(Reading time: 9 - 17 minutes)

கி வேகமாக வரவும் அருளும் அறிவும் அவன் பின்னால் என்னவோ ஏதோ என்று ஓடி வந்தனர். அவர்களிடம் சுடர் எழுதியிருந்த காகிதத்தை காட்டினான். அறிவுக்கும் தவறு செய்துவிட்டோம் என்று உறுத்தல் இருந்தது.

“கொஞ்சம் ஓவரா தான் அந்த பொண்ணுக் கிட்ட நடந்துக்கிட்டோம் டா..” எனு அவன் மகியிடம் கூறினான்.

“இப்போ என்ன? நம்ம கூட அவ வர்றது அவளுக்கு பிடிக்கலன்னு தெரிஞ்சு அவளா போயிட்டால்ல.. விடுங்களேன் ரெண்டுப்பேரும்..” என்று அருள் அவள் கருத்தை கூறினாள். அதில் கோபப்பட்ட மகி,

“என்ன பேசற அருள்.. அவ போகட்டும்னு அப்படியே விட்டுட சொல்றீயா.. அந்த பொண்ணு ரொம்ப வருஷம் கழிச்சு இந்தியாக்கு வந்திருக்கு.. இதுல சென்னை அவளுக்கு புது ஊர் வேற, நாம சிட்டிய விட்டு தள்ளி வந்திருக்கோம்.. அவ தனியா போறது சேஃபா.. பொண்ணா இருந்துட்டு இப்படி நீ பேசலாமா?”

“மகி சொல்றது கரெக்ட் அருள்.. எழில் அத்தைக்கு இதெல்லாம் தெரிஞ்சா வருத்தப்படுவாங்க..” என்றவன் மகியிடம் திரும்பி..

“மகி அவ எவ்வளவு தூரம் போயிருப்பான்னு தெரியலையே.. நாய் போய் பார்த்துட்டு வரேன்..”

“நீயிரு அறிவு.. அருள் கூட இருந்து எல்லா ரைடும் சுத்திட்டு வாங்க ரெண்டுப்பேரும்.. நான் போய் சுடரை பார்த்துட்டு வரேன்..” என்றவன் வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். மனம் முழுக்க அவள் வெளியே போயிருக்கக் கூடாது.. அப்படியே சென்றாலும் எந்த பிரச்சனையிலும் சென்றிருக்கக் கூடாது என்று நினைத்தப்படி அவன் தீம்பார்க் நுழைவு வாயிலுக்கு செல்ல, பார்த்தால் சுடர் அங்கு தான் நின்றிருந்தாள்.

அது மதிய நேரம் என்பதால், தீம் பார்க் உள்ளே நுழைபவர் மற்றும் வெளியே செல்பவர் எண்ணிக்கை குறைந்து இருந்ததால் அவளை அவனால் எளிதாக பார்க்க முடிந்தது.

அப்படி இப்படியென்று தட்டு தடுமாறி வெளியில் செல்லும் வழி பார்த்து நுழைவு வாயில் வரை வந்தவள், அடுத்து எப்படி வீட்டுக்கு செல்வது என்பது தெரியாமல் கூகுளின் உதவியை நாடியிருந்தாள். இங்கு வந்ததிலிருந்து மகி வீட்டிற்கு தான் அடிக்கடி சென்றிருக்கிறாள். மத்தப்படி ஓரிரு முறை எழில் கோவில், ஷாப்பிங் என்று அழைத்து சென்றிருக்கிறார்.

வரும் வழியின் பாதையை எப்போதும் அவள் கவனித்துக் கொண்டு தான் வருவாள். இருந்தும் போக ஒரு வழி, வருவதற்கு ஒரு வழி. ஏற ஒருப்பக்கம் , இறங்க ஒருப்பக்கம் என்று பேருந்து நிறுத்தம் இப்படியிருக்க அவளுக்கு கொஞ்சம் குழம்பித்தான் போனது. இதில் இப்போது மகியோடு பைக்கில் வந்ததால் எங்கே சென்று பேருந்தில் ஏறுவது. இல்லை இங்கே ஆட்டோ கிடைக்குமா? இப்படியெல்லாம் யோசித்தப்படி நின்றிருக்க, மகியோ அதற்குள் பைக்கோடு அவள் அருகில் வந்தவன்,

“சாரி..” என்ற ஒற்றை வார்த்தையை சொன்னப்படி அவளை பார்த்தப்படி பைக்கில் அமர்ந்திருந்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவனா பேசியது என்றப்படி பார்த்திருந்தவள், “சாரியெல்லாம் எதுக்கு. நான் தான் உங்களுக்கு சாரி சொல்லணும்.. தேவையில்லாம உங்களுக்கல்லாம் தொந்தரவா இருந்துட்டேன்.. என்னால உங்க சந்தோஷம் டிஸ்டர்ப் ஆகுது.. அதான் கிளம்பிட்டேன்..”

“பிடிக்கலன்னா கூட்டிட்டு வந்திருக்கக் கூடாது.. கூட்டிட்டு வந்துட்டு உன்னை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டோம்.. நீ என்ன சொன்னாலும் எங்க மேல தான் தப்பு.. சரி வா வீட்டுக்கு போகலாம்..”

“அய்யோ எதுக்கு.. என்னால நீங்க ஏன் எஞ்சாய்மெண்ட்ட பாதியிலேயே நிறுத்திட்டு வரணும்.. இங்க எங்க போய் பஸ் ஏறணும்னு சொல்லுங்க.. நானே போய்க்கிறேன்..”

“உன்னை தனியா அனுப்பிச்சிட்டு  இங்க எங்களால எஞ்சாய் பண்ண முடியுமா? அருள்க்காக தான் வந்தோம்.. அறிவு அவக்கூட இருந்து கூட்டிட்டு வருவான்.. நாம போகலாம் வா..”

“இல்லை எதுக்கு.. பஸ் சேஃப்ட்டி தான.. நீங்க என்னை பஸ்ல ஏத்தி விடுங்க நான் போயிக்கிறேன்..

“எனக்கு தான் வீட்டுக்கு போறதுல பிரச்சனையில்லைன்னு சொல்றேனே அப்புறம் என்ன? வா பைக்கிலேயே போகலாம்..” என்றும் அவள் தயங்க,

“என்னாச்சு?” என்றுக் கேட்டான்.

“நான் உங்கக் கூட பைக்ல வர்றது உங்களுக்கு பிடிக்கலன்னு நினைக்கிறேன்.. அங்க வீட்ல ஏறும்போதே உங்க முகத்தை கவனிச்சேன்.. சித்தி, பூங்கொடி ஆன்ட்டி பார்த்துட்டு இருந்ததால ஒன்னும் சொல்ல முடியல..  எனக்கு பைக்ல சைட்ல உட்கார பயம்.. என்னோட ப்ரண்ட் ஒருத்தரோட மட்டும் தான் நான் பைக்ல போவேன்.. அதனால் ரெண்டுப்பக்கமும் கால் போட்டு தான் உட்காருவேன்.. இப்போ திடீர்னு ஒரே பக்கம் உட்கார பயமா இருக்கு..”

“எனக்கு நீ இப்படி உட்காருவதுல எந்த பிரச்சனையும் இல்லை.. முதல்ல அப்படி நினைச்சதுக்கு சாரி.. ஏறு போலாம்..” என்றதும்.அவளும் ஏறினாள்.

வெளிநாட்டில் இருந்து வந்ததால் இப்படி தான் இருப்பாள் என்று அவன் நினைத்தது போல் சுடரொளி இல்லை. அவள் மென்மையானவள் என்பது இந்த சில நிமிட பேச்சிலேயே அவனுக்கு புரிந்தது. இனி அவள் வீட்டுக்கு வரும்போது பாராமுகமாக நடக்கக் கூடாது என்று மனதில் முடிவு செய்துக் கொண்டான். ஆனால் அதன்பின் சுடர் அந்த வீட்டுப்பக்கம் வரவேயில்லை.

உறவு வளரும்...

Episode # 23

Episode # 25

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.