(Reading time: 16 - 32 minutes)

“அபிப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..”

அவளின் அழைப்பே அவள் மனநிலையை உணர்ந்த கைநீட்டி அவளை தன்னருகில் அழைத்தான்.தயக்கமாய் வந்தவள் அவனருகில் அமரப் போக அவளை தடுத்தவன் தன் மடியில் அமர்த்தினான்.

குழந்தையைப் போல் அவளை சுற்றி கைப்போட்டு அவள் தோளில் தன் தாடையை பதித்தவன்,

“இப்போ சொல்லு திஷா பேபி..”

“இல்லங்க நமக்கு வந்து..அது..”

“அட எதுவாயிருந்தாலும் சொல்லு திஷாம்மா..”

“நாம கொஞ்ச நாளுக்கு அப்பறம் குழந்தையை பத்தி யோசிக்கலாமா!!ஏனோ அந்த விஷயம் மைண்ட்ல வந்தாலே என்னால சகஜமா இருக்க முடில..இதை உங்ககிட்ட சொல்லாம குழப்பத்தோட இருக்குறதுக்கு சொல்லிடுறது பெட்டர்னு தான்..சாரி தப்பா எடுத்துக்காதீங்க..”

“இதுல தப்பா நினைக்க ஒண்ணுமேயில்ல திஷா..இன்பேக்ட் நானே உன்கிட்ட இதைப்பத்தி பேசணும்னு இருந்தேன்..என் திஷா பேபியை ரொமான்ஸ் பண்ணி கொஞ்ச நாள் டார்ச்சர் பண்ணலாம்னு எனக்கும் தோணிச்சு ஜுனியர் வந்துட்டாங்கனா அப்பறம் என் பொண்டாட்டி என்னை கண்டுக்கவே மாட்டா தான..சோ இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு..”,என விளையாட்டாய் தன் சம்மதத்தை அவளிடம் தெரிவித்தான்.

“உங்களுக்கு கோபமே வராதா!!எப்படி எல்லாத்தையுமே சாதாரணமா எடுத்துக்குறீங்க?”

“ஆஹா இது நல்லாயிருக்கே அப்போ கோபபட்டா சமாதானப்படுத்த ஸ்பெஷலா கவனிப்பியா டியர்?”,என்றவன் கவள் கழுத்து வளைவில் இதழ்பதித்தான்.

“ஐயோ போதும் தெரியாம கேட்டுட்டேன்..”,என எழுந்து கொண்டவள் என்ன நினைத்தாளோ அவனருகில் அமர்ந்து மடியில் தலைசாய்த்துக் கொண்டாள்.

ஒன்றும் கூறாமல் அவள் தலையை வருட ஆரம்பித்தவன் தன் கால் நனைத்த ஒரு துளி நீரில் அவள் கண்ணைத் துடைத்தவாறே,

“ஓய் நாதான் பாப்பாவ பத்தி இப்போ யோசிக்க வேண்டாம்னு சொல்லிட்டனே அப்பறம் எதுக்கு அழற?”,என நக்கலாய் கேட்க,

“நா உங்களுக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுக்குறேன்ல..”

“ஹே லூசு..இப்போ அப்படி என்ன நடந்துருச்சு..ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு இவ்ளோ ஃபீலிங்க்ஸ்லா ரொம்வே அதிகம் சொல்லிட்டேன்..”

“இல்லங்க எனக்கே தெரியுது நா பண்றதெல்லாம் ரொம்ப டார்ச்சர்னு ஆனாலும்..”

“திஷா பேபி..ரொமன்ஸ்பண்ற நேரத்துல இப்படி அழுகாச்சி சீன் ஓட்டுறதே தப்பு இதுல இப்படி தேவையில்லாம பேசி நீயும் குழம்பி என்னையும் படுத்தி இதெல்லாம் எவ்ளோ பெரிய அநியாயம் தெரியுமா?”

அந்த அழுகையையும் மீறி அவள் நிமிர்ந்து பார்த்து அவனை முறைக்க அதற்காகவே காத்திருந்தவன் அவளிதழை சிறைப் பிடித்திருந்தான்.அவளின் குழப்பம் பயம் கவலை அனைத்திற்கும் வடிகாலாய் அந்த ஒற்றை இதழ் ஒற்றல் இருக்க நிமிடங்கள் நீண்டு கொண்டே போனது…மூச்சு காற்றுக்காக ஏங்கிய இதழ்கள் நான்கும் ஒரு கட்டத்தில் பிரிய மனமின்றி பிரிய கண்கள் நான்கும் சந்தித்துக் கொள்ள தடுமாறி நின்றன.

அவன் மடியிலிருந்து எழுந்தவளுக்கு படுக்க இடம் கொடுத்து அவன் நகர முகம் மொத்தமும் பரவியிருந்த வெம்மையோடு அவனை ஏறிடக் கூட தைரியமில்லால் படுத்திருந்தவளை தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தவன்,

“என்னை கஷ்டப்படுத்துறதா நினைச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காம நிம்மதியா தூங்கு திஷாம்மா..குட் நைட்”,என்றவனின் இயத்துடிப்பை கேட்டவாறே உறங்கிப் போனாள் திஷானி.

தொடரும்...

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1198}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.