(Reading time: 16 - 31 minutes)

துவரை தான் நினைப்பது நடக்காமல் போனதே என்ற கோபமும் ஆற்றாமையும் மட்டும் தான் இத்தனை நாள் அவருக்கு இருந்தது. இப்போதோ கதிரவனை அதிகமாக வெறுத்தார். அதன் விளைவு மகளிடம் இன்னும் இன்னும் விஷத்தை விதைத்துக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் தான் செங்குட்டுவனோடு வெண்மதிக்கு அறிமுகம் ஏற்பட்டது. வியாபார விஷயமாக லண்டனிலிருந்து இந்தியாவிற்கு வந்திருந்தார் செங்குட்டுவன். வெண்மதி வேலை செய்யும் நிறுவனத்தோடு தான் அவர் வியாபார ஒப்பந்தம் போட்டிருந்தார். பிறப்பில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் மூன்று தலைமுறையாக லண்டனில் இருந்து தொழில் நடத்தி அங்கே தனக்கென்று ஒரு சாம்ராஜியத்தை உருவாக்கி கொண்டவர். ஒன்றுக்கு இரண்டு திருமணம் செய்து விவாகரத்து வாங்கியவரின் கண்களில் இப்போது அழகோவியமாக இருக்கும் வெண்மதி தெரிந்தார்.

வெண்மதியை தன் சொந்தமாக்கி கொள்ள அவர் சில முயற்சிகள் செய்ய, அதை முதலில் வெண்மதி உணர்ந்துக் கொள்ளவில்லையென்றாலும் வடிவு அதை புரிந்துக் கொண்டார். ஆமாம் அடிக்கடி வெண்மதியை வீட்டில் விட, வேலை விஷயமாக பேச என்று செங்குட்டுவன் வீட்டுக்கு வர, வடிவிற்கு செங்குட்டுவனின் எண்ணம் புரிந்தது. அந்த நேரம் தன் மேற்படிப்புக்கான பரிட்சையில் தீவிரமாக இருக்க கதிரவனுக்கு இதெல்லாம் கவனிக்க நேரமில்லாமல் இருந்தது.

செங்குட்டுவனை பற்றி மகளிடம் அடிக்கடி பேசி வெண்மதியின் மனதும் கொஞ்சம் திசை மாற ஆரம்பித்தது. விளைவு கதிரவனிடம் வெண்மதி விவாகரத்து கேட்டு நின்றார். ஏதாவது பிரச்சனை என்றால் பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் மனைவியின் காதலே இங்கு அஸ்திவாரம் இல்லாமல் ஆட்டம் கண்டிருக்க, அதற்கு மேலும் மனைவியை தன்னோடு தக்க வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. மனைவிக்கு விவாகரத்து கொடுக்க சம்மதித்தார். ஆனால் மகளை தன்னோடு வைத்துக் கொள்ள அவர் விரும்பினார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மருமகன் மீது உள்ள அதீத வெறுப்பில் வடிவு அவரின் அந்த ஆசையை கூட நிறைவேற விடவில்லை. தன்னுடைய புது வாழ்க்கைக்கு மகள் ஒரு தடையாக இருப்பாள் என்ற எண்ணத்தில் வெண்மதி கதிரவன் விருப்பப்படியே மகளை அவரோடே வைத்துக் கொள்ளட்டும் என்று நினைக்க, வடிவோ மகள் உன்னுடன் இருந்தால் அவளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று அவளின் மனதை கலைக்க ஆரம்பித்தார். அதில் வெண்மதியும் நீதிமன்றத்தில் குழந்தை தன்னுடன் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். செங்குட்டுவனும் அப்போதைக்கு வெண்மதியின் மேல் இருந்த மயக்கத்தில் வடிவும் அவளும் சொல்வதெற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.

மகள் மட்டும் தான் என்னுடைய வாழ்க்கை என்று கதிரவன் நீதிமன்றத்தில் தன் பக்க நியாயங்களை எடுத்துரைக்க, குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்ற குழப்பத்தில் குழந்தையிடமே கேட்கலாம் என்று நீதிமன்றம் தீர்மானித்தது.

கண்டிப்பாக சுடரொளி தந்தையோடு தான் இருப்பேன் என்று சொல்லுவாள் என்பது வடிவுக்கு தெரியும். ஆனால் அன்னை தந்தையின் பிரிவுக்காக காரணம் சுடரொளிக்கு புரிந்து கொள்ளும் வயதில்லை. இருவரோடும் இருக்கவே அவள் விரும்புவதை வடிவு புரிந்துக் கொண்டார். விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும்வரையிலும் சுடர் அன்னையோடு தான் இருக்க வேண்டும் என்பதை தனக்கு சாதமாக்கிக் கொண்டு,

“நீ அப்பாவோட இருக்கணும்னு சொன்னா.. அப்புறம் அம்மாவை நீ பார்க்கவே முடியாம போயிடும்.. ஆனா அம்மாவோட இருக்கப் போறேன்னு சொன்னா உனக்காக அப்பா அம்மாவோடவும் உன்னோடவும் இருக்க ஓடி வந்துடுவார். அதனால அப்பா என்னை அடிப்பாங்க திட்டுவாங்கன்னு நீ பொய் சொன்னா நீ அம்மாவோட இருக்கலாம்.. நல்லதுக்காக பொய் சொல்லலாம் தப்பில்ல..” என்று அந்த குழந்தையின் மனதில் ஆசையை விதைத்தார். அதன் விளைவு சுடரொளியும் நீதிமன்றத்தில் அப்படியே கூற, அவள் அன்னையோடு இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது.

சுடரொளி அப்படி கூறியதில் கதிரவன் முற்றிலும் உடைந்து போனார். கண்டிப்பாக குழந்தையை மிரட்டியோ இல்லை ஏதாவது ஆசை காட்டியோ தான் அப்படி சொல்ல வைத்திருப்பார்கள் என்று அவர் நம்பினார். ஆனாலும் குழந்தை அப்படி சொல்லியதில் அவள் இனி தனக்கு கிடைக்கமாட்டாள் என்றதில் அவர் விரக்தியின் உச்சிக்கே சென்றார். ஆனால் அப்பா எப்படியோ தங்களோடு வந்துவிடுவார் என்ற ஆசையில் சுடர் எதுவும் அறியாமலேயே அன்னை பாட்டியோடு லண்டனுக்கு சென்றாள்.

உறவு வளரும்...

Episode # 19

Episode # 21

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.