(Reading time: 11 - 22 minutes)

“அது எப்படித்தான். அவ பாவமா ஒரு பார்வை பார்த்தவுடன் எங்கள டீல்ல விட்டுடுவீங்களோ? அண்ணா, முஹூர்த்த புடவைக்கு எப்படியும் ஆயிரத்து எட்டு கண்டிஷன்ஸ் வச்சுருப்பாங்க..அதிலும் மித்ராவோட பாட்டி அந்த கிழவி இருக்கே.. அது எக்ஸ்ட்ராவா ஒரு நூறு கண்டிஷன்ஸ் வச்சுருக்கும். அத எல்லாம் நாங்க கேக்கனுமா? உங்களுக்கே இது நியாமா இருக்கா?”

“சுமித்ரா.. என்ன இது கிழவின்னு எல்லாம் சொல்ற? இது தான் மரியாதை தெரிஞ்சு வச்சுருக்கிற பொண்ணா?” என்று மைதிலி கண்டிக்க,

“அம்மா.. அது கிழவி தானே.. என்னமோ இருபது வயசு குமரியா சொல்ற மாதிரி சத்தம் போடற.. மிது கல்யாணம் நிச்சயம் ஆகி கூட இவ்ளோ சந்தோஷமா இருந்தது இல்லை. இன்னைக்கு அண்ணன் பார்த்ததும் அவ்ளோ சந்தோஷ பட்டா.. அது கூட அந்த பாட்டிக்கு பொறுக்காம, அவள தனியா கூட்டிட்டு போயி ஏதோ சொல்லுது.. மிது முகமே வாடி போயிருச்சு பாருங்க” என,

அதை கவனித்த மைதிலியும், ஷ்யாமும் மித்ராவின் அருகில் சென்றனர். சுமித்ரா, சைந்தவி இருவரும் சொன்ன மாதிரி மித்ராவின் பாட்டி அந்த மாதிரி தான் மித்ராவை பேசி இருந்தார்.

அவள் அருகில் இருவரும் நிற்கவே, அந்த பாட்டி பேசிக் கொண்டு இருந்ததை விட்டு விட்டு

“அம்மாடி மித்ரா.. என்ன புடவை எடுக்க போற? உன் மாப்பிள்ளை கிட்டே கேட்டியா ? அவர் விருப்பம் என்னனு? அது எல்லாம் கேட்டுருக்க மாட்டியே?”

“கேட்டேன் பாட்டி. அவங்களுக்கு எது வேணா சரின்னு சொன்னாங்க. அவங்க அம்மா கிட்டே மட்டும் கேட்டுக்க சொன்னாங்க”

“நீ கேட்டியா?”

“ஹ்ம்ம்.. இல்லை” என்று கூறி தலை அசைத்தாள்.

“ஏன் கேக்க வேண்டியது தானே? இது எல்லாம் நீயே விவரமா பண்ணனும்.. உனக்கு தான் புரியாதுனா, அந்த தம்பி சொன்னதுக்கு அப்புறமாவது பேசி இருக்க வேண்டியதுதானே? இத நான் சொன்ன, உன் அப்பன், ஆத்தாலேர்ந்து அத்தனை பேரும் உனக்கு பரிஞ்சு பேசி , என்னை கெட்டவளாக்கி விட்டுடுவாங்க”

என்று நான் ஸ்டாப்பா பேச ஆரம்பித்தார். கடையில் இருந்த எல்லோரும் இவர்களையே பார்ப்பதை உணர்ந்த ஷ்யாம்,

“பாட்டி .. இப்போ எதுக்கு இவ்ளோ சத்தம்.. அதான் அவர் கிட்டே கேட்டுதானே இருக்கா மித்து.. அவளோ அக்கறையா இருந்தா, அவர் அவங்க அம்மா கிட்டே பேசி சொல்லட்டும். என்ன மாதிரி எடுக்கணும்னு? இதுவரைக்கும் அவர் ஒன்னும் சொல்லலைல மித்து?” என்று கேட்டான்.

மித்ரா இல்லை என தலை அசைக்க,

“அப்புறம் என்ன? இனிமேல் நமக்கு பிடிச்சத நாம எடுப்போம். கடைக்காரரே கல்யாண சரீஸ் காட்டுங்க.. அம்மா, அத்தை நீங்க என்ன பட்ஜெட்ன்னு சொல்லுங்க” என்று உத்தரவு போல் சொல்லவும், அதற்கு பின் வேறு எதுவும் பேசாமல் மளமளவென புடவை எடுக்கும் வேலை நடைபெற்றது.

பெரியவர்கள் செலக்ட் செய்த புடவையில், மித்ராவிற்கு பிடித்த இரண்டை எடுக்க, அதில் எது அவளுக்கு பொருந்தும் என்று ஷ்யாம் சொல்ல, அந்த புடவையே எடுத்தாள்.

இதற்கு பின் பெரியவர்கள் உறவுகளுக்கு புடவை எடுக்க சென்று விட, இளைய பட்டாளம் எல்லாம் டிசைனர் புடவை பக்கம் சென்றனர் மித்ரவையும் அழைத்துக் கொண்டு.

எல்லோரும் அவளை காக்ரா அல்லது லேஹாங்கா எடுக்க சொல்ல, அவளோ சரவணன் கூறியதை சொல்லி மறுத்தாள்.

பிறகு அவள் இஷ்டப்படி டிசைனர் சரி எடுத்துக் கொண்டனர். மித்ரா லேஹங்கா என்றும், மற்ற பெண்கள் காக்ரா என்றும் முடிவெடுத்து இருக்க, அவள் புடவை கட்டுவதால், இவர்கள் அனைவரும் அம்பேர்ல்லா சுடிதார் எடுத்துக் கொண்டனர்.

அன்றைக்கு ஷாப்பிங் வேலை எல்லாம் முடித்துக் கொண்டு, எல்லோரும் சபரி வீட்டிற்கு வர, மாலை ஆகி விட்டது.

சபரி வீட்டினர் அவர்கள் அறையில் ரெப்ரெஷ் ஆகி வர, சைந்தவியும், சுமித்ராவும் மித்ராவின் அறையில் ரெப்ரெஷ் ஆகினர்.

ஷ்யாமிற்கு ஒரு கெஸ்ட் ரூம் கொடுத்து முகம் கழுவி வர சொன்னார்கள்.

முதலில் சுமி, சைந்தவி இருவரையும் ரெப்ரெஷ் ஆகி வர சொல்லி விட்டு, அவர்களுக்கு தேவையான டவல், சோப்பு எல்லாம் எடுத்துக் கொடுத்தாள் மித்ரா. அப்போது போன் அடிக்க, யார் என பார்த்தவள், உடல் கசகசப்பின் காரணமாக பிறகு பேசலாம் என்று கால் அட்டென்ட் செய்யவில்லை.

மித்ரா பாத்ரூம் சென்று வருவதற்குள், மேலும் மூன்று முறை கால் வரவே, வெளியே வந்தவுடன் போன் அட்டென்ட் செய்தாள்.

நாகரீகம் கருதி, சுமி, சைந்தவி இருவரும் பால்கனியில் சென்று பேசிக் கொண்டு இருந்தனர்.

போனில் சரவணனே. மித்ரா போன் எடுத்தவுடன்

“போன் எடுக்க ஏன் இவ்ளோ நேரம்? உன் மாமா பையன் கூட அரட்டை அடிச்சுட்டு இருக்கியா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.