(Reading time: 16 - 32 minutes)

உணவு மேஜைக்கு வந்தவன் ஆருத்ராவை தூக்கி வைத்து கதைபேசி விளையாடி அதன்பின் உணவருந்த ஆரம்பித்தான்.பேச்சும் சிரிப்புமாய் உணவை முடித்து சாரு கிளம்பத் தயாராக அபினவ் அவளை ட்ராப் செய்வதற்காக கார் சாவி எடுத்துக் கிளம்பினான்.

திஷானியிடம் அர்த்தமுள்ள பார்வை பதித்து தான் கூறியதை நினைவில் வைத்துக் கொள்ள சொல்லி ஜாடை காட்டிச் சென்றாள்.காரை கிளப்பி வாசலை தாண்டியவுடன் அவளே பேச்சை ஆரம்பித்தாள்.

“திஷானி தான் கூப்டுருந்தாங்க..கால் பேசினப்போ அவங்க வாய்ஸே சரியில்லை அதான் வர மாட்டேன்னு சொல்ல முடில..”

“ஹே என்ன இது புதுசா எக்ஸ்ப்ளனேஷன்லா குடுத்துட்டு இருக்க லூசு..நா இதுவரை உன்னை இன்வைட் பண்ணதேயில்லையேனு தான் பீல் பண்ணிட்டு இருக்கேன்..”

“ச்சச்ச அதெல்லாம் இல்ல பக்கி பெலோ..திஷா கூப்ட்டு நா வர்றது வேற நீங்க பேச்சுலரா இருக்கும் போது வர்றது வேற தான..அதெல்லாம் ப்ராப்ளம் இல்ல..நா உங்க கிட்ட பேச வந்ததே வேற..பட் எப்படி ஆரம்பிக்குதுனு தெரில..”

“என்னாச்சு டா திஷா எதுவும் சொன்னாளா..என்ட்ட பேச எதுக்கு இவ்ளோ தயங்குற?”

“அப்படியில்ல..என்ன தான் ப்ரெண்ட்ஸ்னாலும் உங்க பர்சனல்ல தலையிடுறது  கொஞ்சம் ஹெசிட்டேட் ஆகுது..”

“லூசு அவளே உன்னை நம்பி கூப்ட்டு பேசிருக்கா அப்பறமும் நீ என்ன இப்படி யோசிக்குற எதுவாயிருந்தாலும் சொல்லு டீ..”

“அபி அவங்க உங்களை ரொம்ப ரொம்பவே நேசிக்குறாங்க..அவங்க உலகமாவே பாக்குறாங்க..பட் அட் த சேம் டைம் குழந்தைங்கிற விஷயத்துக்கு அவங்க இன்னும் பக்குவ படலையோனு தோணுது..”

“ம்ம் நானும் நினைச்சேன் இதை..சடனா அவ வித்யாசமா பிகேவ் பண்ணவுடனே சட்டுனு எனக்கு அதை எப்படி எடுத்துக்கனு தெரில டா..”

“ம்ம் புரியுது பட் அவங்க பயம் குழந்தை பெத்துக்குறதுல இல்ல.ஒருவேளை அந்த குழந்தையும் அவங்களை மாதிரியே ஆய்ட்டா என்ன பண்றதுனு தான்..”

“வாட் ரப்பிஷ்..எந்தகாலத்துல இருக்கா அவ..நிஜமாவே இதுதான் அவளோட பயமா?”

“ம்ம் ஆமா அபி..அப்படி பொதுவா அதை முட்டாள்தனம்னு சொல்லிட முடியாது..அவங்க எத்தனை இழப்புகள் அவமானங்களை சந்திச்சுருப்பாங்க அதோட பயம்தான்..பட் இது நிரந்தரம் கிடையாது நிச்யமா..நானும் நிறையவே பேசிருக்கேன்..அவங்ககிட்ட எதார்த்தத்தை புரிஞ்சுககோங்கனு தான் சொன்னேன் பட் உங்ககிட்ட தான் அவங்க தாட்ட நியாயப்படுத்தி பேசிட்டு இருக்கேன்.

கொஞ்சம் டைம் கொடுங்க அவங்களுக்கு நிச்சயமா அவங்க பயம் மறையும் சீக்கிரமே..உங்க லவ் அதை நிச்யம் செய்யும்.ப்ரெண்ட்ஸே இல்லனு சொன்னவங்க இப்போ அவங்களா தேடி ந்து தன் மனசுல இருக்குற விஷயத்தை ஷேர் பண்றாங்கனா எவ்ளோ பெரிய விஷயம் இந்த பதினைஞ்சு நாள்ல அதுவே நடக்கும் போது இதெல்லாம் கண்டிப்பா மாறும்..சோ அதுவரை நீங்க தான்..”

“ம்ம் புரியுது சாரு..கண்டிப்பா நா பாத்துக்குறேன் இதை அவ என்கிட்டேயே நேரா சொல்லிருக்கலாம்..பட் பரவால்ல உன்கிட்டையாவது ஷேர் பண்றாளே அதுவர சந்தோஷம்..ரொம்பவே பாவம்டா அவ..லைவ்ல நிறைய மிஸ் பண்ணிருக்கா..அதெல்லாத்தையும் அவளுக்கு மொத்தமா ஈடுகட்டணும் நிச்சயமா நீ சொல்ற அந்த டைம் அதையெல்லாம் நிறைவேத்தும் ..நா பாத்துக்குறேன்..ஆனாலும் உன்னையெல்லாம் ஒரு ஆளுனு மதிச்சு பேசிருக்கா பாரு..என்னத்த சொல்ல..”,என விளையாட்டாய் முடிக்க,

“ம்ம் நேரம் தேவைதான் புருஷனும் பொண்டாட்டியும் நல்ல சென்டிமெண்ட் சீன் ஓட்டிட்டு இப்போ பேச்சை பாத்தியா..ஆளும் மூஞ்சியும்..”

“ம்ம் அவ தலையெழுத்து நீ தான் ப்ரெண்டா அமையணும்னு விதி யாரை விட்டது..பாவம் என் திஷா பேபி..”

“ஹய்யோடா ரொம்பத் தான்..ஓவரா பேசினா அவங்ககிட்ட உங்க எப் பி ப்ரெண்ட்ஸ் எல்லாம் இன்ட்ரோ குடுத்துருவேன் பரவால்லையா..”

“பிசாசே என் வாழ்க்கையை இழுத்து மூடனும்னா முதல் ஆளா வந்துருவியே..உன்ட்ட பேசினதுக்கே ஆரம்பத்துல மேடம் கண்ணாலையே எரிச்சாங்க..இதுல மொத்த ப்ரெண்ட் லிஸ்ட் பத்தா அவ்ளோ தான் சோறே போடமாட்டா..”

“ஹா ஹா பரவால்ல..பதினைஞ்சு நாள்லயே புருஷனுக்கான அத்தனை க்வாலிடீஸும் பக்காவா வந்துருச்சே..நல்லது தான்..”,என்று அவள் சிரிக்க அடிப்தை போல் கை ஓங்கியவனும் அவளோடு சிரிப்பில் இணைந்து கொண்டான்.

அவளை இறக்கிவிட்டு உள்ளே செல்லும் வரை காத்திருந்து கிளம்பியவன் வீட்டை அடைய அனைவருமாய் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவனும் இயல்பாய் சென்று திஷானியின் அருகில் அமர்ந்துகொண்டான்.டீவியை பார்த்துக் கொண்டிருந்தலும் அவ்வப்போது அவளின் தவிப்பான பார்வை தன்னை தீண்டிச் செல்வதை கவனித்தவனுக்கு புரிந்தது சாரு தன்னிடம் எதையும் கூறியிருப்பாளோ என்ற தவிப்பிருந்தது அந்த பார்வையில்.

இருந்தும் தானாய் எதையும் கேட்க வேண்டாம் என முடிவு செய்தவன் அமைதி காத்தான்.சற்று நேரத்தில் அனைவருமாய் உறங்கச் செல்ல தயக்கமாய் உள்ளே வந்தவளை கண்டவன் அவள் வாய்திறக்கமாட்டாள் என்ற முடிவில் பேச்சை ஆரம்பிக்க எண்ணி வாய்திறந்த நேரம்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.