(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 01 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

மெரிக்காவின் லாஸ்வேகாசில் உள்ள ஆம்னியோ நைட் கிளப்பில் விஐபிகள் மட்டும் அனுமதிக்கப்படும் பகுதியில் இருந்த சோபாவில் கால்களை நீட்டி எதிரில் இருந்த மேஜையில் ஒருகையூன்றி அதில் நாடியை தாங்கியவாறு அமர்ந்திருந்த தீரமிகுந்தன் மதுக் கோப்பையில் இருந்த பானத்தை குடிப்பதற்கு மறந்து தன் நண்பன் ப்ராங் கூறிய செய்தியை கவனமாக கேட்டுகொண்டிருந்தான்.

அவர்கள் எப்பொழுதும் முக்கியமான விசயங்களை அலசி ஆராய்வதற்கு பிரத்யோகமாக அவர்களுக்கென்றே அமைக்கப்பட்டிருந்த, அந்த கிளப்பின் பெரும்பான்மையான பங்குகளின் சொந்தக்காரனான ப்ராங்குடன் அங்கு அமர்ந்திருந்தான். பிராங்கின் குடும்பத்திற்கு சொந்தமாக இரும்பு எ@கு தொழிற்சாலை உள்ளது. அத்துடன் பிராங் உலகநாடுகளை தன் பிடியில் வைத்திருக்கும் அதிநவீன மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு, தகவல் தொடர்பு, பூமியில் பல்லாயிரம் கிலோமீட்டர்களில் இயற்க்கை எரிவாயு மற்றும் எண்ணெய் திரவங்களின் குழாய் அமைப்பு மற்றும் காகிதக்கூழ், ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ள நிறுவனமான சி.என்.ஜி நிறுவனத்தின் அனைத்து துறைகளிலும் உள்ள பங்குகளின் பெரும்பான்மையான பங்குதாரன். எனவே மேற்கூறிய நிறுவனத்தின் போர்ட் மெம்பர்சில் முக்கியமான புள்ளி ப்ராங்.

ப்ராங் பெண்களை தனது பணத்தாலும் அழகாலும் கவர்ந்திழுக்கக்கூடிய கருத்த சுருட்டை முடியுடன் ,மென் பச்சை நிறக்கண்களுடனும் விளையாட்டு வீரனைபோல் கச்சித்தமான உடலமைப்புடன் பக்கா பணக்காரவீட்டு ஆங்கிலேய குடும்பத்தில் பிறந்த தோற்றத்துடன் இருந்தான். அவனது மூளையாக சிறுவயதில் இருந்து ஒன்றாகவே சுற்றித்திரியும் தீரனிடம் தாங்கள் செய்யவிருக்கும் அடுத்த ப்ராஜெக்ட்டை பற்றி விவாதித்துகொண்டிருந்தான் .

அவர்கள் ஆங்கிலத்தில் பேசிகொண்டிருந்ததை நாம் தமிழிலேயே பாப்போம் .டீரன் இந்த தடவை நாம் ப்ராஜெக்ட் செய்யும் இடம் எது தெரியுமா..? என்று கேக்கும் போதே தீரன் கூறினான் ஐ நோ ப்ராங்... இந்தியாவில் தானே! ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது ப்ராங், நார்த் இந்தியாவில் நம் ப்ராஜெக்ட்டை செய்வதென்றால் நமக்கு மிகவும் எளிது. ஏனெனில் அங்கு ஏற்கனவே நாம் காலூன்ற உதவிய நம் விசுவாசமான ஜென்டில்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கு நமக்கு தேவையான கனிமவளங்களை எல்லாம் ஏற்கனவே கன்ஸ்யூம் செய்துவிட்டோம். அதனால நம்ம டார்கெட் இப்போ சவுத் இந்தியா என்னுடைய அனுமானம் சரிதானே ப்ராங்..! என்று கேட்டான். ப்ராங்கால் டீரன் என்று அழைக்கப்படும் நம் ஹீரோ தீரமிகுந்தன்

அவனின் பதிலை கேட்ட ப்ராங், அமேசிங் மேன். இட்ஸ் மை டீரன். உன்னுடைய இந்த அறிவுதான் என்னை இப்போ உச்சத்தில் கொண்டுபோய் வைத்திருக்கு. உன்னைப் போன்ற நண்பன் எனக்கு வாய்த்தது என் அதிர்ஷ்டம் என்றான் ப்ராங்.

அவன் கூறுவதை கேட்டு சிரிப்புடன் தீரன் கூறினான் இப்படியெல்லாம் என்னை நீ புகழ்ந்து கூறினாய் என்பதற்காக இந்த ப்ராஜெக்ட் நல்லபடி முடித்துகொடுப்பதற்கு எனக்கு நீ தரும் பங்கு தொகையை நான் வேண்டாமென்று சொல்லிவிடமாட்டேன் ப்ராங் என்றான் .

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஓ... நோ..! கமான்மேன், இந்த தடவை நான் உனக்கு தரும் லாபத்தின் சதவீதத்தை 10% அதிகரிக்க முடிவெடுத்திருக்கிறேன் டீரன் என்றான் ப்ராங்.

என்ன சொல்ற பிராங் 10% அதிகம் சேர்ந்து கொடுக்கிறேன் என்கிறாயா? அப்போ... இந்ததடவை ப்ராஜெக்டுக்கு பிளான் போடுவதோடு மட்டும் என் வேலையை நான் முடிக்க நீ விடமாட்ட! என்னை மேலும் என்ன செய்யச்சொல்ற என்பதனை தெளிவா இப்போவே என்னிடம் சொல்லிவிடு, நீ சொல்ற அந்த ஜாப்பை என்னால் ஒப்புகொள்ள முடியுமா? முடியாதா? என்பதனை இப்பொழுதே உன்னிடம் நான் சொல்லிவிடுகிறேன் நான் மனது வைத்தால்தான் என்னை உன்னால் வேலைவாங்க முடியும் நண்பா... இது உனக்கே நன்றாகத்தெரியும் என்று நினைக்கிறேன் என்று கூறியபடி ஆராய்ச்சி பார்வையை அவனின்மேல் செலுத்தினான் தீரன்.

அவன் கூறியதை கேட்ட ப்ராங் உன்னைப்பற்றி எனக்குத்தெரியாதா தீரன். எனக்கு நம்மிடம் உள்ள Economic hitman (பொருளாதார அடியாள்)களில் ஒருத்தர் கூட சவுத் இன்டியா போக சரியான ஆள் இருப்பதாக தெரியவில்லை என் நண்பனான நீ ஒருத்தன்தான் தமிழ் பேசத்தெரிந்த நம் வேலையை முழுமையாக செய்ய தகுதிவாய்ந்தவனாக எனக்கு பட்டது.

இதுவரை நீ இதுபோன்ற இடங்களுக்குச் சென்றதில்லை, இப்போ இதற்கு நீ ஒத்துக்கொண்டால் ஒருபைசா செலவில்லாமல் சகலசவுகரியத்துடன் அந்தபகுதியை நீ சுற்றி பார்த்தது போலவும் இருக்கும், அத்தோடு நம்ம வேலையை கச்சிதமாக முடிக்கவும் முடியும் என நான் நினைத்தேன் மேலும் இந்த ப்ராஜெக்ட் கச்சிதமாக முடிந்தால் நாம்தான் வேர்ல்ட் டாப் மோஸ்ட் மில்லினியர் மேன், சோ நீ நெனச்சு பார்க்காத அளவு உனக்கு கமிசன் கிடைக்கும் டீரன் என்றான் பிராங்.

அவன் சொல்லியதை கேட்ட தீரன் கூறினான். நண்பா மத்த நாய்ங்ககிட்ட காசுஎன்ற எழும்புத்துண்டை காட்டி நீ நெனச்சதை எப்படி சாதிக்கணும் என்பதை பிளான் பண்ணிகொடுக்கும் என்னிடமே காச காட்டி உசுப்பேத்த நினைக்கிறாயா? இந்த தீரன் காசுகிடைக்கும் என்பதற்காக எனக்கு இஷ்டம் இல்லாத வேலையையெல்லாம் செய்ய மாட்டான்., “நோ பிராங்” என்னால் நீ சொன்னதை செய்யமுடியாது என்னால் வெஸ்டன் கல்ச்சருக்கு ஆப்போசிட்டான சவுத்இந்தியாவை சகித்துக்கொள்ள முடியாது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.