(Reading time: 10 - 20 minutes)

அவளை யாராவது மிரட்டி கூட்டி சென்று இருப்பார்களோ?????

யார் இந்த மாமா ????? இதுவரை என்னிடம் கீதா கூறியது இல்லையே ............

அண்ணா, என்ன இது கீதாவின் வாழ்க்கையில் என்ன தான் நடந்தது? எனக்கு ஒன்றும் புரியவில்லை......

நீங்க  அவ ரிஷி கூட மூன்று மாதம் வாழுந்தனு சொல்றிங்க? ஆனா, கீதா இங்க ராஜசேகர் மனைவியாய் அவன் குழந்தையோட வந்து நிக்குற? 

என்னமா  சொல்ற? என்று சதாசிவம் அதிர்ச்சியுடன் கேட்டார்.

ஆமா,  அண்ணா.  ஆனால், கணவன் இறந்த பின்பும் நெற்றியில் குங்குமத்துடன் இருக்கிறாள். சிவகாமி, அவளது குங்குமத்தை அழிக்க கூறிய போது பாவம் தவித்து போய்விட்டாள் .

நான் தான் வேண்டாம் என்று கூறி விட்டேன்.

ஏன் அப்படி கூறினாய்? பருவதம்..... கணவனாய் இழந்தவள் எப்படி நெற்றியில் குங்குமத்துடன் இருக்க முடியும் சொல்லு????

இல்லை அண்ணா..... கீதாவின் நெற்றியில் இருக்கும் குங்குமத்தின் சொந்தக்காரன் கண்டிப்பாக என் மகன் சேகர் இல்லை. 

ஆனால், அவள் கையில் இருக்கும் குழந்தை என் வீட்டு வாரிசு தான் என்பதில் எனக்கு சிறிதும் ஐயம் இல்லை.

ஒரு வேலை,  அவள் நெற்றியில் இருக்கும் குங்குமத்தின் சொந்தக்காரன் ரிஷியாக கூட இருக்கலாம்......என்று மெதுவாக  கூறி தனது அண்ணாவை பார்த்தார்.

தனது தங்கையை முறைத்தவரேயே, கீதா முதலளில் மூன்று மாதம்  தாலி கட்டாமல் என் மகனுடன் சேர்ந்து வாழ்ந்தாள்.

இப்பொழுது, சேகரின் மனைவி என்று கூறுகிறாள். இதில் எது தான் உண்மை????? 

அண்ணா, நீங்கள் கூறுவது சரி தான்.  ஆனால், என்னால் கீதாவை தவறாக எண்ண முடியவில்லை. 

அவள், எதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறாள் என்பது மட்டும் எனக்கு புரிகிறது. ஆனால், அது என்ன வென்று தான் நமக்கு புரியவில்லை .

அவள் சேகரின் குழந்தையை என்னிடம் சேர்க்க தான் இங்கு வந்து இருக்கிறாள்.

தன்னை சேகரின் மனைவி என்று அழைப்பதை கூட அவள் விரும்பவில்லை. நமது சொத்து மீது கூட அவள் ஆசைப்படவில்லை.

கீதாவை பார்த்த பின்பு தான் நமது ரிஷியும் முன் போல இருக்கிறான்.

கீதாவிடம் தான் இந்த வீட்டின் சந்தோசமயே இருப்பது போல எனக்கு தெரிகிறது. நாம் தான் பொறுமையாக இருந்து கீதாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அண்ணா .....

நீ சொல்வது சரிதான் பருவதம்...... நான் கீதாவை பார்க்க சென்ற போது அந்த வீட்டையே இந்த பெண் மாற்றி வைத்து இருந்தாள்.

தினமும், பூஜைகள் செய்யப்பட்டு இருந்தது. அங்கு  வேலை செய்த அனைவரும் கீதாவை எனது மருமகள் என்றேயே நினைத்து விட்டனர் போல .... 

எல்லாரும், கீதாவை பற்றி உயர்வாக பேசினார்கள். அவள் எப்போது வருவாள் ? எப்போது ரிஷிக்கும் கீதாவிற்கும் கல்யாணம் என்று எல்லாம் கேள்வி கேட்டனர்.

எனக்கு கூட தாலி கட்டாமல் ஒரேயே வீட்டில் வாழந்தவள் மீது எப்படி இவ்ளோவு மரியாதை வைக்க முடியும் என்று எண்ணினேன்.

பின்பு, தான் எனக்கு புரிந்தது அவர்கள் ஒரேயே வீட்டில் வாழந்தாலும் அவர்கள் வெவேறு அறையில் தான் தங்கி இருந்து இருக்கிறர்கள்.

இதை, நமது தோட்டக்காரன் தான் பார்த்து இருக்கிறான். அங்கு இருந்து அனைவரும்  கீதாவை மரியாதையுடனும் பாசத்துடனும் கேட்டனர்.

அவளது குணம் எனக்கு அபோதேயே புரிந்தது . அதன் பின்னர், நான் ரிஷியின் அறையில் தான் கீதாவின் போட்டோவை பார்த்தேன்.

கீதாவை, இதற்கு முன்னரேயே எங்கேயோ பார்த்தது போல எனக்கு தோன்றியது பருவதம்  என்று சதாசிவம் கூறி முடிக்கும்  முன்னரேயே ....

எனக்கும் அப்படித்தான் அண்ணா உள்ளது. அவள் குங்குமத்தை அழிக்க மாட்டேன்னு என்று கூறிய போதும் கீதாவின் மீது எனக்கு கோபம் சிறிதும் ஏற்படவில்லை.

கீதா எனது மருமகள் என்று எனக்கு சிறிதும் தோன்ற வில்லை...... அவளை பார்க்கும் பொழுது எல்லாம் கீதா  எனது மகள் என்று தான் தோன்றுகிறது. என்று நெகிழிச்சியுடன் கூறினார்.

தாய் பாசத்துடன் பருவதம் அம்மாள் கூறுவதை கேட்ட சதாசிவம் தன்  நெஞ்சில் முள் குற்றுவது போல உணர்ந்தார்.

"நீங்கள், செய்த பாவத்திற்கு இந்த ஜென்மத்திலேயே உங்களை ஆண்டவன் கண்டிப்பாக தண்டிப்பான். உங்க கூட பிறந்த தங்கை நல்ல இருப்பதற்காக இப்படியா நடந்துபிங்க வெட்கமாக இல்லை "...... என்று

இறந்த போனா மனைவி லக்ஷ்மி கேட்ட வார்த்தைகள் இன்று சதாசிவத்தின்  காதில் கேட்டது. 

அறையின்  AC யை தாண்டியும் சதாசிவத்தின் உடம்பு எங்கும் வியர்த்து கொட்டியது. அப்படியே, நெஞ்சை பிடித்து கொண்டு கட்டிலில் சாய்ந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.