(Reading time: 15 - 30 minutes)

“ஓ..லேட்டா வவந்ததே தப்பு இதுல நீங்க என் மேல கோப படுவீங்களா?”

“ஐயோ அங்கிரி பேர்ட் ஃபுல் பார்ம்ல இருக்கியா!!செம டயர்டா இருக்கேன் டா ஒரு பைவ் மினிட்ஸ் சாப்ட்டு சண்டை போடலாமா..ப்ளீஸ் ப்ளீஸ்.”,என பாவமாய் கேட்பவனிடம் அதற்கு மேல் பேசத் தோன்றாமல் அமைதியாய் எழுந்து உணவு எடுத்து வைக்கச் சென்றாள்.

அபினவிற்கோ அத்தனை களைப்பையும் மீறி ஒருவித உற்சாகம் ஒட்டிக் கொண்டது..அத்தனை உரிமையாய் தன்னிடம் அவளின் கோபம் அவனுக்கு எரிச்சலை வர வைப்பதற்கு பதில் சிரிப்பையே அளித்தது.அதே உற்சாகத்தோடு உடைமாற்றி ரெப்ரெஷ் ஆகி வந்தவன் சாப்பிட அமர்ந்தான்.

“ஏன்டா இவ்ளோ லேட்டாவா வர்றது அவளும் உனக்காக சாப்டாம இருரக்கா..சரி ரெண்டு பேரும் சாப்ட்டு சீக்கிரம் போய் படுங்க..திஷானி கிட்சன்ல எல்லாம் அப்படியே இருக்கட்டும் காலைல பாத்துக்கலாம் நீ போய் படுத்துக்கோம்மா..”,என்றவாறு சாரதா உள்ளே சென்று கதவை தாளிடும் வரை அமைதியாய் இருந்தவன் அடுத்த நொடி அவளை தன் மடியில் அமர வைத்தான்.

“ப்ச்ச் என்ன பழக்கம் இது ஹால்ல வச்சு..விடுங்க..”

“ம்ம் என் திஷா பேபி எனக்காக சாப்டாம காத்திருக்கா அவளை கவனிக்குறதுக்கு இடம் பொருள் எல்லாம் கிடையாது..”,,என முதல் வாய் சாப்பாட்டை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டான்.

மறுக்காமல் வாங்கிக் கொண்டவள் தானும் தட்டிலிருந்து எடுத்து அவனுக்குக் கொடுத்தாள்.சிறிது நேரத்தில் எழுந்து சேரை எடுத்து அவனருகில் போட்டு அமர்ந்தவள் தட்டை கையிலெடுத்துக் கொண்டு அவனுக்கு கொடுக்க ஆரம்பித்தாள்.

“திஷாம்மா இன்னுமா கோபம்..ஏன் அமைதியாவே இருக்க..ஐயோ உன் கோவத்தை சமாளிக்குறது ரொம்ப கஷ்டம் போலேயே..”,என எப்படியாவது அவளை வாய் திறக்க வைக்க அவன் எடுத்த முயற்சி அனைத்துமே தோல்வியை தான் தழுவியது..

அதன்பின் சமையலறையை சுத்தம் செய்ய அவள் ஆரம்பிக்க அவனும் உதவி செய்யத் தொடங்கினான்.வேலையை முடித்து அறைக்குள் வர அபினவிற்கு ஆபீஸ் போன் வந்தது.கொலைவெறியோடு அவள் அவனை பார்க்க சாரி சாரி என செய்கை செய்தவாறே மொபைலை எடுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றான்.

பத்து பதினைந்து நிமிடங்கள் பேசிவிட்டு வந்தவன் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் அருகில் அமர அடுத்த நொடி அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.அவளின் அணைப்பே அவள் தன்னை எந்தளவு எதிர்பார்த்திருக்கிறாள் என்பதை உணர்த்தியது

“ஹே லூசு..”,என்றவனின் இதழ் புன்னகையில் விரிய அதை அப்படியே நிறுத்தியது அவன் சட்டையை நனைத்த அவளின் கண்ணீர்.

“ஏய் திஷாம்மா என்னடா என்னாச்சு உடம்புக்கு எதுவும் பண்ணுதா!!ஏன் அழற இப்போ?என்னனு சொல்லு டீ..”

“மிஸ்ட் யூ பேட்லி..”,அழுகையினூடே திக்கித் திணறி வந்து விழுந்தன வார்த்தைகள்.

கேட்டவனுக்கோ இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமென நிச்சயம் புரியவில்லை.வேகமாய் தன்னிடமிருந்து அவளை பிரித்தெடுத்தவன்,

“திஷா பேபி நானும் தான் உன்னை இன்னைக்கு ரொம்ப மிஸ் பண்ணேன் சத்தியமா ஆனா அதுக்காக ஏன் அழற??வேலைக்கு போகாம இருக்க முடியுமா நாளையிலிருந்து நீயும் தான் ஸ்கூல்க்கு போக ஆரம்பிச்சுருவ..இதானடா நம்ம ரொட்டீன் அதுக்காக இவ்ளோ பீல் பண்ணுவாங்களா?””

சற்றே சமாதானமடைந்தவள் வரவழைத்த தெம்போடு,”நீங்க சொல்றதெல்லாம் எனக்கும் புரியுது,.பட் இந்த கண்ணீருக்கு காரணம் என் வாழ்க்கைல முதல் தடவையா ஒருத்தங்கள மிஸ் பண்ணிருக்கேன்.அந்த பீல் எப்படி இருக்கும்னு இன்னைக்கு தான் உணர்ந்தேன்..அதனால தான் அழுகை வந்துருச்சு.கான்ட் கன்ட்ரோல் மை செல்ப்..”

அவளை பார்த்திருந்தவனுக்கோ அவளின் வார்த்தைகள் வியப்பையும் வலியையும் ஒரு சேர கொடுத்தது.

“திஷாம்மா இது வர நீ யாரையுமே மிஸ் பண்ணதில்லையா?”

“ம்ஹூம்..என் அப்பா இந்த உலகத்துலயே இல்ல ஆனாலும் அவரோட அன்பையோ அரவணைப்பையோ என்னைக்கும் நா எதிர் பார்த்தது கிடையாது.அம்மா எப்பவுமே வேலை வேலைனு ஓடுவாங்க கிடைச்ச நேரத்துல தான் பேசிக்க முடியுமே தவிர நினைச்ச நேரத்துல பேசிக்க முடியாது ஆனா அவங்களை கூட நா மிஸ் பண்ணதில்ல..அண்ணா தம்பி அக்கா தங்கை எப்படி எந்த உறவும் எனக்கு தேவைப்பட்டதில்ல..

ஆனா முதல் தடவையா உங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து வரலனு ஆனப்போ அந்த ஆற்றாமை வருத்தமா மாறி அந்த வருத்தம் கோபத்தை வர வச்சுருச்சு..எங்க உங்ககிட்ட பேசினா அழுதுருவேனோனு தான் அமைதியாவே இருந்தேன்.வந்ததும் வராததுமா அழுது உங்களையும் கஷ்டப்படுத்த வேண்டாமேனு தான்…

நிச்சயமா இந்த நாள் இந்த நிமிஷத்தை நா மறக்கவே மாட்டேன்ங்க..வாழ்க்கைல ரொம்ப பெரிய உணர்ச்சியை எனக்கு புரிய வச்சுருக்கீங்க..காதலோ வெட்கமோ நிச்சயமா பெரிய உணர்ச்சியில்லனு தோணுதுங்க..வாழ்க்கைல எத்தனையோ கஷ்டமான காலத்துல கூட தனியா நின்னவ நான்..ஆனா இன்னைக்கு வெறும் அன்புக்கும் அருகாமைக்கும் மட்டுமே உங்களைத் தேடுறேன்.இதெல்லாம் உங்களுக்கு பைத்தியகாரத் தனமா கூட தெரியலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.