“என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி (2)
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா...கண்கள் காணுமா...காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா”
அந்த நாளின் விடியல் திஷானிக்குள் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தது.காலையிலேயே எழுந்தவள் வேகமாய் அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு தன்னவனை எழுப்புவதற்காக தங்களறைக்குச் சென்றாள்.
முகத்திலிருந்த புன்னகை சற்றே பெரிதாக கணவனின் அருகில் அமர்ந்தவள் அவன் கன்னத்தில் இதழ்பதித்து,”குட்மார்னிங்க..”
லேசாய் அசைந்து படுத்தவன் அரைகுறை தூக்கத்தில் கண்விழித்து அவளைப் பார்க்க சிரித்தவாறே அவள் மடியில் படுத்து தூக்கத்தை தொடர ஆரம்பித்தான்.
சிலி நிமிடங்கள் அவன் கேசத்தை வருடியவள் நினைவு வந்தவளாய்,”டைம் ஆச்சுங்க ஆல்ரெடி லேட்..”
“ம்ம் போலாம் போலாம் என் பொண்டாட்டியே இன்னைக்கு தான் வழிக்கு வந்திருக்கா அந்த வாய்ப்பை மிஸ் பண்றதாயில்ல..ஆமா என்ன காலைலேயே இப்படி ஒரு சர்ப்ரைஸ்!?”
“ம்ம் இனி தினமும் இப்படிதான்..”,என மென்குரலில் கூறியவளை விழிவிரிய பார்த்தவாறே எழுந்து அமர்ந்தவன்,”அட இதுகூட நல்லாயிருக்கே..என் காட்டுல இனி மழை தான்னு சொல்லு திஷா டியர்..”
“ம்ம் போதுமே..எழுந்தவுடனே ஆரம்பிக்காதீங்க..போங்க போய் ரெடி ஆய்ட்டு வாங்க டிபன் ரெடி பண்ணிட்டேன்..சாப்டலாம்..”
“நீ இப்படி ஒரு குட்மார்னிங் சொன்னதுக்காகவே இன்னைக்கு புல்லா நீ என்ன சொன்னாலும் கேட்பேன் திஷா பேபி..”,என்று அவள் இடுப்பில் குறுகுறுப்பு ஏற்படுத்தியவாறே குளிக்கச் சென்றான்.
அவள் அமைதியாய் இருந்தாலே இவன் ஆட்டம் தாங்காது இன்று அவளே தயக்கத்தை தகர்த்தபின் கேட்கவும் வேண்டுமோ,குளித்து வெளிவந்து தயாராவதற்குள் இரண்டு மூன்று முறை அவளை அழைத்து அதை எங்கே இதை எங்கே என அதை அவள் எடுக்கும் நொடிகளில் அவளை ஒரு வழி செய்து வைத்தான்.அடுத்த முறை அவன் அழைத்த போது பொறுமையிழந்தவராய் சாரதா திஷானியிடம்,
“ம்மா அவனுக்கு இன்னைக்கு என்ன தான் ப்ரச்சனை மீட்டிங் இருக்கோ என்னவோ இப்படி போட்டு படுத்தி எடுக்குறான்.நீ அவன் ரெடி ஆகுற வர அங்கேயே இருந்து எடுத்து கொடுத்துட்டு வா..பாவம் எத்தனை தடவை தான் நடக்குறது நீயும்,,போ டா”,என அவளை அனுப்பி வைத்தார்.
திஷானியோ மனதிற்குள் தலையில் அடித்துக் கொண்டாள்.”கடவுளே!!மானம் போகுது..நா பேசாமயே இருந்துருக்கலாம்.எனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலையோ??!”,என்று எண்ணியவள் அறைக் கதவை வேகமாய் திறந்து கொண்டு அவனைத் திட்டுவதற்கு வாயெடுத்தவள் அவனைக் காணாது மெதுவாய் உள்ளே வந்து அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
அதற்காகவே காத்திருந்தவனோ கதவின் பின்னிருந்து வந்து அவளை பின்னிருந்து இறுக்கிக் கொண்டான்.
“ஐயோ ஒரு குட்மார்னிங் சொன்னது குத்தமா என்ன இந்த பாடுபடுத்துறீங்களே..”,என்றவள் போலியாய் அலுத்துக் கொண்டாள்.
“ம்ம் ரொம்ப தான் மேடம் சலிச்சுக்குறீங்க..சரி நா ஆபீஸ் கிளம்புறேன்..பை”,என நகரப் போனவனை தன்புறம் வேகமாய் இழுத்தவள்,ஒரு நிமிடம் அவன் விழி நோக்கி நிற்க,”என்னடீ??”,என்றவனின் குரலில் சற்றே தைரியத்தை வர வைத்தவள் அவன் இதழோடு இதழ் சேர்த்திருந்தாள்.
நடப்பதை உணர சில நொடிகளே ஆன போதும் சட்டென சுதாரித்தவாறு தன்னவளினுள் தன்னை தொலைத்தான்.நிமிடங்கள் கரைந்தோட சற்றே நிதானித்தவன் அவளை விடுவிக்க,”ஹவ் அ குட் டே..”,என்றாள் மெதுவாய்..
“லைஃப்ல பர்ஸ்ட் குட் டே இது தான்னு நினைக்குறேன்..திஷா டியர் பேசாம லீவ் போட்றவா..”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் கிளம்புங்க”,என்றவள் கதவை திறந்து நிற்க அவனோ உள்ளே அலமாரியை நோக்கிச் சென்றான்.
“என்னாச்சுங்க எதுவும் மறந்துட்டீங்களா?”
Thank you and keep rocking. 👌