(Reading time: 18 - 35 minutes)

Poogampathai poovilangal poottiya poovai

கோயம்புத்தூரின் பிரபலமான அந்த கல்லூரியில் யாழிசையும் அவளது தோழி சந்தியாவும் கேண்டியனில் சாப்பிடுக்கொண்டே அரட்டையடித்துகொண்டிருன்தனர் அப்பொழுது அவர்களின் அருகே வந்த லாவண்யா ஏய்...சந்தியா ஆடிட்டோரியம் ஒபெனிங் பங்சனில் உன்னை காம்பேரிங் செய்யச்சொல்லச்சொல்லி நம்ம காலேஜ் ஹீரோ மிதுனனிடம் பிரின்சிபால் சொல்லிகொண்டிருந்தார்கள் நான் நம்ம ஹச் ஓ டி நோட்டிஸ் போர்டில் எக்ஸாம் டைம்டேபிளை போடசொல்லி குடுத்ததை போடும்போது அவங்க பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை தேடி நம் காலேஜ் ஹீரோ மிதுணன் வருவார் என்றாள்.

என்னது நானா என்னால முடியாதுப்பா, ப்ளீஸ்... ப்ளீஸ்.. யாழ், மிதுணன் கண்ணில் படாமல் என்னை காப்பாத்து என் செல்லமில்ல மதியம் கிளாசை கட்டடித்துட்டு ஒடிபோயிடலாம் யாழி. வா என்கூட நீயும் எஸ் ஆயிடு என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் அவ்வாறு சொன்னதும் யாழி அடியே ஒரு கல்யாணமாகாத கண்ணிபெண்ணை பார்த்து இன்னொரு கண்ணிப்பெண் கேட்கிற கேள்வியாடீ இது என்றவள் அவள் பிடித்திருந்த கையை உதறிவிட்டு ஏய்... சீ... இனி என்னை தொட்டுப் பேசாதே ஓ... அவளா நீ? என்று நக்கலாக வடிவேலு ஸ்டைலில் பேசினாள் .

யாழி... என்று பல்லை கடித்தபடி கடுப்புடன் அவளின் பெயரை உச்சரித்த சந்தியா என்னை இதவிட யாராலும் கேவலப்படுத்த முடியாதுடி கருமம் கருமம் என்னை பார்த்து என்ன சொல்லிட்ட உன்னை என்று கையில் வைத்திருந்த நோட்டை வைத்து அவளின் முதுகில் அடிக்க ஆரம்பித்ததும்

யாழிசை அவளின் அடியை தடுத்துக்கொண்டே சந்தியா நோ வைலன்ஸ். பேசிக்கிட்டுருக்கும் போது கையில் ஆயுதம் எடுக்கலாமா தங்கம், நீ என்னிடம் ஓடிபோகலாமா என்று கேட்டதுமட்டும் சரியா? என்று அவளின் அடியை தடுத்துக்கொண்டே குறும்புடன் கேட்டாள் யாழிசை.

யாழிசையின் நீண்ட மீன் போன்ற அழகான கண்களும் சேர்ந்து சிரிப்பதையும் உதட்டுச்சாயம் ஏதுமில்லாமலே சிவந்து குறும்பு தவழும் அவளின் உதட்டில் அசைவின் அழகினையும் எப்பொழுதும்போல் இப்பொழுதும் கண்டு வியந்து மனதினுள் இவளிடம் மட்டும் எல்லாமே அழகாக இருப்பது எப்படி என்று மனதினுள் ஆச்சரியபட்டபடியே சந்தியா கூறினாள்.

நான் மாட்டும் பையனா பொறந்திருந்த்தேனா உன்னிடம் ஓடிபோலாமா என்று பெர்மிசனெல்லாம் கேட்க மாட்டேன். உன்னை அப்படியே கடத்திட்டுப்போயி என்று கூறி நம்பியார் ஸ்டைலில் கைகளை பிசைந்துகொண்டு சந்தியா கொடுத்த ரியாக்சனில்,

அரண்டவாறு பாவளா செய்த யாழிசை, ஏய் சீ அடங்க்குடீ, நீ ஒரு மார்க்கமாத்தான் இன்னைக்கு பேசுற சந்தியா. கடத்துறதுனு சொல்றதும் நம்பியார் பாணியில் கைகளை பிசயறதும் பார்க்கிரப்ப பக்கா அரசியல்வாதி வாரிசு நீ என்று புரிந்துகொள்ள முடியுதுப்பா என்றாள் யாழிசை.

சந்தியா என்ற அழைப்பில் கூப்பிடுவது மிதுணன் என்பதை அறிந்துகொண்ட இருவரும் அய்யோ தப்பிக்க முடியாது போலைவே என்று கண்களால் தோழிகள் இருவரும் பேசியபடி சொல்லுங்க மிதுணன் என்றாள் சந்தியா அவனிடம்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மிதுணன் மிடுக்கான தோற்றம் கொண்டவன் தோற்றத்தில் மட்டும் அவன் சிறந்தவன் கிடையாது, குணத்திலும் சிறந்தவனே சந்தியாவிற்கு மிதுணன் மீது மயக்கம் உண்டு அவள் மட்டுமல்ல கல்லூரியில் பெரும்பான்மையான பெண்களின் ஹீரோ மிதுணன் .

யாழிசைக்கு தனது தோழி சந்தியாவின் மனதில் மிதுணன் இருக்கிறான் என்பதை உணர்ந்திருக்கிறாள், மிதுணன் எம்.இ பைனல் இயர் ஸ்டூடண்ட். கல்லூரியில் நிகழும் எந்த ப்ரோகிராம்களிலும் அவனின் பங்காற்றல் அதிகம் இருப்பதையும் அதேபோல் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் அவன் அந்நிகழ்ச்சியின் சார்பாக தயாரித்து வாசிக்கும் ஒருகுட்டி ஆர்டிகிலும் அதில் இடம் பெற்றிருக்கும் நான்கு வரி கவிதைகளும் அர்த்தமுள்ளதாகவும், அழகாகவும், விருவிருப்பாகவும் தயாரித்து வாசிக்கும் பாங்கை ரசிபவர்களில் யாழிசையும் ஒருத்தி.

அவளும் சந்தியாவும் பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவிகள். தங்களின் சீனியரான மிதுணனின் மேல் நல்ல அபிப்பிராயம் உண்டு. எனினும் தனது தோழி விரும்பும் மிதுணன் தன்னை கடந்த சிலமாதமாக ஆர்வமாக பார்ப்பதை அவள் விரும்பவில்லை

அந்த காலேஜில் பழைய ஆடிட்டோரியம் இடிக்கப்பட்டு நவீனமாக பெரிய அளவில் கட்டிமுடித்து வரும் இருபதாம் தேதி திறக்கப்படவுள்ளது அதனை திறந்துவைக்க வரவிருக்கும் தொழில் துறை அமைச்சர் ரங்கராஜனின் மகள்தான் சந்தியா.

மிதுணன் சந்தியாவிடம் கூறினான், சந்தியா, ஆடிட்டோரியம் திறந்து வைக்க வரும் உன் அப்பாவிடம் அவரை சைன்ஸ் ரிசர்ச் லேப் ஒன்றை நம்ம காலேஜ்குள் அமைப்பதற்கு உதவச்சொல்லி ஓர் ஆப்ளிகேசன் வைக்க போகிறோம். அதனை நீதான் ஸ்டேஜில் ரிக்வெஸ்டாக வைக்கணும் அப்படி வைத்தால் துரிதமாக உன் அப்பா சைன்ஸ் ரிசர்ஜ் செண்டர் அமைப்பதற்கு உதவ முன்வரலாம் என்று பிரின்சிபால் நினைக்கிறார். எனவே நீயூம் உன் தோழி யாழிசையும் சேர்ந்துதான் நிகழ்ச்சியை காம்பேர் பண்ணப்போறீங்க ஸ்டேஜில் பிரசன்ட் பண்ணப்போறது மட்டும்தான் நீங்க. உங்க பின்னாடியே நான் இருந்து என்னென்ன பேசணும், எப்படி... எப்படி... பிரசன்ட் பண்ணனும் என்று முழுவிபரத்தையும் சொல்கிறேன். அதேபோல் யாழி எப்பவும் போல் நிகழ்ச்சி உங்க பரதநாட்டியத்துடன் ஆரம்பிக்கவேண்டும் என்று நம்ம ப்ரின்சி சொல்லச்சொன்னார் மதியம் இருக்கிற கிளாஸ் அட்டன் பண்ணமுடியாது. ப்ரோகிராம்ஸ் அரேன்ஜ்மன்ட் பத்தி டிஸ்கஸ் பண்ணனும். சோ! நீங்க இரண்டுபேரும் லாபிக்கு வந்துடுங்க நானும் நம்ம ஹச்ஓடியுடன் அங்கே இருப்பேன் என்று கூறிய மிதுனனின் பார்வை யாழிசையின் மீது ஆர்வமுடன் படிந்தது.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.