(Reading time: 12 - 23 minutes)

“திட்டத்தில் ஒருவன் தான்.. இறக்கும் நாள் காலை வரை.. அதன் பிறகு நாங்கள் அவனை எங்களுக்காய் பயன்படுத்திக்கொண்டோம்..”

“பயன்படுத்திக்கொண்டீர்களா..?? புரியவில்லை..”, இது க்ரியா..

“உங்களுக்கு முதலில் இருந்து அனைத்தும் சொன்னால் தானே புரியும்..”, என்ற சுபலராஜா திட்டங்கள் வகுத்தது பற்றிக் கூறத்துவங்கினார்..

“ராமகிருஷ்ணன் ஹம்சவாணன் சக்ரவர்த்தி மூவரும்  ஒரே துறையினர் என்றபோதிலும் ராமுவை விட மற்ற இருவருக்குமே எங்கும் மதிப்பு.. சக்கிரவர்த்தியுடன் சேர்ந்த பிறகு அது பன்மடங்கு உயர்ந்தது என்றே கூறவேண்டும்..

ராமுவை பெரிய ஆள் ஆக்கவேண்டும் என்று எனக்கும் சீதாவிற்கும் ரொம்ப ஆசை.. ஆனால் அதற்கு தடையாய் நந்திபோல் மூவரும்..

அந்த சமயத்தில் தான் நீங்கள் செய்துகொண்டிருக்கும் இந்தப் ப்ராஜெக்ட்டைப் பற்றிய டீட்டெயில்ஸ் எல்லாம் ஒன்னொன்னா கிடைக்க ஆரம்பிச்சது..

ராமுவும் இவர்களுடன் இருந்தானே ஒழிய அவனுக்கான அங்கீகாரம் என்பது கிடைக்கவில்லை..

அப்பொழுது தான் ஏன் நாம் மட்டும் தனியாக இந்தப் ப்ராஜெக்ட்டை செய்தால் என்ன என்ற யோசனையும் கூடவே..

அதை ராமு தம்பிகள் இருவரிடமும் வெளிப்படுத்தினான்..

ஆனால் அவர்கள் இவன் பேச்சைக்காதில் வாங்கியதுபோலவே தெரியவில்லை..

மேலும் மேலும் இந்தப் ப்ராஜெக்ட் பற்றி தேடிச் சென்றுகொண்டேயிருந்தனர்..

ஒருபுறம் ராமு தனியாக முயற்சி செய்ய மறுப்புறம் இவர்கள் மூவரும் முயற்சி செய்தனர்,,

இரு தரப்பினருக்கும் வெற்றி கிடைக்கவில்லை என்றபொழுது அடுத்து என்ன செய்வதென்று மிகவும் யோசித்தபொழுது தான் இரண்டாம் ஓலைச்சுவடி பற்றி நினைவு வந்தது..

அதில் ஒன்றும் இல்லையென்ற போதிலும் எதுவோ உள்ளடங்கி இருப்பது போல்..

அதை வைத்து அடுத்தத் தேடலை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம்..

எங்களுக்கு உதவும் நண்பனாய் அச்சமயம் கைக்கொடுதான் நரீசன்..

நரீசன் அந்த ஓலைச்சுவடியை வாங்கிவரச் சொல்ல ராமுவும் ரிக்கி விக்கியின் பெற்றோரிடம் சுவடியைப் பற்றிக் கேட்டான்..

ஆனால் அவர்களோ அது தொலைந்துவிட்டதென்றனர்..

அது பொய் என்று எங்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது..

நரீசன் எங்களுக்கு உண்மையை வெளிப்படையாகவே நிரூபித்திருந்தான்..

இவர்களிடம் இனி மென்மையாகவும் பணிவாகவும் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்து ஆள் வைத்து இவர்களைத் தூக்கினோம்..

ஆனால் அதில் என் மருமகளை இழுந்துவிடுவேன் என்று துளிகூட எண்ணவில்லை..

உங்கள் பெற்றோர்களை சிறை எடுத்து சில வருடங்கள் சென்றபிறகு தான் தெரிந்தது அவர்களுக்கு செழுவூர் என்ற ஊரைத் தவிர இந்த ப்ராஜெக்டைப் பற்றி வேறு எதுவும் தெரியாது என்று..

இவர்களை வெளியே விட்டால் எங்களுக்கு ஆபத்து என்ற ஒரே காரணத்தால் விட்டுவைத்திருந்தோம்..

நான் கூட ராமுவிடம் இவர்களைக் கொன்று விடலாம் என்றேன்..

ஆனால் அவன் தான் தம்பிகள் என்ற பாசத்தில் ஒன்றும் செய்யவேண்டாம் என்று விட்டுவிட்டான்..

வருடங்கள் சென்றதே ஒழிய இந்தப் ப்ராஜெக்ட்டைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிட்டவில்லை எங்களுக்கு..

இடையில் நல்ல விஷயங்களும் அரங்கேறியது..

ராமு ஒரு நல்ல நிலையை அடைந்திருந்தான்.. உலகம் முழுவதும் பரவியது அவன் பெயர்.. டாப் ஆர்கியாலஜிஸ்ட் லிஸ்ட்டில் நிலையான ஒரு இடம் கிடைத்தது..

எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்தது என்று தான் நாங்கள் நினைத்து மீண்டும் இந்தப் ப்ராஜெக்ட்டை ராமு கையில் எடுத்த சமயத்தில் தான் அதெல்லாம் இல்லை என்பது போல் வந்து நின்றாய் தியா நீ..

ஆனால் நீ தான் சக்ரவர்த்தியின் மகள் என்று எங்களுக்குத் தெரிய ரொம்ப காலம் பிடித்தது..

நாங்கள் செய்த தவறு உன்னைப் பற்றி சரியாக விசாரிக்காதது தான்..

கூடவே இருந்து குழிபறித்துவிட்டாய்..”, என்று ஆத்திரமாக சொன்னவர் தன்னை நிலைபடுத்திக்கொண்டு, “உன்னை நேரில் காணும் இச்சமயம் உன்னை அப்படியே நெறித்துக்கொல்ல வேண்டும் என்று ஆத்திரம்.. ஆனால் அந்தப் புதையல் எடுக்க நீ முக்கியம்.. அதனால் சும்மா இருக்கிறேன்..”, என்றார் ஆவேசமாக..

“இன்னும் நீங்கள் சுஜன் அண்ணா இறந்தது பற்றிக்கூறவில்லையே..”, எதுவும் நடக்காதது போல் பொறுமையாகக் கேட்டாள் தியா..

ஒரு நிமிடம் அவளது பொறுமையைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டுத்தான் போயினர்..

அதே சமயம் சுற்றியுள்ளப் புதர்களில் ஒருவித சலசலப்பு யோரோ வருவதன் அறிகுறியாக..

வருவது யாரென்று தெரியாமல் சுற்றி காவலிருந்தவர்கள் அனைவருக்கும் ஒருவித பரபரப்பு..

கையில் ஆயுதங்களுடன் தயார் நிலையில் அனைவரும்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.