(Reading time: 9 - 17 minutes)

ன்னத்தான் எழிலே சொல்லியிருந்தாலும் இந்த மூவருடன் புறப்பட்டு வந்திருக்கக் கூடாதென்று தீம்பார்க் சென்ற பின்பு தான் சுடரொளி உணர்ந்தாள். தங்களுடன் இன்னொருத்தியும் வருகிறாள் என்பதை மூவருமே உணராதபடி நடந்துக் கொண்டனர்.

அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு, பிடித்த ரைடுகளில் ஏறிக் கொண்டு என்று அதில் எதிலும் சுடரொளியை அவர்கள் இணைத்துக் கொள்ளவில்லை. அவர்களுடன் வந்துவிட்டோம் என்ற காரணத்தால் மட்டும் அவர்கள் எங்கு செல்கிறார்களோ, அவர்களுடனே சென்று, எந்த ரைடில் ஏறுகிறார்களோ.. அதில் அவளும் ஏறி, எங்கு நிற்கிறார்களோ அங்கே அவர்களோடு நின்று என்று அவர்களை பின்பற்றிக் கொண்டிருந்தாள். இதில் நடுநடுவே மூவரும் செல்ஃபீ வேறு எடுத்துக் கொண்டனர். அதற்கும் அவளை அவர்களோடு இணைத்துக் கொள்ளவில்லை.

இதெல்லாம் மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், அதை பொருட்படுத்தாமல் பொறுமையாக இருக்க சுடரொளி முயற்சித்துக் கொண்டிருக்க, அவள் பொறுமையின் எல்லையை கடக்கும் அந்த சம்பவமும் நிகழ்ந்தேறியது.

அன்று விடுமுறை தினம் இல்லை என்பதால் தீம் பார்க்கில் அவ்வளவாக கூட்டம் இல்லை. ஒவ்வொரு ரைடில் ஏறும்போதும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றது போல் உட்கார்ந்து அந்த விளையாட்டை ரசித்தனர். அங்கிருந்த பணியாளர்களும் எந்த விதிமுறையும் விதிக்கவில்லை. இதில் ஒரு ரைடில் பொதுவாக மூன்று பேர் உட்கார்வது தான் விதி. இதில் காலியாக இருக்கவே அவரவர் விருப்பம் போல் இருவர், மூவர் என்று உட்கார்ந்துக் கொண்டனர். அப்படித்தான் அருள்மொழி நடுவில் இருக்க ஒருப்பக்கம் மகி மற்றொரு பக்கம் அறிவு என்று மூவரும் அமர்ந்துக் கொண்டனர்.

இதில் சுடர் மட்டும் தனித்து விடப்பட எங்கே அமர்வது என்பது புரியாமல், சரி தனியே அமர்ந்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு அவள் அமர போக, என்ன இருந்தாலும் அவள் பெண் என்ற காரணத்தால், அவளை போலவே தனித்து நின்றிருந்த ஒரு ஆடவனை அவளோடு அமர வைத்துவிட்டனர். அதுவரை அவள் மனதிற்கு அந்த விஷயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் அதன்பின்,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தன்னோடு இரண்டு ஆண்கள் துணையாக வந்திருக்க, இப்படி யாரோடோ அமர வேண்டியிருக்கிறதே என்று மனதிற்கு வருத்தமாக இருந்தது. இதற்கும் மேல் இன்னொரு ஆடவனோடு அவளை அமர வைக்கும்போது கூட மகியோ அறிவோ வேடிக்கைப் பார்த்தப்படி தான் அமர்ந்திருந்தனர்.

இதில் அந்த ரைட் கிளம்பியதும் அந்த ஆடவன் வேறு மிகவும் பயந்தது போல் அவளுடன் நெருங்கி அமர்வது, அவளை பிடித்துக் கொள்வது என சில தொல்லைகள் கொடுத்தான். அதையெல்லாம் அவளால் பொறுக்க முடியவில்லை. தன் கழுத்தில் உள்ள சங்கிலியில் மாட்டி வைத்திருந்த சேஃப்டி பின்னால் அவனது உடம்பில் குத்தினாள். ஓடும் ரைடில் அந்த வலியும் சேரவே அதற்கு மேல் அவன் அமைதியாகிவிட்டான்.

அந்த ரைட் முடிந்து அனைவரும் இறங்கும் போது சுடர் அந்த ஆடவனை முறைத்து பார்க்க, அவன் அங்கிருந்து முதலில் வெளியேறிவிட்டான். அந்த சங்கடத்தை அவள் எளிதாக சமாளித்திருந்தாலும், அதனால் மனதில் ஏற்பட்ட வலி மட்டும் அவள் மனதில் அப்படியே இருந்தது. இதில் அதன்பிறகும் கூட அவளை கண்டுக் கொள்ளாமல் மூவரும் அடுத்த ரைட் இருக்கும் இடத்திற்கு செல்ல, அவர்களுடனே பின்னால் சென்றாள். ஆனால் ரைடில் ஏறவில்லை. அவள் ஏன் வரவில்லை என்று மூவரும் கேட்கவுமில்லை.

அவர்கள் அந்த ரைடில் ஏறி அது சுற்ற ஆரம்பித்ததும், அவர்களோடே அவர்கள் ஏறிய ரைடில் ஏறி அவர்களை பின் தொடர்ந்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டும் தன் குழந்தையோடு தனியாக நின்று ரைடில் ஏறியிருந்த தன் குடும்பத்தாரை பார்த்தப்படி நின்றிருந்தாள்.

வேகமாக தன் கைப்பையில் இருந்து ஒரு காகிதமும் பேனாவும்  எடுத்து, சாரி என்ற ஒற்றை சொல்லை மட்டும் எழுதி, அந்த காகிதத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து, தன்னுடன் வந்தவர்களிடம் அதை கொடுக்குமாறு சொல்லிவிட்டு, விறுவிறுவென்று அந்த தீம் பார்க்கை விட்டு சுடரொளி வெளியேறினாள்.

ப்ரண்ட்ஸ் நிறைய பக்கங்கள் கொடுக்க நான் விரும்பினாலும், அதற்கு தகுந்தார் போல் நேரம் அமைவதில்லை. அப்படியே அமைந்தாலும் உடலும் மனமும் அதற்கு ஒத்துழைப்பதும் இல்லை. அடுத்த அத்தியாயத்தில் அதிகம் கொடுக்கிறேன் என்று ஒவ்வொரு அத்தியாயத்தில் சொல்லி அதை நிறைவேற்றவும் முடிவதில்லை. விரைவில் மைண்ட் ரிலாக்ஸாகி ஆர்வத்தோடு அதிக பக்கங்கள் எழுத முடியும் என்று நானும் எதிர்பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். அதுவரையிலும் பொறுத்து கொள்ளுங்கள் தோழமைகளே.. நன்றி.

உறவு வளரும்...

Episode # 22

Episode # 24

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.