(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - அன்பின் அழகே - 11 - ஸ்ரீ

anbin Azhage

கேட்டு ரசித்த பாடல் ஒன்றை

மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட

என்னை உன்னை எண்ணி யாரோ

எழுதியது போலவே தோன்ற

 

இனிமேல் இனிமேல் இந்த நானும் நான் இல்லை

போய் வா போய் வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்

மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்

மிக எளிதாய் எங்கும் நடந்தேன்

இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன் நான்

நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்

கூந்தல் என்னும் ஏணி ஏறி முத்தமிட ஆசைகள் உண்டு

நெற்றி மூக்கு உதடு என்று இறங்கி வர படிகளும் உண்டு 

திஷானியை இறக்கிவிட்டு அலுவலகத்தை அடைந்தவன் அப்போதுதான் நேரத்தை பார்க்க அவளுக்காக சீக்கிரமே கிளம்பியது நினைவிற்கு வந்தது.சட்டென நினைவு வந்தவனாய் சாருவிற்கு அழைத்தான்.

சொல்லு எரும..என்ன காலைலேயே கால் ஆபீஸ் போற ஐடியா இல்லையா..”

ஐயையையே அதெல்லாம் வாயா இல்ல வேற எதாவதா பேசவே விடமாட்டியா மனுஷன?””

சரி சரி சொல்லுங்க..சாப்டீங்களா?”

ம்ம் நீ

ம்ம் ஆச்சு..இன்னைக்கு என்ன பஞ்சாயத்து வர வர புருஷனும் பொண்டாட்டியும் போன் பண்ணாலே பக்குனு இருக்கு!!”

ஆமா இவங்க பெரிய ஐக்கோர்ட் ஜட்ஜ் பஞ்சாயத்தை தீர்த்து வைக்க போறாங்க..போவியா..”

என்ன ரொம்ப நல்ல மூட்ல இருக்குற மாதிரி இருக்கு..நா வேணா திஷானிக்கு கால் பண்ணி எப் பில உங்க ஃபேன் ஒருத்தி யாரு அவ..பேரு கூட..”

சனியனே வாய்ல வசம்ப வச்சு தேய்க்க..நா சந்தோஷமா இருந்தா பொறுக்காதே உனக்கெல்லாம்..இப்போ என்னை பேசவிடுவியா மாட்டியா?”

ஹா ஹா ஹப்பாடா இன்னைக்கு பொழுது எனக்கு ரொம்ப நல்லாயிருக்கும்..சொல்லுங்க என்ன விஷயம்..”

இல்ல டீ  நேத்து  திஷா ரொம்ப எமோஷனல் ஆய்ட்டா..நீ அன்னைக்கு சொன்னது கரெக்ட் தான் ரொம்பவே சென்சிடிவானவ தான் அவ.”

“”ம்ம் உண்மைதான் எப்பவுமே தன் சக்திக்கும் மீறி தைரியமா இருக்குறவங்க எல்லாமே மனசளவுல ரொம்பவே பலகீனமா தான் இருப்பாங்க என்ன அதை யார்கிட்டேயும் காட்டிக்க மாட்டாங்க..”

எனக்கு ரொம்ப ஒரு மாதிரி ஆய்டுச்சு அவ எந்தளவு தனிமையை வெறுத்துப்பானு புரிஞ்சுக்க முடிஞ்சுது..அவ மனசுவிட்டு பேசினதே உன்கிட்ட மட்டும்தான்னு நினைக்குறேன்..எனக்கு விஷயம் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல ஆனா அவளாவே மேலோட்டமா விஷயத்தை சொல்லிட்டா..அதை என்கிட்ட தெளிவுபடுத்தின அப்பறம் எந்த தயக்கமும் இல்லாம பேசுறா..”

ம்ம் புரியுது..கொஞ்ச நாளைக்கு அந்தடாபிக் பத்தி பேச்சு வராம பாத்துகோங்க..அதே நேரம் இன்டரெக்டா அவங்க பயத்தை போக்குறதுக்கு கொஞ்சம் பேச்சு குடுங்க..எல்லாம் சீக்கிரமே சரி ஆய்டும்..எப்போ என்ன ஹெல்ப்னாலும் என்கிட்ட கேளுங்க கண்டிப்பா பண்றேன்..சரியா..”

ஓ ஹெல்ப் பண்ண மாட்டேன்னு வேற சொல்வீங்களா மேடம்..போடி லூசு உனக்கெல்லாம் வேற ஆப்ஷனே இல்ல..நாளைக்கே எங்களுக்கு குழந்தை பொறந்த அப்பறம் அதை நீ தான் வளர்க்கனும்..நாங்க செகண்ட் ஹனிமூன் கிளம்பிடுவோம்..புரியுதா!”

ம்ம் ரொம்ப தேவைதான்.என் புள்ளையை வளர்க்குறதுக்குள்ளயே எனக்கு நாக்கு தள்ளுது இதுல மறுபடியும் முதல்ல இருந்தா ஓடிருங்க,.”

ச்ச்ச எனக்கு தான் கல்யாணமே ஆய்டுச்சே என்ன போய் ஓடிப் போக சொல்ற..”

அடிச்சை உங்க மூஞ்சிக்கு திஷானியே அதிகம் இதுல இன்னோன்னு வேறயா..போய்யா போய் பொழப்பை பாரு..”

போடி லூசு..பை..”,என அழைப்பைத் துண்டித்தவன் முகத்தில் புன்னகை தழும்ப,

தேங்க்ஸ் பார் எவ்ரிதிங் எருமமாடு..”,என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தன் வேலையை கவனிக்கத் தொடங்கினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தன்னவன் அழகாய் ஆரம்பித்து வைத்த நாள் முழுவதுமே அழகாய் இருந்தது திஷானிக்கு..

மாலை 4 மணிக்கு வீட்டிற்கு வந்தவளிடம் ராகவனும் சாரதாவும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

“என்னடா மருமகளே இன்னைக்கு எப்படி போச்சு?”

“நல்லா போச்சு மாமா..அந்த வாண்டுங்க பண்ற அட்டகாசத்தையெல்லாம் பார்க்க பார்க்க அலுக்கவே மாட்டேங்குது..”

“ம்ம் அது என்னவோ உண்மைதான் குழந்தைங்க கடவுளுக்குச் சமம்னு சும்மாவா சொல்றாங்க.. சரி நீ போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா திஷானி டிபன் எடூத்து வைக்குறேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.