(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்

ennavale

ந்தையின் வார்த்தைகளை ரிஷி நம்ப முடியாமல் வாசலலில் நின்று கொண்டு இருந்தான்.

கீதாவை, பார்க்கும் முன்னரேயே அவளைபற்றி தப்பாக கூறியவர் சதாசிவம். 

ஆனால், இன்று அவர் வாயால் கீதா தவறான பெண் இல்லை என்பதை கேட்ட பின் ரிஷி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்.

இது, இதுதான் என்னவளின் குணம் அவளது முகத்தை  பார்த்த பின்னர் யார்யாக இருந்தாலும் அவளை தவறாக எண்ண முடியாது.

கீதாவின் நினைவில் நின்று கொண்டு இருந்தவனை அவனது தந்தையின் பேச்சு குரல் இடைமறித்தது.

ஆமா, பருவதம் எனக்கு அந்த பொண்ணை பார்க்கும் போது ஏதோ பெரிய தப்பு செஞ்சுட்டதா போல இருக்கு.

உண்மையை சொல்ல போன, என்னால அந்த பொண்ணு முகத்தை பார்க்கவேயே முடியல மா .... என்று கூறிய அண்ணனை வித்தியாசமாக பார்த்தார். பருவதம் அம்மாள்.

தனது தொழிலில் இந்த வயதிலும் முன்னணியில் இருப்பவர் . அண்ணி இறந்த பின்பு இன்று வரை ரிஷியை தனியாக இருந்து வளர்த்து ஆளாக்கியவார். 

எதற்கும் பயப்படாதவர், தங்கையான பருவதம் அம்மாளை  தனது கண் போல பராமரித்து கல்யாணம் செய்து கொடுத்தவர்.

இப்படிபட்ட  தனது அண்ணா, இன்று கீதாவை பார்க்கும்  பொழுது பயமாக உள்ளது என்று கூறுவதை நம்ப இயலாது தனது அண்ணாவை பார்த்தார்.

தங்கையின் பார்வையை உணர்ந்து,  சதாசிவமேயே  மீண்டும் பேச்சை தொடர்ந்தார். 

அந்த பெண்ணை முதல் முதலாக போட்டோவில் பார்த்த போதேயே எனக்கு இப்படி தான் இருந்தது.

என்ன அண்ணா  சொல்றிங்க? நீங்க கீதாவை போட்டோல பார்த்திங்களா? எப்ப? எப்படி? என்று அதிரிச்சியுடன் கேட்டார் பருவதம் அம்மாள்.

ரிஷி, என்னிடம் கீதாவை பற்றி சொன்ன பொது அவனை நான் திட்டி அனுப்பிவிட்டேன்.

ஒரு ஆணுடன் திருமணத்திற்கு முன்பேயே தனியாக தங்கி இருப்பவளை. நல்ல பண்பு உள்ளவாள் என்று  நான்  எப்படிம்மா நினைக்க முடியும் . 

ஆனால், அதேயே  நேரத்தில் ரிஷி அவளை உண்மையாக நேசிக்கிறான் என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.

தனது தந்தை தனக்காக யோசித்து இருக்கிறார் என்பதை உணர்ந்த ரிஷி. திருமணத்திற்கு முன்பு கீதா தன்னுடன் சேர்ந்து வாழ்ந்தது தவறு என்பதை இப்பொழுது புரிந்து கொண்டான்.

இந்த ஒரு காரணத்திற்காக அவர் கீதாவை அன்று அப்படி திட்டி உள்ளார். கீதா, தன்னுடன் இருக்க  மாட்டேன் என்று தான் சொன்னாள்.

ஆனால், நான்தான் அவசரப்பட்டு விட்டேன் . எல்லாம் என் தவறுதான். ஒரு வேலை, கீதா தன்னுடன் வாழாமல் இருந்து இருந்தால் இந்நேரம் தனது தந்தை தனக்கும் கீதாவிற்கும் திருமணம் கூட செய்து வைத்து இருப்பார் என்று ரிஷிக்கு தோன்றியது.

முதல் முதலாக, தனது தவறை ரிஷி உணர்ந்து  இருந்தான்.

தொடர்ந்த அவர்களது உரையாடலையும் கேட்டான்.

முதலில் ரிஷியிடம் இருந்து கீதாவை பிரித்து விட வேண்டும். கண்டிப்பாக, அவள் நல்ல பெண்ணாக இருக்க மாட்டாள் என்று எண்ணி தான்  அவர்கள் தங்கி இருந்த நமது  வீட்டிற்கு நான் சென்றேன்.

ஆனால், அங்கேயே  கீதா இல்லை. அவளது தாய்க்கு உடம்பு சரி இல்லை என்று அவரது மாமா வந்து கூட்டி சென்று விட்டதாக நமது தோட்டக்காரன் கூறினான்.

அண்ணா, கீதா தன்னை ஒரு அனாதை என்று தான் என்னிடம் கூறினால். ஆனால், நீங்க  அம்மா மாமானு புது புது உறவு முறைகளை சொல்றிங்க.... எனக்கு ஒண்ணுமேயே புரிலன்னா.... என்று  தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார் பருவதம் அம்மாள் .

வாசளில் நின்று கொண்டு இருந்த ரிஷியும் குழப்பத்துடன் தான்  இருந்தான்.

ரிஷிக்கு , இப்பொழுது தான் கீதாவை அவரது மாமா வந்து கூட்டி சென்று உள்ளார் என்பது தெரிந்து  இருந்தது. ஏனேனில், கீதா ரிஷிக்கு எழுதி வைத்து இருந்த கடிதத்தில் இது போன்று ஏதும் குறிப்பிட வில்லை. 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தன்னுடன் வாழ இஷ்டம் இல்லை என்றும் தன்னை மறந்து விடவும் என்று மட்டுமேயெ எழுதி இருந்தாள். தன்னை தேட முயற்சிக்க வேண்டாம் என்றும்  குறிப்பிட்டு இருந்தால்.

அவளுடன் தான் இட்ட சண்டையால் தான் அவள் சென்று விட்டால் என்று மனம் நொந்து போயிருந்தான் ரிஷி.

மேலும், தனது தந்தையின் மீது இருந்த கோபத்தில் அவரையும் அவன் காண செல்லவில்லை. தனது நண்பனின் வீட்டில் மூன்று மாதம் தங்கி இருந்தான்.

அப்படியே, கீதாவை தேடினான். அவள் வெளியூர் சென்று படிப்பாள் என்றும் அவன் எண்ணவில்லை.

கீதாவின், விஷயத்தில் அவனுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமேயெ......

ஆனால், இன்று கீதாவை அழைத்து சென்றது அவளின் மாமா என்று அப்பா கூறியதும் ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.