(Reading time: 18 - 35 minutes)

மை மாம் ஒழுக்கம், நம் தமிழ் பண்பாடு என்று எனக்கு போதிப்பதிலேயே நான் அரண்டுவிட்டேன் அவங்களுடன் செலவழிக்கும் சில மணிநேரங்களில் எனக்கும் அவங்களும் இடையில் சிலநேரங்களில் எழும் கலாச்சார பழக்கவழக்கங்களின் கருத்து மோதல்களிலேயே நான் தமிழ் நாட்டை வெறுத்துவிட்டேன் என் மாம் நான் பிறந்ததில் இருந்து என்னுடன் தமிழில் மட்டுமே உரையாடுவதால்தான் என்னால் தமிழை புரிந்துகொள்ளவும் பேசவும் என்னால் முடிகிறது ஆனால் நான் அவர்களிடம் தமிழில் பேசும் சமயம் மை மாம் நிறையதடவை ஏண்டா இப்படி தமிழை கொலை பண்றே என்று கூறுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அதனால் அவர்களையும் உன்னையும் தவிர மற்ற யாருக்கும் எனக்கு தமிழ் தெரியும் என்று நான் இதுவரை காட்டியதுமில்லை மற்றயாரிடமும் இதுவரை நான் தமிழில் பேசியதுமில்லை என்றான் தீரன்.

அவன் கூறியதை கேட்ட ப்ராங் உன்னை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது டீரன் ஆனால் இந்த தடவை நமக்கு வந்த தகவல் ஒரு மாபெரும் பொக்கிசத்தை பற்றியது. உலகில் அதிக அரிதான ஸ்தோத்திரியம் பற்றியது இதைத்தான் நாம் நார்த் இந்தியாவில் கன்ஷ்யூம் செய்தோம் ஆனால் அங்கு கிடைத்த அளவை விட சவுத் இந்தியாவில் 80% அதிகமாக ஸ்தோத்திரியம் இருபதாக ஆதாரம் கிடைத்துள்ளது (ஸ்தோத்திரியம். ஸ்தோத்திரியம் என்ற உலோகம் இன்றைய அளவில் மிக அரிதான மற்றும் விலை அதிகமான அதே சமயத்தில் எடைக்குறைவான தனிமம். இதில் இருந்துதான் அனு குண்டுகளை குறிதவறாமல் சுடும் வல்லமை படைத்த துப்பாக்கிகளை செய்கிறார்கள். இதுபோன்ற துப்பாக்கிகளை இரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற தேசங்கள் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. சில அரபு நாடுகளும் இந்தியாவும் கூட இவற்றை வைத்திருப்பதாக பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன.)

இந்த ப்ராஜெக்ட் மட்டும் நம்ம கைக்கு கிடைத்தால் நான் உலகத்தில் நம்பர்ஒன் பணக்காரனாக ஆகிவிடலாம். இப்போ சொல்லு உனக்கு நான் கூடுதலாக கொடுக்கப்போவதாகச்சொன்ன 10% பங்கு கம்மி என்றும் அது நீ... உனக்கு நான் அதிகம் கொடுக்க நினைத்த 10 மில்லியனை விட பலமடங்கு அதிகம் என்று இப்போ நினைக்கிறாய்தானே! என்று கேட்டான் பிராங்.

ஆனால் அவன் சொல்லுவதற்கு எந்த பதிலும் சொல்லாமல் யோசனையுடன் இருந்த தீரனை பார்த்து அவனை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிடவேண்டும் என்ற உந்துதலுடன் ப்ராங் கூறினான்

டீரா! இது உடனே ஸ்டார்ட் பண்ண வேண்டிய ப்ராஜெக்ட் .இந்த ப்ராஜெக்ட் செயல்படுத்த நாம் முயற்சிகள் மேற்கொள்வதை தடுப்பதற்கு சிலர் தமிழ்நாட்டில் களம் இறங்க ஆயத்தமாவதாக நான் கேள்விபட்டேன் அவங்க செயல்படத்துவங்குவதற்கு முன்னமே நாம் அஸ்த்திவாரத்தை அங்கே எழுப்ப முடிக்கிவிடவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம் .இந்த சூழலின் அங்கு ப்ராஜெக்ட்டை செயல்படுத்த சூட்டபுல் ECONOMIC HITMEN பொருளாதார அடியாளை பொறுமையாக செலக்ட் செய்வதற்கு அவகாசம் இப்போ இல்லை (NNNSA – National Security Agency உள்ளிட்ட உளவுநிறுவனங்கள் அடியாட்களை கண்டுபிடிப்பது அவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் தம் வேலைகளுக்கு பயன்படுத்திகொள்வது என்ற உத்தி உள்ளது. பொருளாதார அடியாட்களுக்கு அரசு சம்பளம் வழங்க்காது .அதற்கு பதிலாக தனியாரிடமிருந்து அவர்கள் பெற்றுகொள்வார்கள். ஒருவேளை அந்த அடியாட்கள் எடுத்துக்கூறும் புள்ளி விபரங்கள் தவறானது என்று கூறி அவர்கள் பிடிபட்டாலும் அந்த கரும்புள்ளி அவர்களுக்கு சம்பளம் வழங்க்குவதாக சொன்ன நிறுவனங்களின் மீதே விழும அவர்களுக்கு பின்னல் உள்ள அரசாங்கமும் வங்கிகளும் அந்த நிருவனங்களின் பேராசை என்று முத்திரைகுத்தி அந்நிறுவனத்தின் உரிமையாளரை வெளிநாடுக்கு தப்பிக்கவைத்து அங்கு சுகபோக வாழ்க்கை வாழ அவர்களுக்கு வழிவிட்டுவிடும்.) அதனால் நீ முதலில் அங்குபோய் வேலையை ஸ்டார் பண்ணு நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சூட்டபுல் கையை செலக்ட் செய்து அவனை அங்கு உன்னிடம் அனுப்புகிறேன் நீ அவனிடம் பொறுப்புகளை ஹன்டோவர் செய்துட்டு இங்க வந்திடலாம் டீரன் இது நம் லைப் டைமில் அரிதாக கிடைத்திருக்கும் வாய்ப்பு. இதை நழுவவிடவோ ப்ரிபேரிங் இல்லாத வேறு ஒருவனை இந்த பணியில் ஈடுபடுத்தவோ எனக்கு மனசு இல்லை, உன்னால் மட்டும்தான் இதை சக்ஸசாக முடிக்கமுடியும் தீரன் ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லி விடாதே! என்றான்.

அவர்கள் பேசிகொண்டிருக்கும் போதே தீரனின் மொபைல் ஒலி எழுப்பியது அதனை அட்டன் செய்தவன் டென்சனுடன் வாட் எந்த ஹாஸ்பிடல் இதோ நான் புறப்பட்டுவிட்டேன் நான் இப்போ இருக்கிற இடத்தில் இருந்து அங்கு வர ஒருமணிநேரம் ஆகும். ப்ளீஸ் ட்ரை டு சேவ் மை மாம் என்றபடி இருக்கையை விட்டு எழுந்தான் .

ஆன்டிக்கு என்ன ஆச்சு தீரன் என்று அவனை கேட்ட ப்ராங்கிடம்.

மாம்க்கு ஆக்சிடென்டாகி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கிறார்கள். அவங்க கிரிட்டிகல் பொசிசனில் இருப்பதாக இன்பார்ம் செய்தார்கள். என்னால் இப்போ ட்ரைவ் பண்ண முடியாது ப்ராங் ஹாஸ்பிடலுக்கு என்னை கூப்பிட்டுகொண்டு போ என்று கூறிய தீரன் கண்கள் கலங்கியது போல் இருப்பதை பார்த்த ப்ராங் அவங்களுக்கு எதுவும் ஆகாது டீரா. வா.... நான் உன்னை ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டுட்டுக்கொண்டு போகிறேன் என்றவன் தனது ஆடி ஆர்8 காரில் ஏற்றிக்கொண்டு பயணம் ஆனான் ப்ராங்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.