(Reading time: 11 - 22 minutes)

“இனி டெய்லியுமே உன்னை எப்படி அனுப்புறேன்னு பாரு..ஆமா நா வரும்போது நீயும் அம்மாவும் செம சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தீங்களே!!!என்ன அது??”

“காசிப் கேக்குறீங்களா??அதெல்லாம் சொல்ல முடியாது!”,என்றவள் குறும்பாய் சிரிக்க

“ஓஓ அவ்ளோ ஆய்டுச்சா சரி அப்போ உங்க அத்தையோடயே ரொமான்ஸ் பண்ணு நா கோவமா போறேன்..”

“ஹா ஹா நீங்க இன்னும் வளரவேயில்லையே..அம்மா மடில படுத்துக்குறீங்க சின்ன புள்ள மாதிரி சண்டை போடுறீங்க..ஒரு கம்பெனியோட மேனேஜர்னு கொஞ்சமாவது நியாபகம் இருக்கா?”

“அடப் போடீ என்னை பொறுத்த வரை நா இன்னும் ஸ்கூல் கோயிங் தான்.மனசையும் அப்படி வச்சுக்கதான் பிடிச்சுருக்கு..சோ சும்மா வெளி உலகத்துக்கு தான் மேனேஜர்..வீட்ல ஆல்வேஸ் நா நானாதான் இருக்க நினைக்குறேன்.”

“ம்ம் அதான் அழகும்கூட..”,என்றவள் லேசாய் சாய்த்திருந்த தலையை உயர்த்தி அவனை ஓரப் பார்வை பார்த்தாள்.

“பார்ரா..மேடம் காம்ளிமெண்ட்லாம் தரீற்ங்க..பட் இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பாக்குறேன்”,என்றவன் குறும்புச் சிரிப்பு அவனின் பொருளுணர்த்த மறுப்பேதுமின்றி தன் அதரங்களை அவனிடத்தில் ஒப்படைத்தாள்.

இரவு உணவை முடித்து திஷானி சமையலறையை சுத்தம் செய்ய சாரதாவிற்கு உதவச் சென்றாள்.அபினவிற்கு ஆபீஸ் அழைப்பு வரவே மொபைலை எடுத்துக் கொண்டு தனதறைக்குச் சென்றான்.

திஷானி வந்த பின்புமே அவன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தான்.திஷானியும் அவனுக்காக பொறுமையாய் காத்திருக்க அவனருகில் அமர்ந்து லேப்டாப்பை கவனித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் போனை வைத்தவன்,”இந்த ப்ரெஷ்ஷர்ஸை வச்சு என்னத்த பண்றதுனே தெரில..ப்ரொடெக்ஷன் சர்வர்ல கை வைக்கும் போது கேர்புல்லா இருக்கணும்னு அக்கறையே இல்ல..கோடிங்ல போய் தப்பு பண்ணி வச்சுருக்குதுங்க..

ஆல்ரெடி தலைவலி ஆரம்பிச்சுருச்சு இப்போ முதல்ல இருந்து கோட் வேற கடவுளே..டோட்டலி வேஸ்ட்”

“டென்ஷன் ஆகாதீங்க சரி பண்ணிடலாம்.பொறுமையா பாருங்க..”,எனும் போதே அவனுக்கு க்ளைண்ட் கால் வர எடூத்துக் கொண்டு அவசரமாய் பால்கனிக்குச் சென்றான்.

அவன் எழுந்ததும் சிஸ்டமை தன்புறம் திருப்பியவள் கோட் பேஜை ஓபன் செய்து கவனிக்க ஆரம்பித்தாள்.

கால் பேசி முடித்து வந்தவன் அவளருகில் அமர,”இப்போ கோட் ரன் பண்ணி பாருங்க..வொர்க் ஆகும் கண்டிப்பா”,என்றாள்.

“வாவ் திஷா பேபி டீபக் பண்ணிட்டியா..எப்படி இப்படியெல்லாம்..”,என்றவாறே அதை பரிசோதித்துப் பார்க்க சரியாய் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது.

“வாவ்வ்வ் மை திஷா டியர் தேங்க் யூ சோ மச்..பெரிய தலைவலியை கம்மி பண்ணிருக்க தெரியுமா..டூ மினிட்ஸ் இதோ வரேன்..”,என மொபைலை எடுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றவன் அடுத்த அடுத்த வேலைகளை முடித்தபின் திஷானியை அழைத்தான்.

வந்தவள் அமராமல் அவன் பின்புறம் நின்று அவன் தலையை நீவி விட ஆரம்பித்தாள்.

“ஹே பரவால்ல நீ உக்காரு..நீயும் எவ்ளோ நேரம் நின்னுட்டு இருந்துருப்ப டயர்டா இருக்கும் வா கொஞ்ச நேரம் இப்படிஉக்காரு அதுக்காக தான் கூப்டேன்..”

அப்படியே ஒருவிரல் வைத்து அவனை அமைதியாய் இருக்க செய்தவள் சில நிமிடங்கள் கழித்து வந்து அவனருகில் அமர்ந்தாள்.

சற்றும் யோசிக்காது அவள் காலையெடுத்து தன் மடியில் வைத்தவனிடமிருந்து அதை இறக்க முடியாமல் தவித்தவள் எவ்வளவோ கூறியும் அவன் விடுவதாய் இல்லை.

இதமாய் காலை பிடித்துவிட ஆரம்பிக்க திஷானிக்கோ அது மிகவும் தேவையான ஒன்றாய் தோன்றியது அத்தனை இதம் அந்த அழுத்தத்தில்.கால்கள் இத்தனை சோர்வாய் இருந்திருக்கிறதா என அப்போது தான் உணர்ந்தாள்..

ஒவ்வொரு விரல்களாய் நீவி விட்டவன் அவள் முகத்தின் இலகுத் தன்மையை பார்த்து கால்களை பிடித்துவிட்டவாறே கதை பேச ஆரம்பித்தான்.

“ஆமா ஐடி விட்டு வந்து வருஷமாயிடுச்சே இருந்தும் எப்படி கோடிங் எல்லாம் இப்படி பட்டையை கிளப்புற?”

“இல்ல வேலையை விட்டுட்டாலும் அப்பப்போ டூல்ஸ் அப்டேட் பண்ணிட்டே தான் இருப்பேன்.சி எஸ் நா ரொம்பவே விரும்பி எடுத்த டிகிரிங்க..அதனாலேயோ என்னவோ அது விட்டாலும் நா அதை விடமாட்டேன்,.”,எனச் சிரித்தாள்.

“ஆனாலும் நீ ஒரு பல்கலை வித்தகியா இருக்கியே இன்னும் என்ன திறமையெல்லாம் ஒளிச்சு வச்சுருக்கியோ தெரில..”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க..சின்ன லாஜிக் தான்.சின்ன வயசுல என் குறையை பாத்து எல்லாருமே என்னால அது முடியாது இது முடியாதுனு சொல்லுவாங்க..அப்போவே மனசுல ஒரு வெறி என்னால முடிஞ்ச அத்தனையையும் கத்துக்கணும்னு.அதுக்காக எல்லாத்துலயும் பெஸ்ட்னு கிடையாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.