(Reading time: 19 - 38 minutes)

தொடர்கதை - அன்பின் அழகே - 16 - ஸ்ரீ

anbin Azhage

தாய்மை வாழ்கேன்னா தூய செந்தமிழ்

ஆரிராரோ ஆராரோ     

தங்க கை வலை வைர கை வலை

ஆரிராரோ ஆராரோ     

இந்த நாளிலே வந்த ஞாபகம்

எந்த நாளும் மாறாதோ     

கண்கள் பேசிடும் மௌன பாசையில்

என்னவென்று கூறாதோ     

தாய்மை வாழ்கேன்னா தூய செந்தமிழ்

பாடல் பாட மாட்டாயோ     

திருநாள் இந்த ஒரு நாள் இதில்

பலநாள் கண்ட சுகமே     

தினமும் ஒரு கனமும் இதை

மறவா எந்தன் மனமே     

விழி பேசிடும் மொழி தான்

இந்த உலகின் பொது மொழியே     

பல ஆயிரம் கதை பேசிட

உதவும் விழி வழியே 

பினவின் பேச்சும் அகல்யாவும் திஷானியை நிறையவே யோசிக்க வைத்திருந்தது.இருந்தும் மனம் முழுதாய் தெளிவடைய இரண்டு மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டது அவளுக்கு.இதற்கிடையில் மார்னிங் சிக்னஸ் வேறு ஆரம்பித்திருக்க அவள் உடல்நிலை அதற்கு மேல் அவளை யோசிக்க விடாமல் செய்திருந்தது.

அன்றும் அப்படிதான் காலையில் எழுந்து பல் தேய்த்து வருவதற்குள் ஒரு வழி ஆகியிருந்தாள்.தூக்கம் கலைந்தவன் அவள் வெகு நேரமாய் வரவில்லை என உணர்ந்து பாத்ரூமில் எட்டிப் பார்க்க வாஷ் பேசின் அருகில் கண்களில் கண்ணீரோடு  நின்று கொண்டிருந்தாள்.அந்த நிலையில் அவளை பார்த்து பதறியவன்,

“ஹே என்னாச்சு திஷா..ஏன் அழற??என்ன பண்ணுது??”

“பிரஷ் பண்ணவே முடில வாமிட் வர்ற மாதிரி ப்ரஷர் பண்ணி வயிறு வலிக்குது”,என அவன்மேல் சாய்ந்து கொண்டாள்.

“சரி விடு அழாத டா ப்ரஷ் பண்ண வேணாம் வாயை துடைச்சுட்டு வா”,என்றவன் அவளை அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தினான்.சாரதாவிடம் சென்று விஷயத்தை கூற அவர் அவளுக்காக ஏற்கனவே கலந்து வைத்திருந்த மாதுளை ஜீஸோடு வந்தார்.

“திஷானி இதை சாப்பாடும்மா..கொஞ்சம் புளிப்பு வாய்க்கு நல்லாயிருக்கும்..”

“அத்தை காலைலேயே ஜீஸா!காபி வேணும் அத்தை..”

“காபி சாப்ட்டு இன்னும் வயித்தை பிரட்டும் டா கொஞ்சம் கஷ்டப்பட்டு இதை சாப்டு எல்லாம் சரி ஆய்டும்..”

அவர் கூறியதற்காக மறுக்காமல் வாங்கி அதை ஒரு வாய் பருக ஆரம்பித்தவளுக்கு மொத்தமாய் வயித்தை பிரட்டிக் கொண்டு வர வேகமாய் எழப் போனவளால் முடியாமல் போக அவளை அப்படியே தூக்கியவன் குளியலறைக்குள் நிறுத்தியிருந்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வயிற்றுக்குள் இன்னதென்று சொல்ல முடியாத ஓர் உணர்வு குடலே வெளிவந்துவிடும் அளவுக்கு தோன்ற அப்படியே சோர்ந்து போனாள் திஷானி.

அபினவ் அவளை பின்னிருந்து தாங்கிக் கொள்ள சாரதா மெதுவாய் அவள் முகம் துடைத்து விட்டார்.

சோர்வாய் கட்டிலில் அமர்ந்தவள் அப்படியே கால் சுருக்கி படுத்துக் கொள்ள அபினவிற்குத் தான் அவள் படும்பாடு தாங்க முடியாமல் போனது.சாரதா அவனை செய்கையால் வெளியே அழைத்துச் சென்றார்.

“அபினா ஒண்ணுமில்ல இதெல்லாம் ஆரம்ப காலத்துல சகஜம் தான் நீ என்னவோ பேயை பார்த்த மாதிரி முழிச்சுட்டு நிக்குற..உன் முகத்தை பார்த்தா எனக்கே பயமா இருக்கு.நார்மலா இருடா..அவளை இன்னும் பயமுறுத்தாத..இட்லி தட்டுல போட்டு தரேன் அவளுக்கு சாப்பிட குடு..”,என்றவாறு சமையலறைக்குச் சென்று எடுத்து வந்து கொடுத்தார்.

உள்ளே நுழைந்தவன் அவளருகில் என்ன செய்வதென தெரியாமல் பாவமாய் அமர்ந்திருக்க சில நொடிகளில் கண்விழித்தவள் அவனைப் பார்த்து புன்னகைக்க முயற்ச்சித்தாள்.

“இப்போ எப்படிடா இருக்க?டிபன் கொண்டு வந்துருக்கேன் சாப்டுறியா கொஞ்சம்?”

மெதுவாய் எழுந்து அமர்ந்தவள் தட்டை தன் கையிலெடுத்து ஒரு வாய் இட்லியை அவனுக்கு ஊட்டிவிட கை நீட்டினாள்.

“இப்போ எனக்கு இது ரொம்ப அவசியமா முதல்ல சாப்டு நீ..ஆனாலும் படுத்துறீங்க ஒரு மனுஷன..டேய் குட்டி ப்ளீஸ்டா அப்பாவ இப்படியெல்லாம் பயமுறுத்தாம உள்ளே பத்திரமா இருக்கனும்..நா பாவம் தான?”என்றவாறு அவளின் வயிற்றில் லேசாய் வருடினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.