Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

ன்று 1998

யக்கமடைந்த திலோவை கண்ட பார்வதிக்கு பயம் வந்து அவளை தட்டி எழுப்பலானார்.

அவள் எழாமல் போகவே பயந்து போன பார்வதி தன் கணவருக்கு போன் செய்து தகவல் கூற அவரும் பறந்து வீட்டிற்கு வந்தார்.

வந்தவர் காரணத்தை கேட்க அதற்கு பார்வதி நடந்ததை கூற அவர் தன் மனைவியை திட்டி விட்டு ஓங்கி ஒரு அறையை பார்வதியின் கன்னத்தில் விட்டார். அதில் பார்வதியின் கன்னம் பழுத்துவிட அவர் ஓரமாக நின்று அழலானார்.

பார்வதியைப் பற்றி கவலை கொள்ளாமல் மகாதேவன் சட்டென தன் மகள் திலோவை ஆஸ்பிட்டலுக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்.

பக்கத்து வீட்டில் திடீரென ஏற்பட்ட பரபரப்பை கண்ட சித்தார்த் வீட்டின் கூர்கா, மகாதேவன் திலோவை தூக்கிச் செல்வதை கண்டு வேகமாக பார்வதியை நெருங்கி என்ன விவரம் என கேட்க? அதற்கு பார்வதியும் நடந்ததை சொல்லிவிட்டு அழவும் அவருக்கு ஆறுதல் சொன்னார்.

க்ளீனிக்கில் திலோவை பரிசோதித்த டாக்டர் அவள் உடல்நிலை மிகவும் சோர்வாக இருப்பதாகவும் சத்தான உணவு பற்றாக்குறை காரணமாக இரத்தத்தில் ஹீமோகுளோபினின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அதனால் இவ்வாறு மயக்கமானதாகவும் காரணம் சொன்னவர் இனிமேல் திலோவுக்கு சத்தான ஆகாரத்தைத் தருமாறு கூறிவிட்டு மருந்து மாத்திரைகளை கொடுத்தனுப்பினார்.

வீட்டிற்கு வந்த மகாதேவன் தன் மனைவி பார்வதி அழுது கொண்டிருப்பதைக் கண்டு அவளிடம் சென்று டாக்டர் சொன்ன காரணங்களை கூறவும்

”நம்மகிட்ட ஏதுங்க அவ்ளோ வசதி நீங்க தர்ற சம்பளத்துல இவ்ளோதான் என்னால சமைக்க முடியும், டாக்டர் சொன்ன மாதிரி சத்தான உணவுக்கு நாம எங்க போறது” என கேட்க

”இரும்மா முதல்ல பாப்பா எழட்டும். அவள் எழுந்ததும் அவளுக்கு ஏதாவது சாப்பிட கொடு, அப்புறமா மத்ததை பத்தி பேசலாம், நான் 2 ஹவர் பர்மிஷன்ல வந்தேன் திரும்பி வேலைக்கு போகனும், அவளை நீ பத்திரமா பார்த்துக்க” என கூறிவிட்டு அவர் சோர்வாக வெளியே சென்றார்.

வெளியே வந்தவரிடம் கூர்க்கா என்ன ஏதென எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

விருதுநகருக்கு தன் வீட்டிற்கு வந்த சித்தார்த் தம்பிகளைக் கண்ட சந்தோஷத்தில் உற்சாகமானான். அவர்களுடன் விளையாடி பொழுதைக் கழித்தான்.

அடுத்து தன் தாயிடம் சிறிது நேரம் பேசியபின் குழந்தையை பார்த்தவன் குதூகலமானான்.

தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எழுப்பலானான். அது எழாமல் அழவே அவன் பின்னோக்கி செல்ல அவன் தாய் சித்துவிடம்

”இரு சித்தார்த் அவன் தூங்கறான், நீ எழுப்பினா இப்படிதான் அழுவான்” என கூறவும் அவனும் எதுவும் சொல்லாமல் அவன் எப்போது எழுவான் என குழந்தையின் அருகிலேயே அமர்ந்திருந்தான்.

சிறிது நேரம் கழித்து எழுந்த குழந்தையை ஆசையாக பார்த்த சித்தார்த், அதன் கைகளை கால்களை ஆட்டிவிட்டான். கன்னத்தை தொட்டு பார்த்தான். அதை தூக்க முயற்சி செய்ய அவன் தாய் தடுத்தாள்.

”வேண்டாம் சித்தார்த் அப்படி செய்யாத உன்னால சரியா தூக்க முடியாது”

”ஏன் மாம் இவன் பார்க்க சின்னதாதானே இருக்கான், நான் ஈசியா தூக்குவேன்” என்றான்

”இல்ல அவனை உன்னால சரியா தூக்க முடியாது” என கூற அவன் தாயின் பேச்சைக் கேட்காமல் எப்போதும் திலோவை தூக்குவது போல் தூக்க சுசீலா பயந்தே விட்டார். அவனிடமிருந்து குழந்தையை வாங்கியவர் அவன் முதுகில் ஒரு அடி கொடுத்துவிட்டு

”சொன்னா கேட்கறதில்லை போ, இங்கிருந்து வெளியே போ”

”ஏன் நான் போகனும் இப்ப என்னாச்சி” என கோபமாக சித்து கேட்க

”என்னாச்சா கொஞ்சம் விட்டிருந்தா குழந்தையோட கழுத்து பிசகியிருக்கும் உன்னால”

”நான் சரியாதான் தூக்கினேன்”

”என்னத்த சரியா தூக்கினே கிளம்பு முதல்ல” என திட்டவும் அவனும் அழுது கொண்டே தாத்தாவிடம் வந்தான்.

தாத்தா அவனைப் பார்த்து

”என்னடா ஏன் அழற”

”அம்மா அடிச்சிட்டாங்க தாத்தா”

”அப்படியா நீ என்ன செஞ்ச”

”தாத்தா நான் பேபி தம்பியை தூக்கினேன், அதுக்கு அடிச்சிட்டாங்க”

”ஓ சரி சரி அவன் இப்பதானே பொறந்திருக்கான். நீ 4 மாசம் கழிச்சி தூக்கு, யாரும் உன்னை அடிக்க மாட்டாங்க”

”ஏன் இப்ப தூக்கினா என்ன”

”இப்ப அவன் சின்னதா இருக்கான்ல, உன்னால தூக்க முடியாது”

”அவன் ஒண்ணும் வெயிட்டா இல்லையே”

”அதுக்கில்லடா சின்ன குழந்தைங்க கழுத்து நிக்காது, நீ எப்பவும் போல தூக்கினா தம்பியோட கழுத்து வலிக்கும் அதான்”

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகாmahinagaraj 2018-06-08 11:17
ammadiooo kutti sidhthu kku evlo love h???!! ;-) sema
thilo yarunnu sedhthu kku sollirunga mam... plz....
entha company problems ellam epotan mudiumo/????!! :Q:
458 per test thilo epdi tanguvangalo??
payangarama poguthu .. sekaram sidhthu & dall h setthu vachsurunga....... ;-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகாNanthini 2018-06-08 09:41
interesting episode Sasirekha (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகாmadhumathi9 2018-06-08 05:11
:clap: nice epi.thilo seigira velaikku maattaama irukkanum. :Q: thilovaal mudiyuma.wait and see. (y) :thnkx: waiting to read more. :thnkx: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகாராஜேந்திரன் 2018-06-07 22:32
எப்பதான் கம்பெனி பிரச்சனை முடியும் :angry: சீக்கிரமா திலோவையும் சித்துவையும் சேர்த்துடுங்க ப்ளீஸ் :yes: பாவம் திலோ சித்துவை நினைச்சி உருகறதும் அவன் கம்பெனியில நடக்கறத நினைச்சி கஷ்டப்படறதும் போதும் steam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகாராணி 2018-06-07 22:29
அன்றைய குட்டி சித் தெளிவா முடிவெடுத்தான் :clap: இன்றைய பிக் சித் அப்படியில்லை facepalm திலோவுக்குதான் பிரச்சனை அதிகமாகுது :yes: பாவம் திலோ steam கம்பெனியை சீக்கிரமா சரிபண்ணிடுங்க :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகாvijayalakshmi 2018-06-07 22:26
பிக் சித்து இன்னும் வளரவேயில்லை அவனுக்கு ஒரு ஸ்டாராபெர்ரி ஐஸ்க்ரீம் வாங்கித்தாங்க மேம் அப்பவாவது தெளிவாகுவார்ல :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 10 - சசிரேகாAdharvJo 2018-06-07 21:00
facepalm oh, my gad! ithana test-ah :eek: ithanai test sid vachi irundha company kula oru thirutugumbal irundhu irukadho enamo :no: :no: ovvarutharum ippadi kevalama test vacha pavam Doll ena panuvanga :sad: Indha sid vera ippadi greenish ah thitina yaru kitta thaan complain kodupadhu :o Sasi ma'am hero heroin cover panuringalo illayo indha thiruttu ganga-I nala eduthu katuringa :D :P Let's wait and watch what thilo does to save the company & Sid.

Vinodh oda part was really funny :lol: :grin: adhukuda parva illai thilo company pathi ivanga kitta solla mattenu sonadhu very funny facepalm Will he help her??

Kutti sid patri sollama irukka mudiyuma adhuvum Baby thambi nala avarukku kudukura adi che pavam :sad: Sid innum valara-ve illai pole irukku very innocent...avanga dad kitta sandai pottu grocery ellam eduthuttu pogura scene funny moment of the epi :D :D

Thank you and keep rocking. Indha vatiyum emathitinga steam
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top