(Reading time: 13 - 26 minutes)

“எஸ் மேடம்.. போகலாம்..”, என்றவர் குறிப்பிட்ட அந்தக் கோவிலை நோக்கி வண்டியை செலுத்தத்துவங்கினார்..

ண்ணா.. கொஞ்சம் விலையை குறைத்துக்கொடுங்களேன்..??”, கெஞ்சியபடி கேட்டது ஒரு குரல்..

“என்னது விலையைக் குறைப்பதா..?? அதெல்லாம் முடியாது..”

“ப்ளீஸ்ண்ணா.. இந்த ஒருதடவை மட்டும் ப்ளீஸ்..”

“முடியாது டா.. உனக்கு கமிபண்ணி கொடுத்தா நீ எல்லார்கிட்டயும் நான் விலை கம்மிபண்ணி கொடுத்ததா சொல்லவ.. மத்தவனும் அதைக் கேட்டுட்டு என்கிட்டே எதிர்பார்ப்பாங்க.. என்னால முடியாது.. ஒரே விலைதான்.. காசைக்கொடுத்தா சரக்கு.. இல்லாட்டி கிளம்பிட்டே இரு..”, கறாராக வந்தது மற்றவனின் குரல்..

அரசங்கோவிலைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த செந்தாரிகைக்கும் சக்திவேலுக்கும் இவ்விருவரின் சம்பாஷனைகள் கேட்க எதுவோ சரியில்லை என்பது புரிந்து அங்கேயே ஒரு மறைவிடத்தில் தேங்கினர்..

“இந்த ஒருவாட்டி மட்டும் கொடுங்க.. யார்க்கிட்டயும் சொல்லமாட்டேன்.. ப்ளீஸ்ண்ணா..”, ரொம்பவே தாழ்ந்துபோய் ஒலித்தவனது குரல் கொஞ்சம் நடுக்கமாக..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“என்னடா நீ..?? இப்படிக் கெஞ்சற..??”, சலிப்பதுபோல் நடித்த மற்றவன், “நீ இவ்ளோ கென்ரதால உனக்கு மட்டும் கம்மிபண்ணி தரேன்.. ஆனால் அதுக்கு பதிலா நீ எனக்கு காசு தரவேண்டாம்.. ஒரு ஹெல்ப் பண்ணனும்.. செய்வியா..??”, கேள்வியாக..

“கண்டிப்பாண்ணா.. சொல்லுங்க என்னவேணும்னாலும் செய்யறேன்..”, வாயெல்லாம் பல்லாக..

அதுதானே மற்றவனும் எதிர்பார்த்தது..

“நான் உன்கிட்ட ஒரு சின்ன பை தருவேன்.. அதை நீ திறந்து பார்க்காமல் மெடிக்கல் காலேஜில் இருக்கும் ஒருவனிடம் கொண்டு சேர்க்கவேண்டும்..”

“சரிண்ணா.. கண்டிப்பா கொடுத்தறேன்..”, என்ற சிறுவன், “ஸ்கூல் முடிச்சிட்டு கொண்டுபோய் கொடுத்தா போதும்ல..??”, என்றான் மறைந்து நின்றுகொண்டிருந்தவர்களை அதிரவைத்து..

“டேய்.. உனக்கு ஸ்கூல் முடிஞ்சு.. நீ அங்க போயிட்டு வரதுக்குள்ள காலேஜை இழுத்து மூடிடுவாங்கடா.. நீ ஒரு மணிக்கு அங்க ரீச் ஆகறமாதிரி போய்.. நான் கொடுக்கறதை அங்க கொடுத்துட்டு வா..”

“ஸ்கூல் லீவ் போட்டா வீட்டுக்குத் தெரிஞ்சிடுமேண்ணா..”, கொஞ்சம் பயம் கலந்திருந்தது குரலில்..

“சரி.. உனக்கு முடியலனா விடு.. சரக்கை முழுகாசையும் கொண்டுவந்து கொடுத்திட்டு நாளைக்கு வந்து வாங்கிக்கோ..”, அலட்சியமாக..

“இல்லைண்ணா இல்லைண்ணா.. நான் ஸ்கூல் டைம்லையே கொண்டுபோய் கொடுத்திடறேன்..”, மீண்டும் கெஞ்சலாக..

“சரி சரி.. இந்தா இது உன் சரக்கு.. இது நீ கொடுக்கவேண்டிய சரக்கு.. உன் போனுக்கு நீ யாருக்கு இதைக் கொடுக்கணும்னு மெசேஜ் பண்றேன்.. கொண்டுபோய் கொடுத்திடு.. சரியா..??”, என்றவன் ஏதோ யோசிப்பதாய் பாவனை செய்துவிட்டு, “அப்புறம் தம்பி.. நம்ம பேசுனதெல்லாம் என் போன்ல ரெக்கார்ட் செஞ்சிருக்கேன்.. சோ.. என்னை நீ ஏமாத்தனும் நினைக்காதே.. நீ நான் சொன்ன வேலையை சரியா செய்யலன்னா இந்த வீடியோ நேரா உங்க அப்பா போனுக்கு போயிரும்.. புதன்கிழமை மீண்டும் சந்திக்கலாம்..”, என்றுவிட்டு சிறுவன் அதிர்ந்து நிற்பதை கண்டும் காணாமலும் கண்டுவிட்டு கிளம்பிச்சென்றான்..

தங்களது போனில் இருவரையும் ரிகார்ட் செய்துகொண்டிருந்தவர்களுக்கும் இருவரின் சம்பாஷனைகளையும் செய்கைகளும் கண்டு அதிர்ச்சியே..

 

உருவெடுப்பாள்..

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.