(Reading time: 18 - 35 minutes)

எதற்குமே தீரன் கலங்கி இதுவரை ப்ராங் பார்த்ததில்லை. வாழ்கையில் முதல்முதலாக கலங்கிய முகத்துடன் நண்பனை பார்த்த ப்ராங் எதுவும் பேசி அவனை மேலும் சங்கடப்படுத்தாமல் காரை ஹாஸ்பிடல் நோக்கி விரட்டினான்.

ஹாஸ்பிடலின் வாசலை அவர்களின் கார் சொன்ன ஒருமணி நேரத்துக்குள் அடைந்திருந்தது. வாசலிலேயே தீரனுக்காக காத்துகொண்டிருந்த இமாமு வேகமாக அவர்களிடம் வந்தவன்... மேம் இன் செக்கண்டு ப்ளோர் ஐ சி யூ, என்றான் .

எப்படி ஆச்சு இமாமு என்று தீரன் கேட்டான் அதற்கு தீரனின் விசுவாசியான இமாமு கூறினான், மேம் ஷாப்பிங் போன இடத்தில் திடீர்னு ரொம்ப வேர்த்து கொட்டவும் இதயம் அசௌகரியமாக இருப்பதாக பீல் செய்திருகிறார்கள் அவங்களுக்கு இதுபோன்ற சிம்டம்ஸ் இருந்தால் உடனே போடக்கூடிய டேப்லெட்டை வீட்டில் வைத்துவிட்டு வந்ததை பார்த்தவங்க வீட்டிற்கு போயிடனும் என்று காருக்குவந்து டிரைவ்செய்து வீட்டிற்கு செல்ல நினைத்திருக்கிறார்கள்

ஆனால் பாதிவழியிலேயே அவங்களால் காரை டிரைவ்பன்ன முடியாதவாறு பெய்ன் கூடி கண்ரோல் இழந்த கார் சாலையை விட்டுவிலகி அங்கிருந்த மரத்தில் மோதி ஆக்சிடென்ட் ஆகிடுச்சு போலீஸ் முதலில் உங்களுக்குத்தான் போன்பன்னியிருகிறார்கள் நீங்கள் முக்கியமான மீட்டிங்கில் இருந்ததால் உங்களுக்கு வரும் காலை எல்லாம் என் மொபைலுக்கு டைவர்ட் செய்திருந்ததால் நான்தான் அந்த காலை அட்டன் செய்தேன் .

போலீஸ் என்னிடம் இன்பார்ம் செய்ததும் ஹஸ்பிடலுக்கு நான் விரைந்து வந்துக்கொண்டே உங்களை மொபைலில் தொடர்புகொள்ள முயன்றேன் ஆனால் நீங்கள் மொபைலை அட்டன் செய்யவில்லை நான் ஹாஸ்பிடல் வந்தபோது உங்கள் அம்மா கொஞ்சம் கான்சியசாகத்தான் இருந்தாங்க அவங்க எப்படி ஆக்சிடென்ட் ஆனது என்ற விபரத்தை என்னிடம் சொல்லிவிட்டு இந்த பேக்கை பத்திரமாக உங்களிடம் கொடுக்கச்சொல்லி சொல்லிவிட்டு மயக்கமாகிவிட்டர்கள் என்றான் இமாமு.

இமாமு கடந்த பத்துவருடங்களாக தீரனின் மைக்ரோ-மொமென்ட் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறான். தீரனுக்காக என்னவேண்டுமானாலும் செய்வான் காரணம் அவன் ஆப்ரிக்க நாட்டுக்காரன் பத்துவருடங்களுக்கு முன் இமாமு அமெரிக்காவில் தனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து தனிநபருக்கு ரகசியமாக ரிஸ்க் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவைப்படும் மற்றவரின் மொபைலில் இருந்து தகவல்களை திருடி தந்து சட்டத்துக்கு புறம்பாக சம்பாதித்துகொண்டிருந்தான் .

பத்துவருடத்திற்கு முன் தீரன் தனது முயற்ச்சியால் மைக்ரோ-மொமன்ட்ஸ் கம்பெனியை ஆரம்பித்திருந்த சமயம் அது. ஒருநாள் தீரன் தனது காரை ஊரின் ஒதுக்குபுறமான இடத்தில் நிறுத்தி டிக்கியில் இருந்த இமாமியை டிக்கியில் இருந்து இறங்கச்சொனான், தான் ஏற்கனவே அவன் டிக்கியில் இருப்பதை பார்த்துவிட்டதாகவும் போலீஸ் அவனை தேடிவந்ததையும் தான் நோட்பன்னியதாகவும் இருந்தும் அவனை காட்டிகொடுக்காமல் தான் இருந்ததாகவும் கூறி யார் நீ..? என்று கேள்வி கேட்டான்.

அதற்கு ஆப்பரிக்க மக்களுக்கே உரிய கருப்புநிறத்து இளைஞனான அவன் தனது நாட்டில் உள்ள தனது வீட்டின் வறுமைக்காக அமெரிக்காவில் தனது நண்பனின் உதவியுடன் மொபைல் ஹேக்கிங் மூலம் பணம் சம்பாதித்தையும் அதில் தான் திருடித்தந்த ஒரு தகவலின் அடிப்படையில் கொலை நடந்து விட்டதால் ஹேக்கிங் செய்துதந்த தன்னை சைபர் கிரைம் அடிப்படையில் குற்றவாளி என்று கைது செய்ய போலீஸ் துரத்துவதாகவும் தன்னை போலீசில் மாட்டாமல் தப்பிக்க உதவுமாறும் கேட்டான்.

தீரன் அவனை போலீசில் மாட்டாமல் தப்பிக்கவைத்து முறையாக எந்த சர்டிபிகேட்டும் இல்லாத இமாமியை தனக்கு பெர்சனல் பிஏ வாக நியமித்து அவனுக்கு அதிகபடியாக சம்பளத்தை கொடுத்து அவனின் ஹேக்கிங் மூளையை தனது பிஸ்னசுக்காக பயன்படுத்திகொண்டு தன்னுடனேயே வைத்துக்கொண்டான்.

அதிலிருந்து இமாமியும் தீரணின் விசுவாசமான வேலைகாரனாகிவிட்டான் தான் செய்த குற்றத்தில் இருந்து தப்பிக்க வைத்து நினைத்துப் பார்க்காத அந்தஸ்த்தையும் பணத்தையும் சம்பளமாக கொடுத்து தனக்கு மறுவாழ்வு கொடுத்த தீரனுக்கு .தனது உயிரையும் கொடுக்கும் விசுவாசியாகவே மாறிவிட்டவன் இமாமி.

ஹாஸ்பிடலில் அவனின் வருகைக்காகவே தனது கடைசி மூச்சை பிடித்து நிருத்திவைதிருந்தார் தீரணின் அம்மா பத்மினி . தனது அம்மா இருந்த அறைக்குள் நுழைந்த தீரன் தனது அழகான அம்மாவின் தலையில் போட்டபடிருந்த கட்டும் உடல்முழுவதும் அங்காங்கே போடபடிருந்த கட்டுடன் செயற்கை சுவாசத்துடன் இருந்த தன அம்மாவை பார்த்தவன் உள்ளம் வலிஎடுத்து அவனையறியாமல் அவன் கண்ணில் கண்ணீர்உற்பத்தியானது அம்மா என்ற அவனின் வார்த்தையில் கண்விழித்து பார்த்த பத்மினி

அவனையும் அவன் கையில் இருந்த தனது ஹன்ட்பேக்கையும் மாறிமாறி பார்த்தபடி எதுவோ அவனிடம் சொல்லமுயற்சித்த அவனின் அம்மா பத்மினியின் கண்கள் நிலைகுத்திநின்றது

தன கண்முன்னே தனது அன்னையின் மரணத்தை கண்ட தீரனுக்கு ஐயோ... அம்மா.... என்னைவிட்டு செல்லாதே என்று கத்த வேண்டும் போல் இருந்தது. அவளின் கடைசி துயிலில் இருந்து எழுப்பிவிட வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டு அம்மா என்று பேசமுயன்று தொண்டை துக்கத்தில் அடைத்து குரல் எழும்பவே இல்லை. அவளை உலுக்கியபடி எழுந்துடுங்க நீங்க எனக்கு வேண்டும் நான் யாரும் இல்லாத அனாதையாகிவிடுவேன் என்று கத்தவேண்டும்போல் இருந்த உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாமல் தனக்குள்ளேயே இறுகி நின்றவன், கால்கள் தொய்ந்துபோய் விட விழுவதை தவிர்க்க கட்டிலின் விளிம்பை பற்றி குனிந்து தனது அன்னையின் நெற்றியில் முத்தமிட்டவன் கண்ணீர்த்துளி அவனின் அம்மாவின் முகத்தில் விழுந்து வழிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.