(Reading time: 11 - 21 minutes)

ருள்மொழி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படிருந்தாள். சிறிது நேரத்திற்கு முன் ஆனந்தி தான் பேசியிருந்தார். ஒரு மாதிரி சங்கடத்தோடு பேசியதிலேயே அவருக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது என்பது அவளுக்கு புரிந்தது. மீண்டும் இவளை நேரில் பார்த்து பேச அழைத்திருந்தார். இந்த முறை இவளுக்கே அங்கு செல்வதற்கு விருப்பமில்லை தான்.. அடிக்கடி அமுதனின் முகத்தை பார்க்க வேண்டியுள்ளதே என்றிருந்தது. இவளின் சங்கடத்தை புரிந்தவராக,

“நாளைக்கு அமுதன் கூட வீட்டில் இருக்க மாட்டான்ம்மா.. அவன் வேலை செஞ்சிட்டிருந்த கம்பெனியோட சென்னை ப்ராஞ்சிலேயே இப்போ அவன் வேலை பார்க்கப் போறான்.. அதனால நீ வீட்டுக்கு வரலாம்மா..” என்று கெஞ்சலோடு கேட்டார்.

உடல் நலம் சரியில்லாதவரிடம் மறுக்கவும் மனம் வரவில்லை. அதே சமயம் அன்னையிடம் இது குறித்து எதுவும் கூறாமல் இருப்பதும் உறுத்தலாக இருந்தது. இன்றே பொய் சொல்லிவிட்டு தான் சென்றாள். இதில் நாளையும் பொய் சொல்லிவிட்டு செல்வதா. என்று யோசித்தாள்.இதில் நாளை அறிவை உடன் அழைத்து செல்லவும் முடியாது.. அடிக்கடி அமுதன் வீட்டுக்கு சென்றால், அறிவு அதை வேறுவிதமாக அர்த்தம் எடுத்துக் கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு. அதனால் செல்வதா வேண்டாமா என்று யோசித்தவள்,

நாளை தெளிவாக “இனி உங்களை இதுபோன்று பார்க்க வருவது என்னால் முடியாத காரியம்..” என்று தன் நிலையை விளக்கி அவரிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டவள், நாளை அவரை பார்க்க செல்வதை யாரிடமும் சொல்லாமல் இருப்பது மனதிற்கு உறுத்தலாக இருக்க, சிறிது நேரம் யோசித்தவள், ஒரு முடிவுக்கு வந்தவளாக எழிலரசிக்கு தொடர்பு கொண்டு ஆனந்தி பேசிய விஷயத்தை கூறியவள், போகட்டுமா? என்று அனுமதி கேட்டாள்.

எழிலும் “ஒருமுறை தானே சென்று பார்த்துவிட்டு வா..” என்று அனுமதி கொடுத்தவள்,  பின் யோசனையில் ஆழ்ந்தாள். நேற்று அவளிடம் அனைத்தையும் சரி செய்துவிடலாம் என்று ஆனந்தி கூறியதற்கான அர்த்தத்தை யோசித்து பார்த்தாள். நடந்த தவறை ஒருவேளை ஆனந்தி சரி செய்திட நினைக்கிறாரோ..  அப்படி மட்டும் நடந்தால், தன் சகோதரி பற்றி அவளுக்கு நன்றாக தெரிய்ம் என்பதால், கலை கண்டிப்பாக இதற்கு சரி என்று தான் சொல்வார். அப்படி ஆனந்தி நினைத்தது நடந்துவிட்டால், அருளின் வாழ்க்கையோடு சுடரின் வாழ்க்கையும் சரியாகிவிடும் என்று எழில் நம்பினாள்.

ப்ரண்ட்ஸ் என்ன சின்ன அப்டேட்டா இருக்கேன்னு நினைக்காதீங்க.. உன் நேசமதே என் சுவாசமாய் கடைசி அத்தியாயத்திற்கு கொஞ்ச நிறைய நேரம் தேவைப்படுவதால், கொஞ்சம் இந்த கதைக்கு சின்ன சின்ன அப்டேட் தான் கொடுக்க முடிகிறது. 2,3 அத்தியாயங்களுக்கு இப்படித்தான்.. அதன்பிறகு கொஞ்சம் அதிக பக்கம் கொடுக்க முயற்சிக்கிறேன். அப்புறம் இன்னும் சில அத்தியாயங்களில் நாம ப்ளாஷ்பேக் போயிடலாம். இந்த கதை ஆரம்பிச்சப்ப ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காம கொண்டு போகணும்னு தான் அப்பவே ஹீரோ, ஹீரோயின் யாருன்னுல்லாம் சொல்லிட்டேன். அப்படியும் பழக்கதோஷம் சஸ்பென்ஸை மெய்ண்டெயின் செய்ய வேண்டியதா இருக்கு.. அதை சீக்கிரம் உடைச்சிடலாம் .. மறக்காம உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள். நன்றி.

உறவு வளரும்...

Episode # 15

Episode # 17

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.