(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - தாரிகை - 07 - மதி நிலா

series1/thaarigai

 

வருடம் : 2017..

இடம் : கோவை..

வினையும் பிரஜித்தையும் அந்த இடத்தில் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை நிஷா..

இவர்கள் என்ன செய்கிறார்கள்..??

இவர்கள் புகைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் சிகரெட் மாதிரி தெரியவில்லையே..

போதை வஸ்துவோ..??

கேள்விகள் பல அணிவகுத்துக்கொண்டிருக்க இருவரையும் வெறித்தபடி நின்றிருந்தாள் நிஷா..

கவினும் பிரஜித்தும் தங்களது வேலை முடிந்தது போல் கைகளைத் தட்டிவிட்டு திரும்ப அங்கு நிஷா நின்றிருப்பது கண்டு இருவருக்கும் அடித்த போதை இறங்குவதாய் உணர்வு..

“நி..ஷா.. நீ இங்க என்ன பண்ற..??”, அதிர்ச்சி மாறாமல் உளறலாய் கேட்டான் பிரஜித்..

“அதையே நானும் கேட்கலாம் பிரஜித்..”, என்று கேட்டவளது குரலில் அத்தனை கடுமை..

பதில் இல்லை இருவரிடமும்.. தவறு செய்த பிள்ளைகளாய் தலை குனிந்து நின்றனர்..

இருவரும் விசிறியடித்திருந்த ஒரு சிறு பேப்பரை எடுத்தவள் அதை தனது மூக்கின் அடியில் கொண்டுசென்றாள்..

அவள் செய்யப்போவதுணர்ந்தாற்போல் அந்தப் பேப்பரைத் தட்டிவிட்ட கவின், “என்ன நிஷா பண்ற..??”, என்றான் கோபமாக..

“ஸ்மெல் பண்ணிப் பார்க்கப் போறேன்..”, என்றவள் மீண்டும் கீழே கிடப்பதை எடுக்க குனிய அவளது கையை இறுக்கமாக பிடித்தான் பிரஜித்..

“பிரஜித் என் கையை விடு..”, என்று கோபமாக நிஷா சொல்ல அவனது பிடி மேலும் இறுகியது மாட்டேன் என்பதாய்..

“நிஷா.. இதை முகர்ந்து பார்த்தாலே போதை ரொம்ப ஏறும்..”, என்றிருந்தான் கவின்..

“ஹோ.. அப்போ இதை உங்களைப் போல் இழுத்துவிட்டா இன்னும் நல்லா ஏறும்.. அப்படித்தானே..”, நக்கலாக இவள் கேட்க மீண்டும் தலைகுனிந்தனர் இருவரும்..

“எத்தனை நாளா இந்தப் பழக்கம்..??”

“இன்னைக்குத்தான் முதல் முறையாக ட்ரை பண்ணோம் நிஷ்..”, இது கவின்..

“இதைப் பற்றி எல்லாம் நாம் படிக்கிறோம்தானே.. கேடு கேடு கேடுன்னு.. அப்புறம் எதுக்கு இது..??”, கோபமாக..

“இல்லப்பா.. தெரிஞ்ச ப்ரெண்ட்ஸ் ட்ரை பண்ணி நல்லா இருக்கும் ட்ரை பண்ணிப்பாருங்க.. அது இதுன்னு எங்களை ரொம்ப டெம்ப்ட் பண்ணிவிட்டுட்டாங்க.. அதான்.. நாங்களும் சும்மா ட்ரை பண்ணிப்பார்த்தோம்.. ரொம்ப டோஸ் இல்லை இது.. கம்மியான டோஸ்தான்.. ஒன்னும் பண்ணாது நிஷா..”, என்றான் பிரஜித்..

“உசுப்பி விட்டா ட்ரை பண்ணிடுவீங்களா இரண்டு பேரும்..?? அறிவில்லை..?? இதெல்லாம் ஒரு டைம் ட்ரை பண்ணாலே திரும்பித் திரும்பி பண்ணத் தோணும்.. யூ வில் கெட் அடிக்ட்டட் வெரி சூன்..”

“வி ஆர் நாட் அடிக்டட் டூ திஸ் நிஷா.. திஸ் இஸ் தி பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் டைம்.. இனி இதை நாங்கள் தொடவே மாட்டோம்..”, என்றான் கவின் உறுதியாக..

இருவரையும் நன்றாக முறைத்துவைத்தவள், “திஸ் ஷுட் பி யுவர் லாஸ்ட் டைம்..”, என்று லாஸ்ட்டில் அழுத்தம் கொடுத்தவள், “கிளாஸுக்கு நேரமாகுது.. இரண்டு பேரும் கிளம்புங்க..”, என்றாள்..

“நீ போ.. நாங்க பின்னாடி வருகிறோம்..”, என்ற பிரஜித்தை மீண்டும் ஒருமுறை முறைத்துவைத்தவள், ”நீங்க போங்க சீனியர்ஸ்.. நான் பின்னாடி வரேன்..”, என்றாள்..

நிஷாவின் பேச்சை மீறமுடியாது இருவரும் கிளம்ப அந்த இடத்தை தனது போனில் படம்பிடித்துக்கொண்ட நிஷா கீழே சிதறிக்கிடந்த சில பொருட்களையும் சேகரித்துக்கொண்டவள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வினையும் பிரஜித்தையும் பற்றி நினைத்துக்கொண்டே வீடுவந்து சேர்ந்த நிஷாவிற்கு மனது முழுவதும் குழப்ப மேகங்கள்..

இருவரும் தன்னிடம் எதையோ மறைப்பதுபோன்று உணர்வு.. இந்தப்பழக்கம் இருவருக்கும் சில நாட்களாக இருக்குமோ என்ற சந்தேகமும்..

இவர்களைப் போல் கல்லூரியில் இருக்கும் பலரும் இதற்கு அடிமையாகி இருப்பார்களோ என்ற கேள்வியும்..

யோசிக்க யோசிக்க தலைவலிப்பதுபோல் இருக்க படிகளில் அப்படியே அமர்ந்துவிட்டாள் நிஷார்த்திகா..

சற்று நேரத்திற்கெல்லாம் அவளது மனம் போலவே வானமும் கலங்க அது மழையாய் அவள் மீது தூரத்துவங்கியது..

எப்பொழுதும் மழையை இரசிப்பவளின் மனது குட்டையாய் கலங்கியிருக்க சொட்டச்சொட்ட அதில் நனைந்தபடி அமர்ந்திருந்தாள் நிஷா..

அதே நேரம் வீட்டை அடைந்த செல்வி படிகளில் நனைந்தபடி அமர்ந்திருந்தவளைக் கண்டு, “இவகிட்ட எத்தனை தடவை சொல்றதோ.. மழைல நனையாதே என்று..”, என்று மனதில் நினைத்துக்கொண்டவள் தான் பிடித்துக்கொண்டு வந்த குடையை அவளுக்கும் சேர்த்துப்பிடித்து, “நிஷா..”, என்றழைத்தாள் சத்தமாக..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.