(Reading time: 16 - 31 minutes)

னைவருமே உடனே மகியை பார்க்க.. “மகி பெரியவங்க பேசும் போது அது என்ன குறுக்க பேசற பழக்கம்.. அமைதியா இரு..” என்று பூங்கொடி கண்டித்தார்.

“நீங்க சொல்றது நியாயமா இருந்தா நான் அமைதியா இருந்திருப்பேன். ஆனா நீங்க பேசறது நியாயமில்லம்மா.. கதிர் மாமா அத்தையை கல்யாணம் செஞ்சுக்கும் போது தன்னோட முதல்  குடும்பத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லன்னு சொல்லி தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு.. இப்போ திடிர்னு அவரோட பொண் ணு உறவு கொண்டாடிக்கிட்டு வந்தா என்ன அர்த்தம் ம்மா..”

“அதானே என்னோட பேரன் சொல்றது சரி தானே.. நல்லா போயிட்டு இருக்க வாழ்க்கையில எதுக்கு தேவையில்லாம பிரச்சனையை இழுத்து விட்டுக்கிற எழில்..” என்று பாட்டியும் மகியின் கூற்றை ஆமோதித்தார்.

“அவங்க அம்மா உயிரோட இருந்த வரைக்கும் அந்த பொண்ணு அப்பான்னு உறவு கொண்டாடிக்கிட்டு வந்தாளா? இப்போ அம்மா இறந்ததுக்கு பிறகு அந்த பொண்ணோட எதிர்காலத்தை யோசிச்சியா மகி..”

“அம்மா.. லண்டன்ல அவங்க வசதியா தானே வாழறாங்க.. இப்போ அவங்கல்லாம் இறந்தாலும் அந்த சொத்தெல்லாம் அந்த பொண்ணுக்கு தானே சேரும்..”

“இல்ல மகி.. அவ பேருக்கு வந்த சொத்தெல்லாம் அவளோட அம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டவரோட முதல் மனைவி குடும்பத்துக்கு சொத்தெல்லாம் எழுதி கொடுத்திட்டாளாம்.. ஆனந்தி சொன்னாங்க..”

“அதுக்கு நாம என்ன செய்ய முடியும் அத்தை.. அவ பாதுகாப்புக்கு வச்சிக்காம அவ ஏன் சொத்தெல்லாம் எழுதி கொடுத்தா.. இப்போ எப்படியோ.. முன்ன  வசதியா வழ்ந்த பொண்ணு அவ, அவளை கூட்டிக்கிட்டு வந்து  நீங்க பார்த்துக்க மாமா என்ன அத்தனை வசதியாவா இருக்காரு.. மாமாவோட மாச சம்பளத்துல தான் அத்தை உங்க குடும்பம் நடக்குது.. அப்படியிருக்க அந்த பொண்ணுக்கு தேவையான செலவு, கல்யாணம் இதெல்லாம் மாமா தான் அத்தை பார்த்துக்கணும்.. அதெல்லாம் யோசிச்சு முடிவெடுத்துக்கோங்க..” என்றதும்,

“ஆமாம் எழில்.. என் பேரன் சொல்றது தான் சரி.. மாப்பிள்ளையே ஆர்வம் காட்டாதப்ப உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்.. இத்தனை வருஷம் அந்த பொண்ணு வெளிநாட்டுல இருந்திருக்கு.. எப்படியெல்லாம் இருக்குமோ.. நம்ம குடும்பத்துல அந்த பொண்ணை கூட்டிக்கிட்டு வந்து  வச்சிக்கிறது சரிபடுமா.. இந்த எண்ணத்தை இதோட விட்டுடு..” என்று பாட்டியும் கூற, அதுவரை புகழேந்தி அனைத்தையும்  அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன அண்ணா.. நீங்க ஒன்னுமே சொல்லாம அமைதியா இருக்கீங்க..” எழில் கேட்க,

“உனக்கு இதுல விருப்பம் இருக்கா எழில்.. இல்ல நியாயம் தர்மத்துக்காக.. இல்ல மாப்பிள்ளைக்காகன்னு யோசிக்கிறியா?”

“அண்ணா நானும் 2 பேர் கூட பிறந்து வளர்ந்தவ.. எனக்கும் மனசாட்சி இருக்குல்ல.. பையனா இருந்தா எப்படி வேணாளும் போகட்டும்னு விட்டுடலாம்.. ஆனா ஒரு பொண்ணை தனியா விட்றது பாவம் இல்லையா? அப்பா இல்லாத நேரத்துல எங்களுக்கு எல்லாமே பார்த்து நல்லப்படியா கல்யாணம் செஞ்சுக் கொடுத்தது  நீதான் ண்ணா.. கல்யாணத்துக்கு முன்ன பார்த்துக்கிட்டது கூட பரவாயில்ல.. ஆனா உனக்குன்னு ஒரு குடும்பம் வந்த பிறகு கூட, இதோ இப்ப வரைக்குமே நீ எங்களுக்கு செய்ய வேண்டிய கடமையை தவறனதேயில்ல.. அதிலும் நமக்குன்னு சொத்தும் பெருசா இல்ல.. உன்னோட சம்பளத்துல தான் இந்த குடும்பம், எங்க கல்யாணம் எல்லாம் நடந்தது.

அப்பா இல்லாத எங்களுக்கே ஒரு அண்ணனா நீ எல்லா கடமையும் செய்யும் போது,  அந்த பொண்ணுக்கு அப்பா இருக்கும் போது எதுக்குன்னா அனாதை போல இருக்கணும்.. அதனால அந்த பொண்ணை இங்க கூட்டிக்கிட்டு வந்து வச்சிக்கிறது தான் நல்லதுன்னு தோணுது.. அவரும் எங்களுக்காகன்னு பார்த்து சுடரொளியை இங்க கூட்டிக்கிட்டு வர யோசிக்கலாமில்ல.. எங்க கடமை எங்களால முடிஞ்ச அளவுக்கு அவளை பார்த்துக்கப் போறோம்.. அதுக்கு மேலேயும் அவளுக்கு இங்க ஒத்து வரலன்னா அப்புறம் அவ என்ன வேணா முடிவு எடுத்துக்கட்டும்.. நா சொல்றது சரி தானே ண்ணா..”

நீ சொல்றதும் சரி தான் எழில்.. அந்த பொண்ணுக்காகவும் நீ யோசிக்கிறது நினைச்சு பெருமையா இருக்கும்மா.. உன்னோட மனசுக்கு என்ன தோணுதோ செய்..” என்று புகழேந்தி கூற, பூங்கொடியும் அதை ஆமோதித்தார்.

இந்த மூன்று பேரை தவிர மற்ற யாருக்கும் சுடரொளி இங்கு வருவது சுத்தமாக பிடிக்கவில்லை. பாட்டி, கலை, மகி, ஏன் கதிரவனே வேண்டாமென்று மறுத்தும் எழில் சுடரொளி இங்கு வருவதற்கு ஆனந்தியிடம் சம்மதம் தெரிவித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.