(Reading time: 8 - 15 minutes)

ஒரே மகன் அவனின் பெற்றோரும் ஒத்துப்போக நல்லவர்களின் கையில் கிடைக்கும் மலர்களைப் போல் அவர்கள் வாழ்வு இனித்தது. ஆனால் பொருளாதாரம். 

அதற்கு அவள் இப்படி ரிஸ்கான ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பாள் என்று நித்திலன் நினைக்கவில்லை எத்தனை சொல்லியும் மாறாத அவளின் உறுதியும் அதனால் அவளை மாற்ற முடியாது என்று தெரிந்ததும், அவன் அவளின் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான் மனமுவந்து.

உத்ரா புன்னகை முகத்துடனேயே வெளியே வந்தாள்

என்னாச்சு ?

ஒன்றும் பிரச்சனையில்லை, எல்லாம் நல்லபடியாகத்தான் முடிந்தது, அடுத்த வாரக் கடைசியில் இரண்டு மூன்று பயிற்சி வகுப்புகள் இருக்குமாம் அது முடிந்தவுடன் பிராக்டிக்கல்ஸ் தான் ! ஒரு விதத்தில் எக்ஸைட்டிங்கா கூட இருக்கு. விளையாட்டா ஸ்கூல் டேஸ்ல பிரண்டோட கத்துக்கிட்ட நீச்சல் பயிற்சி எப்படி சமயத்திற்கு உதவுது. அதிலும், இதோ இப்போ ஐம்பதாயிரம் அட்வான்ஸ் சந்தோஷமா இருக்கு நித்திலன்

எத்தனை வருட கான்டிராக்ட் 

ஒருவருடம் என்றால் 25ஆயிரம்தான் நான் இரண்டு வருட அக்ரிமெண்ட் போட்டு இருக்கிறேன் அதனால ஐம்பதினாயிரம். இனிமேல் கொஞ்சம் நிம்மதியா மூச்சுவிடுவேன். இதோ ஆர்டர்

அவள் வெகு உற்சாகமாய் நீட்ட, அவன் கண்கள் அதில் மேய்ந்தன.

பயிற்சிக்காலங்களிலோ பணியிலோ உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்று எழுதப்பட்டு இருந்தது. இன்னும் பல விதிகள் இருந்தாலும் அதற்குமேல் படிக்க முடியாமல் நித்திலன் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.

என்ன நித்தி இது சின்ன குழந்தை மாதிரி ?

இது வேண்டாம் உத்ரா ? ஒரு காதலியாய் இல்லையென்றால் நல்ல தோழியாய் உன்னை பார்த்துக்கொண்டாவது இருப்பேன் இப்போது அதுவும்.... அவனால் பேச இயலவில்லை

ப்ளீஸ் நித்திலன் இதை வீட்டில் யாருக்கும் சொல்லவேண்டாம். ஏற்கனவே பயந்து போயிருக்காங்க,

அவன் தலையசைத்ததும், பூவும் பழம் ஸ்வீட் என்று வாங்கினாள் வெகு உற்சாகமாக வீட்டுக்கு சென்றாலும் மனத்தின் ஓரத்தில் கொஞ்சம் பயமும் குடியேறத்தான் துவங்கியது. 

ன்றைய தினம் வெகு உற்சாகமாகத்தான் கழிந்தது வீட்டில் அனைவருக்குமே ! கமலிக்கு கொஞ்சம் நகைகள் எடுத்து திருமணச்செலவுக்கும் சற்று ஒதுக்கி அக்காவிடம் வீட்டைப் பராமரிக்க என்று சேர்த்து வைத்திருந்த கொஞ்சநஞ்சமும் செலவழிய மனம் நிறைவாகத்தான் இருந்தது உத்ராவிற்கு. லட்சுமி நித்திலனின் திருமணமும் அவளின் பயிற்சிக் காலத்திற்கு சற்று முன்னதாகவே குறிக்கப்பட்டது. வெகு நெருங்கிய சொந்தங்களோடு கோவிலிலேயே திருமணம் செய்யவும் முடிவெடுக்கப்படவும், வெகு காலத்திற்குப் பிறகு அவர்கள் வீட்டில் சந்தோஷம் குடி கொண்டு இருந்தது. ஆனால் உத்ராவின் முகத்தில் மட்டும் சில கணங்கள் குழப்பத்தில் இருப்பதை நித்திலனும், இந்திராவும் கண்டார்கள். ஆனால் அதைப்பற்றி உத்ராவிடம் பேசிடத்தான் யாருக்கும் தைரியம் பிறக்கவில்லை. நல்ல நாளில் கமலி நித்திலனின் மணமும் முடிய அம்மாவின் முகத்தில் மறுபடியும் பழைய மகிழ்ச்சி திரும்பியிருந்தது. இதற்காக எதையும் இழக்கலாம் என்று தோன்றியது சித்ராவின் பார்வை அது கமலி நித்திலனிடமும் பதிந்தது. 

ரவாயில்லையே உத்ரா இப்போ சிக்னல் கிடைக்கிறதே நேற்றிலிருந்து உன் மொபைலுக்கு டிரை பண்றேன் ஆனா ....அங்கே ஒண்ணும் பிரச்சனையில்லையே ?

நித்திலின் அதே அன்பான அக்கறையான குரல் பல மைல் தூரத்திற்கு பிறகு இருந்த போதும் ஆறுதலாய் வழிந்தது.

இங்கே கடல் அருகில் இருக்கிறேன் நேற்று சைட் சீயிங் நித்திலன் அதனால் கொஞ்சம் டவர் கிடைத்திருக்காது, இரவு வர நேரமாகிவிட்டது அதனால்தான் நான் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாமே என்று நினைத்தேன். அம்மா, அக்கா லட்சுமி எல்லாரும்

நலம்தான் அவர்களைப் பற்றியெல்லாம் நீ ஏதும் கவலைப்படாதே உத்ரா நானிருக்கிறேன் உன்னுடைய இடத்தில் இருந்து நான் அவர்களையெல்லாம் கவனித்துக்கொள்கிறேன். நீ மட்டும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போன் செய்துவிடு,

பேசிவிட்டு போனை வைக்கும்போதே இப்படி அன்பான மைத்துணன் கிடைப்பது அரிது என்றே தோன்றியது. எல்லாம் கடவுளின் ஆசீர்வாதம். 

தொடரும்...

Episode # 03

Episode # 05

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.