(Reading time: 12 - 23 minutes)

“வருவது நம் ஆள் தான்.. ஆயுதங்களை இறக்குங்கள்..”, என்றார் ராஜா..

அவர் சொன்னவுடன் ஆயுதம் ஏந்தியிருந்தவர்களின் கைகள் அப்படியே கீழே இறங்கியது..

புதரில் எழுந்த சலசலப்புகள் மேலும் மேலும் சத்தம் வைக்க எல்லா திசைகளிலும் இருந்தும் அவர்களைச் சுற்றி வளைத்து காட்டு நரிகள்..

ராஜா சுஷாஷன் சுயோதன் மூவரையும் தவிர மற்றவர்கள் பயம் கொள்ள அடியாட்கள் எங்கும் இங்கும் ஓடத்துவங்கினர் பயத்தில்..

உருவத்தில் மட்டுமே பயில்வான்கள் போல..

நரிகளின் ஊளைச் சத்தம் ஒருவித கோர திகிலைக் கொடுக்க இருக்க கண்களை மூடினர் அனைவரும்..

சிலருக்கு உடலோடு சேர்த்து உள்ளத்தில் நடுக்கமும்..

கண்மூடியிருந்தவர்களைக் கண்டு இடியிடியென சிரிப்புச் சத்தங்கள்..

மெதுவாக கண்த்திரந்தவர்கள் எதிரில் நரியுடன் மூவரும் சிரித்துக்கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி..

“என்ன பாக்கறீங்க.. இவர் தான் நரீசன்.. உங்களுக்குத் துணையாய் ஒரு அகிலன் இருப்பது போல் எங்களுக்குத் துணையாய் நரீசன்..”, என்றான் சுயோதன்..

தியாவின் மனதில் இப்படி ஒரு நரி இருப்பதைப் பற்றி அகிலன் ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி மட்டும் வண்டாய்..

“உன்னைக் கேள்விகளால் துளைத்துவிட்டார்கள் போல..??”, என்று ராஜாவிடம் கேட்டுக்கொண்டே இவர்களைப் பார்த்ததில் அத்தனை துவேஷம்..

“அதெல்லாம் ஒன்றும் இல்லை நரீ.. இவர்களுக்கு சுஜன் எப்படி இறந்தான் என்று தெரியவேண்டுமாம்..”, என்றார்..

“அதை இவர்கள் என்னிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்..”, என்ற நரீ மற்றவர்களிடம் திரும்பி, “உங்களுக்கு அவன் எப்படி இறந்தான் என்று தெரியவேண்டுமா..??”, என்று கேள்வி எழுப்பியது..

ஆம் என்பதாய் தலையசைப்பு தியாவிடமிருந்து..

“பெருசா ஒன்னும் செய்யலை தியா.. அவனின் பேராசையைத் தூண்டிவிடச் சொன்னேன்.. அதுவே அவன் அழிவுக்கு பாலமாய் அமைந்துவிட்டது..”, என்றது..

“நரீ அவங்களுக்குத் தெளிவாகச் சொன்னாலே ஒன்றும் புரியாது.. நீங்கள் இப்படிச் சொன்னா சுத்தமா புரியாது என்றவர், “நீங்கள் புதையல் எடுக்கப் போறீங்களே அதன் சாவி அந்த குட்டைக்குள் (சுஜன் மூழ்கி இறந்த குட்டையைச் சுட்டிக்காட்டி) தான் இருந்தது.. அதுவே விலைமதிப்பில்லா ஒன்று.. அதை எடுத்தால் சில பல ஜெனரேஷனுக்கு வேலை எதுவும் செய்யாமல் சுகமான வாழ்க்கை வாழலாம் என்று தூண்டிவிட்டேன் அன்று அவனை..

சுஜனும் தன் நிலை உயரவேண்டும் என்ற பேராசையின் இரவோடு இரவாக அந்தச் சாவியைத் தேடி இங்கு வந்து சேர்ந்தான்..

குட்டைக்குள் இறங்கி சாவியும் எடுத்துவிட்டான்.. பரிதாபம் என்னவென்றால் அவனை சுழல் போல் ஒன்று உள்ளே இழுக்கத் துவங்கியது..

நானும் ராமுவும் அவனைக் காப்பற்றுவது போல் நடித்து சாவியை அவனிடம் இருந்து பெற்றுக்கொண்டு மீண்டும் அவனை அந்தக்குட்டையிலேயே தள்ளிவிட்டுவிட்டோம்..”, என்றார் பெருமையாக..

எழிலும் தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் அந்நிமிடம்.. தாங்கள் அன்று நினைத்தது போலவே நடந்திருக்கிறது என்று..

“அந்த அகிலன் எங்க.. வரைபடத்துடன் அப்படியே ஓடிட்டானோ..??”, நக்கலாய் கேட்டது நரீசன்..

“நாங்கள் ஓட வேண்டிய அவசியம் இல்லை நரீசா.. தப்பு செய்த நீங்கள் தான் ஓடவேண்டும்..”, சிவசிஷ்யன் கருடன் அன்னம் சகிதம் வந்தான் அகிலன்..

“அது எப்படி அகிலா எப்பொழுதுமே சரியான நேரத்திற்கு வந்து சேர்கிறாய்.. அன்றும் இன்றும் என்றும்..??”

“தீயவர்கள் கையில் எதுவும் செல்லக்கூடாது என்ற எண்ணம் தான் என்னை இங்கே அழைத்துவந்திருக்கிறது..”, என்றவன், “சாவியைக் கொடுத்துவிடு நரீசா..”, என்றது தீர்க்கமாக..

எப்பொழுதும் ஒரு வித ஜாலி மூடிலேயே அகிலனைப் பார்த்திருந்தவர்களுக்கு அவனின் இந்தப்புது அவதாரம் புதிதே.. ஒரு வித ஆளுமையுடன் தெரிந்தான் அவன் அனைவரின் கண்களுக்கு..

“சாவியை உன்கிட்ட கொடுக்கறதா.. ஒருமுறை தவறவிட்டுவிட்டேன்.. இன்னொரு முறைத் தவற விட எனக்கு விருப்பமில்லை..”, என்ற நரீ, “நீ ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் உயிர்களைப் பற்றிக் கவலையில்லாமல் பேசுகிறாயே..??”

“ஊஞ்சலாடுவதா..?? யார் ஆடுகிறார்கள்..??”

அதில் கோபம் கொண்ட நரீ, “வருடங்கள் உருண்டோடிய பொழுதும் உனக்கு கொழுப்பு சுத்தமாகக் குறையவில்லையடா..”, என்றவன் நின்றிருந்தவர்களைச் சுட்டிக்காட்டி, ”இவர்களின் பெற்றோர்களைத் தான் சொல்கிறேன்..”, என்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.