கு நீதான் எல்லோரையும் கவனிச்சிக்கணும். அதோட மிதுவும் உன்கிட்டதான் மனசு விட்டு பேசுவா. நீ முன்னாடியே வந்தது ரொம்ப தெம்பா இருக்குபா “

“நம்ம வீட்டு முதல் கல்யாணம். அதோட மிது எனக்கு ஸ்பெஷல். அதான் விஷயம் தெரிஞ்சதில் இருந்து என் வேலை எல்லாம் அங்கே வேகமா முடிச்சுட்டு எவ்ளோ சீக்கிரம் முடியுமோ கிளம்பி வந்துட்டேன்.”

“தேங்க்ஸ்டா. பாவம் நைட் வந்துட்டு, ரெஸ்ட் எடுக்காம வந்துட்டயே..”

“இல்லாட்டி எங்க வீட்டு வானரம் சும்மா விடுமா அத்தை. காலையிலே எழுப்பி விட்டுட்டா”

“சின்ன பொண்ணுதானே.. உன்னை பார்த்த சந்தோஷத்தில் எழுப்பி விட்ருப்பா. “

“ரொம்பத்தான் சப்போர்ட் பண்றீங்க.. உங்க மருமகளுக்கு. அப்புறம் தலையில் ஏறி உக்காந்துக்குவா பார்த்துக்கோங்க. “ என்றவன், “அஷ்வின் எப்போ வரான் அத்தை?

“வார கடைசியில் லீவ் போட்டுட்டு வரேன்னுட்டான் ஷ்யாம்”

இவர்கள் பேசிக் கொண்டே இருக்க, அங்கிருந்த மித்ராவின் பாட்டி

“இப்படியே பேசிகிட்டே பொழுத கடத்தினா எப்படி? உன் அண்ணன் பையன் இங்கே தானே இருக்க போறான். பொறுமையா பேசிக்கலாம். மொத வந்த காரியத்த பார்ப்போம்” என்று குரல் கொடுத்தார்.

ஷ்யாம் வந்த சந்தோஷத்தில் இருந்த மித்ராவிற்கு, பாட்டியின் குரல் கேட்டவுடன் அந்த சந்தோஷம் எல்லாம் வடிந்து விட்டது. ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின. அவளின் வாட்டம் பொறுக்காத ஷ்யாம்

“மிது .. என்ன ஆச்சு? “ என்று வினவினான்.

“ஒன்னும் இல்லை அத்தான். “ என்றாள் மிது

“இவ்ளோ நேரம் நல்லா ப்ரைட்டா இருந்த. இப்போ முகத்தில் கவலை தெரிகிறதே. என்னம்மா விஷயம்?

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அத்தான்.. கொஞ்சம் டென்ஷன் அவ்ளோதான்”

“ஹ்ம்ம். அது இருக்கும் தான். எல்லாம் சீக்கிரம் சரி ஆயிடும் ஓகேவா?

“சரி அத்தான்” என்று கூறி, பளிச்சென்று சிரித்தாள்.

அதற்குள் அவள் பாட்டி மீண்டும் நல்ல நேரம் என்று ஆரம்பிக்க, சட்டென்று எல்லோரும் அந்த இடத்தை காலி செய்து சென்றனர்.

முதலில் முஹூர்த்த புடவை எடுக்கும் பகுதிக்கு சென்றனர். சுமித்ராவும், சைந்தவியும்

“பெரியவங்க எல்லாம் அந்த வேலைய பாருங்க.. நாங்க ரெண்டு பேரும் ரிசெப்ஷனுக்கு எங்களுக்கு டிரஸ் பார்க்கறோம். அண்ணா நீ எங்களோட வா” என்று கூப்பிட்டனர்.

மித்ரா பாவமாக ஷ்யாமை பார்க்கவும், “ஹேய். வாலுங்களா.. கல்யாணம் மித்ராவிற்கு தானே. முதலில் அவளுக்கு முடிப்போம். அப்புறம் போய் உங்க லீலைய ஆரம்பிக்கலாம்.” என்று கூற, இருவரும் ஷ்யாமை முறைத்து விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.