(Reading time: 11 - 22 minutes)

“சரி அத்தை இதோ பத்து நிமிஷத்துல வரேன்..”,என்றவாறு தங்களறைக்குச் சென்று தயாரானவள் சாரதா கொடுத்த காபியையும் டிபனையும் வாங்கி உண்ண ஆரம்பித்தாள்.

“இன்னைக்கு காலைல கடைக்கு போய்ருந்தேன்டா..இந்த சில்க் த்ரெட் செட் பாத்தேன் ரொம்ப அழகா இருந்தது..சரி உனக்கு நல்லாயிருக்குமேனு வாங்கிட்டு வந்தேன்.பிடிச்சுருக்கா கலர் வேற வேணும்னா சொல்லு மாத்திக்கலாம்.”

“அத்தை சூப்பரா இருக்கு..இந்த கலர்ல என்னோட பேப்ரட் சாரி இருக்கு..உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதா நீங்களும் யூஸ் பண்ணலாமே அத்தை..”

“இல்லடா இவ்ளோ ஹெவியா எல்லாம் போட மாட்டேன்.சின்ன பசங்க நீங்க போடுங்க நா அழகு பாக்குறேன்..”

“ஒரு நிமிஷம் அத்தை இதோ வரேன்”,என்று எழுந்து சென்றவள் வரும்போது கையில் ஒரு சிறிய பெட்டியோடு வந்தாள்.

“இந்த மாடல் எல்லாம் பாருங்க கண்டிப்பா நீங்க யூஸ் பண்ற மாதிரி சிம்பிள் டிசைன்ஸ் தான் “

“எல்லாமே அழழகா இருக்குடா ஆனா ஏன் ஒரே டிசைன்ல இத்தனை வாங்கிருக்க வேற வேற வாங்கிக்கலாமே..”

“அத்தை இது எல்லாமே நானே பண்ணது..எனக்கு இந்தமாதிரி வொர்க் எல்லாம் பண்ண ரொம்ப இஷ்டம்..அதனால ப்ரீ டைம்ல இப்படி எதாவது பண்ணிட்டே இருப்பேன்.நீங்க இப்போ இதை பத்தி பேசின அப்புறம் தான் இது இருக்குறதே நியாபகம் வந்தது..”

“அட பரவால்லையே டா வேற என்னனென்ன பண்ணுவ!!எனக்கும் இதெல்லாம் ரொம்ப இஷ்டம் இனி இந்த வீட்ல எனக்கு கம்பெனிக்கு ஆள் இருக்கு..”

“போச்சா ஏற்கனவே உங்க அத்தை புதுசா எதையாவது பண்றேன்னு என்னை போட்டு படுத்தி எடுப்பா இப்போ நீயுமா..இந்த பையன் மட்டும் ஜாலியா எஸ்கேப் ஆய்ட்டானே..”,என ராகவன் போலியாய் அலுத்துக் கொண்டார்.

“மாமா இதுக்காகவே டெய்லி ஒரு ப்ராடக்ட் செஞ்சு வீட்டை எப்படி மாத்துறோம் பாருங்க..என்ன அத்தை சொல்றீங்க?”

“அவரு கிடக்குறாரு நாம அசத்தலாம்..உனக்கு என்ன பொருளெல்லாம் தேவைப்படும்னு சொல்லு நாளைக்கு காலைல நா வாங்கி வைக்குறேன்.”

“பெருசா ஒண்ணுமில்ல அத்தை..பேசிக் பெயிண்ட் ப்ரஷ் க்ளு இந்தமாதிரி வாங்கினா போதும் மத்தபடி நம்ம வீட்ல உள்ள வேஸ்ட் திங்க்ஸ் வச்சு பண்ணிக்கலாம்..”

என உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தவளை வாசலிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான் அபினவ்.

ஐந்து நிமிடம் கழித்து உள்ளே நுழைந்தவனை கண்டவளின் கண்களில் அப்படியாய் ஒரு மகிழ்ச்சி ஏதோ பல வருடம் கழித்து சந்தித்ததை போன்ற அன்பு பார்வை.அவள் பார்வையில் தொலைந்தவன் பிறரரியாமல் அவளை கடிப்பதைப் போன்று உதட்டை அசைக்க சட்டென பார்வையை நகர்த்திக்கொண்டாள்

“என்ன ப்பா  பலமான டிஸ்கஷன் போய்ட்டுஇருக்கு”,என்றவாறே சோபாவில் அமர்ந்தவன் வழக்கம் போல் சாரதா மடியில் படுத்துக் கொண்டான்.

“டேய் அபினா எப்போ தான் இந்த பழக்கத்தை மாத்துவியோ..நாளைக்கே என் பேரனோ பேத்தியோ வந்தா உன்னோட போட்டி போட்டு உன்னை பாத்து சிரிக்க போகுதுங்க..”

என்று அவர் கூறும்போதே திஷானியின் முகமலர்ச்சி லேசாய் மறைவதை கண்டவன் வேண்டுமென்றே அன்னையிடம்,

“ம்மா அதெல்லாம் பண்ணமாட்டாங்க அப்போ நா சமத்தா என் பொண்டாட்டி மடிக்கு ஷிப்ட் ஆய்டுவேன்.இப்போ அப்படி பண்ண முடில அதனால தான் இப்படி”,என திஷானியை பார்த்து கண்சிமிட்ட அவளோ வெட்கத்தை மறைக்க பெரும் பாடுபட்டாள்.

“அதானே பாத்தேன் பொழைக்கத் தெரிஞ்சவன்டா நீ..”,என ராகவன் செல்லமாய் அவன் காலைத் தட்டினார்.

“வாடா சாப்டலாம் அதிசயமா சீக்கிரம் வந்துருக்க எல்லாரும் ஒண்ணா சாப்டலாம் வா..”

“ம்ம் இதோ டூ மினிட்ஸ்ப்பா..”

பெரியவர்களும் நாசூக்காய் எழுந்து கொள்ள திஷானி தன்னவனோடு தங்களறைக்குச் சென்றாள்.

“திஷா பேபி எப்படி போச்சு இன்னைக்கு டே”,என்றவன் அவளை கைநீட்டி அழைக்க அவனருகில் அமர்ந்தவள்

“ப்ப் சூப்பரா போச்சுங்க..எல்லாரும் ரொம்ப மாறிட்டேன்னு சொன்னாங்க..ஆனா எனக்கு அப்படி எதுவுமே தெரியல..”

“ஹா ஹா ம்ம் மேபி என் செலெக்ஷன் ஆப் ட்ரெஸ்னால இருக்குமோ”,என காலரைத் தூக்கிவிட்டு கொண்டான்.

“ஓரளவு உண்மைதான் நா இந்தளவு மெனக்கெட்டு எல்லாம் ட்ரெஸ் பண்ணிணதேயில்ல அதனால கூட இருக்கும்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.