(Reading time: 15 - 30 minutes)

ஆனா எனக்கு என் பர்த் டேவ விட இது தான் ரொம்ப முக்கியமான நாள் அபிப்பா..”,என்றவள் மீண்டும் தன்னவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.

சில நிமிடங்களுக்கு என்ன பேசவென தெரியாமல் வாயடைத்து போயிருந்தான் அபினவ்.

“தான் மணக்கப் போகிறவளின் உடல் பலவீனம் அதனால் அவளுள் இருக்கும் மனவோட்டங்கள் அனைத்தும் தெரிந்துதான் திருமணம் செய்வதாய் எண்ணியிருந்தான்.ஆனால் இப்போது இவள் கூறும் விஷயம் எத்தனைப் பெரியது.எத்தனை உண்மை..நண்பர்களும் காதலர்களும் சாதாரணமாய் கூறிக் கொள்ளும் ஒரு வார்த்தை இந்த மிஸ் யூ..ஆனால் இன்றுதான் உன்னிடம் தான் முதல் முறையாய் உரைக்கிறேன்.

வாழ்விலேயே நீ தான் முதல்முறையாய் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை உணர்த்தியிருக்கிறாய் என்று கூறுவதை கேட்கும் போது நிச்சயம் ஐ லவ் யூ என்பதை விட ஆயிரம் மடங்கு உயிர்வரை சென்று தித்திக்கத்தான் செய்கிறது இந்த வார்த்தை..”,என தன்னுள் உழன்றவன் நடைமுறையை உணரும் நேரம் அவன் மடியில் கூடுகண்ட பறவையாய் படுத்து கால்களைக் குறுக்கி படுத்திருந்தவள் லேசாய் தலைத் திருப்பி தன்னவனைப் பார்த்தாள்.

“ஏன்ங்க எதுவும் பேசமாட்றீங்க..ரொம்ப மொக்கை போட்டுடேனா?”

“அடியேய் கருப்பழகி என்னை நாளுக்கு நாள் உன்மேல பைத்தியமா மாத்திட்டு இருக்க டீ..இனி ஐ லவ் யூ கூட யாருக்கு வேணாலும் ஈசியா சொல்லிருவேன் ஆனா மிஸ் யூ சொல்லவே தோணாது..அது உனக்கே உனக்கான வார்த்தை திஷா பேபி..மிஸ் யூ டூ..”,என்றவன் அவள் இதழ் நோக்கி குனிய சட்டென அவனை தள்ளிவிட்டு எழுந்தமர்ந்தாள்.

“அடிப்பாவி பக்கம் பக்கமா வசனம் பேசிட்டு இப்போ இது என்ன அநியாயம்!!”

“ம்ம் லேட்டா வந்ததுக்கு பனிஷ்மெண்ட்”,அவள் அசால்ட்டாய் கூறினாள்.

“உன் வீணா போன பனிஷ்மெண்ட்ல தீயை வைக்க..டீச்சர் தான நீ இந்த பெஞ்ச் மேல ஏத்தி விடுறது..ஸ்கேல் வச்சு அடிக்குறது இப்டிதான பனிஷ் பண்ணணும்..”

“ஹா ஹா அதெல்லாம் குழந்தைங்களுக்கு..கோட்டானுக்கு இல்ல..”,என்றவள் மேலும் சிரிக்க பொய் கோபத்தோடு அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.

தன்னவனை ரசித்தவாறே அவனருகில் சென்று பின்னிருந்து அணைத்து விடுவித்தாள்.

அவள்புறமாய் திரும்பியவன் அவள் மூக்கை பிடித்து அசைத்து ,”ஆனாலும் ரொம்ப தான் பண்றீங்க டீச்சர் மேடம்..ஆமா நாளக்கு ஸ்கூல் போனும் தான எல்லாம் எடுத்து வச்சுட்டியா?”

“ம்ஹும் இல்லங்க..வாழ்க்கைல இவ்ளோ நாள் லீவே போட்டதில்ல..அதனாலயோ என்னவோ ரொம்ப கடுப்பா இருக்கு பட் பசங்க முகத்தை பார்த்தா சரி ஆய்டுவேன்..காலைலயே எடுத்து வச்சுக்குறேன் எல்லாம் ஆல்ரெடி ரொம்ப லேட் நீங்களும் தூங்குங்க..”

“ம்ம் திஷாம்மா நீயும் நல்லா தூங்கு நாளைலயிருந்து உன்னை லோன்லியா பீல் பண்ண விடாம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு..சரியா..லவ் யூ சோ மச்..”,என நெற்றியில் இதழொற்றி தன்னோடு சேர்த்தணைத்து உறங்கினான்.

றுநாள் கண்விழிக்கும் போதே காபியின் நறுமணம் நாசி தொட அருகில் கணவனை காணாமல் விழிகளை கசக்கியவாறே எழுந்தமர்ந்தவள் தன்னருகில் கையில் காபியோடு அமர்ந்தவனை பார்த்து விழி விரித்தாள்.

“பேபி…காலைலேயே கண்ணுக்குள்ள போட்டு அமுக்கிறாத என்னை..குட் மார்னிங் டியர் பொண்டாட்டி..ஹவ் அ ஹாப்பி ஸ்டார்ட்..”

“ஐயோ என்னங்க இதெல்லாம் நா எழுந்து பண்ணிக்க மாட்டேனா..நைட்டும் லேட்டா தூங்கிட்டு ஏன் இப்படி சீக்கிரமே எழுந்து உக்காந்துருக்கீங்க..”

“ஒருநாள்ல ஒண்ணும் ஆகாது டியர்..என் பொண்டாட்டி மிஸர்ஸ் அபினவா பர்ஸ்ட் டே வேலைக்கு போக போறா..அதுக்குதான் இதெல்லாம்..காபி ஆறதுக்குள்ள வந்து எடுத்துக்கோ..”

சம்மதமாய் தலையசைத்தவள் எழுந்துசென்று பல்துலக்கி வர இருவருக்குமாய் இருந்த காபி கோப்பைகளை எடுத்துக் கொண்டு அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தவனின் அருகில் சென்றாள்.

“என்னங்க தேடுறீங்க??காபி எடுத்துக்கோங்க”

“ம்ம் இன்னைக்கு இந்த ட்ரெஸ் ஓ.கே வா உனக்கு”,,என ஒரு புடவையை எடுத்துக் காட்டியவாறே காபியை பருக ஆரம்பித்தான்.

“இது எப்போ வாங்கினீங்க நா பாக்கவேயில்லையே!!!”

“அதெல்லாம் பக்காவா ப்ளான் பண்ணுவோம்..கல்யாண புடவை எடுக்க போனப்போ இந்த புடவையும் பிடிச்சுதுனு எடுத்து வச்சேன் டியர்..பர்ஸ்ட் டேக்கு இது ஓ.கே தானா இல்ல இன்னும் பெட்டரா வேணும்னா வேற எடுத்து கட்டிக்கோ..”

“உங்க செலெக்ஷன் எப்பவுமே பெஸ்ட் தான்..இதையே கட்டிக்குறேன்..”,என்றவள் சிரிக்க

“இதெல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா இன்னும் குட்மார்னிங் வரவேயில்லையே”,என்றவன் தன் காரியத்தை சாதித்துக் கொண்டான்.

அதன்பின் வேகமாய் வேலைகளை முடித்து தங்கள் இருவருக்குமாய் மதிய உணவை பேக் செய்து முடிக்க சாரதா காலை உணவை தான் பார்த்துக் கொள்வதாய் கூறி அவளை தயாராக அனுப்பி வைத்தார்.

குளித்து முடித்து  அபினவ் கொடுத்த புடவையை கட்டி முடித்தவள் தலையை வாரி பூவைச் சூடிக் கொண்டு தன்னை சரிபார்த்து திரும்ப அபினவ் குளித்து முடித்து வெளியே வந்தான்.

“வாவ் கருப்பழகி பின்ற போ..கல்லாயணத்துக்கு அப்பறம் இப்போ தான் புடவை கட்டிருக்க..பேசாம ஸ்கூல் லீவ் போட்டு அத்தானோட ரொமான்ஸ் பண்ற வேலையை பாக்கலாம் தான”

“பாசமா புடவையை எடுத்து குடுக்கும் போதே யோசிச்சுருக்கனுமோ..”என்றவள் குறும்பாய் சிரித்தாள்.

அவன் பதில் பேசும் முன் சாரதா அவர்களை அழைக்கும் சத்தம் கேட்க தன்னை தாண்டி போக எத்தனித்தவளை ஒரு நிமிடம் நிறுத்தியவன் கீழேயமர்ந்து அவள் புடவையை நீவி சரி செய்து அனுப்பினான்.

“நீ போ திஷா பேபி..நா டூ மினிட்ஸ்ல ரெடி ஆய்ட்டு வரேன்”,என அனுப்பி வைத்தான்.

இருவருமாய் சாப்பிட்டு முடித்து பெரியவர்களிடம் ஆசிப் பெற்று கிளம்பினர்.தானே அவளை பள்ளியில் ட்ராப் செய்துவிட்டு உள்ளே செல்லும் வரை நின்று கையசைத்துச் சென்றான்.

தொடரும்...

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1198}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.