(Reading time: 10 - 20 minutes)

பருவதம் அம்மாள் அண்ணா என்ற அலறலுடன் அவர் அருகில் சென்றார்.

இவர்களது பேச்சை கேட்டு குழம்பி நின்று கொண்டு இருந்த ரிஷியும் அத்தையின் அலறல் சத்தத்தில் அறைக்குள் ஓடினான் .

சிவகாமிஅம்மாள்  காட்டிய போட்டோவை பார்த்து கீதா அதிர்ச்சி அடைந்தாலும், அதை  சிவகாமி அம்மாள் முன்பு கீதா காட்டிக்கொள்ளவில்லை.

சிவகாமி பற்றி சேகர் சொல்லி இருந்தாலும், சிவகாமி அம்மாள் இந்த அளவிற்கு புத்திசாலியாக இருப்பார் என்று கீதா நினைத்து கூட பார்க்க வில்லை.

சிவகாமியிடம், இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கீதா நினைத்தாள்.

சிவகாமி அம்மாள் காட்டிய படத்தை பார்த்தவரேயே, இந்த போட்டோ நன்றாக தான் இருக்கிறது. இதற்கு என்ன? என்பது போல கீதா முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் கேட்டால்.

சிவகாமி சிறிது அதிர்ந்தாலும், ரொம்பவேயே நல்ல நடிக்கிற நீ? இந்த வீட்டு மருமக  கண்டிப்பா நீ இல்லைன்னு  எனக்கு தெரியும்.

என்கிட்ட உன் நடிப்பை காட்டாத....... இந்த போட்டோவை இப்ப நான் என் அக்கா பருவதம் அம்மாளிடம் காட்டினாயா? என்ன ஆகும் தெரியுமா?

பொய் சொல்லி என் வீட்டுக்குள்ள நுழைஞ்ச உன்னை கழுத்த பிடிச்சு வெளிய தள்ளிடுவாங்க....

அதுக்குள்ள, நீயும் இந்த வீட்டு வாரிசுன்னு சொல்லி எடுத்து வந்து இருக்கியே ஒரு குழந்தை அதையும் தூக்கிட்டு வெளில போய்டு..... என்று அங்காரத்துடன் கூறிய சிவகாமி அம்மாளை பார்த்து கீதா நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

கீதாவின் சிரிப்பை பார்த்த சிவகாமி அம்மாளுக்கு உடம்பு எங்கும் பற்றி எறிவது போல இருந்தது....

கோபத்தில், எதோ சொல்ல வந்த சிவகாமி அம்மாளை, கீதா அவளது கையால் போதும் நிறுத்துங்கள் என்பது போல சைகை செய்தாள்.

இப்ப என்ன உங்களுக்கு? நானும் ராஜகுட்டியும் இந்த வீட்டை விட்டு போகணுமா????? கண்டிப்பா எங்களால போக முடியாது .

உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க..... இந்த போட்டோவ பருவதம் அம்மாகிட்ட கூட போய் கட்டிக்கோங்க......  என்று ஏகதளமாக கூறினாள்.

வேணாம் கீதா , என்னை பற்றி உனக்கு தெரியாது.... நீ சின்ன பொண்ணு என்னை பகைச்சுக்கிட்டு பின்னாடி நீ ரொம்ம்ப கஷ்டப்படுவா.... என்று எச்சரிப்பது சிவகாமி அம்மாள் கூறினார்.

யாரு? உங்களை பற்றிய எனக்கா  தெரியாது.... நீங்க எப்படி சேகர் அப்பாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்கனு கூட எனக்கு தெரியும் ..... 

இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க, இந்த வீட்டுட்டோட மொத்த சொத்துக்கும் வாரிசு ராஜசேகர் யோட குழந்தை தான். அதை நான் ராஜகுட்டிக்கு வாங்கி கொடுக்காம போக மாட்டேன்...... என்று உறுதியுடனும் நிமிர் உடனும் கூறி விட்டு கீதா குழந்தையின் அறைக்குள் சென்று விட்டாள்.

கீதா, செல்வதை பார்த்த சிவகாமி அம்மாள்.  கோபத்தின் உச்சத்தில் நின்றார் .

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கையில் இருக்கும் போட்டோவை பார்த்தவர்..... சமயம் வரும் போது பருவதம் அம்மாளிடம் இதை காட்ட வேண்டும் என்று முடிவு எடுத்தார்.

கீதாவிற்கு கூடிய சீக்கிரத்தில் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தார்.

குழந்தையின் அறைக்குள் சென்ற கீதாவிற்கு ராஜகுட்டி தூங்கி கொண்டு இருந்த அழகை பார்த்து தனது மனதை சிறிது அசுவாசப்படுத்திக்கொண்டாள்.

அதற்குள், சிவகாமி அம்மாள் எப்படி இந்த போட்டோவை கண்டுபிடித்தார்.....   சிவகாமி அம்மாள் போட்டோவை வீட்டில் உள்ளவரிடம் காட்டும் முன் நான் எதாவது செய்தாக வேண்டும்.... என்று முடிவு எடுத்தாள்....

அதற்கு ஏற்றார் போல  கீதாவிற்கு ஒரு யோசனையும் தோன்றியது.... அதை உடனேயே பருவதம் அம்மாளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் நினைத்தாள்.

கீதாவின் யோசனை அவளுக்கு கை கொடுக்குமா???? இல்லை ரிஷியிடம் அவளை மாட்டி விடுமா?????

சிவகாமி அம்மாள் கீதாவை எப்படி வீட்டை விட்டு அனுப்ப போகிறார்?????  சதாசிவத்தின் வாழ்க்கையில் நடந்தது என்ன ?????? என்பதை அடுத்த episode  யில் பார்ப்போம்.........

Bye Viewers & chillzee  team...... thanks for your Support.......

தொடரும்

Episode # 08

Episode # 10

Go to Ennavale story main page

{kunena_discuss:1184}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.