எந்தவொரு ரியாக்ஷனும் இல்லை பெண்ணிடமிருந்து.. ஆனால் உடல் மட்டும் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பது புரிந்தது செல்விக்கு..
குனிந்து நிஷாவை தனது தோளுடன் இறுக்கிப்பிடித்த செல்வி, “எந்திரி நிஷா..”, என்றாள் கட்டளையாக..
உடல் தூக்கிவாரிப்போட செல்வி தன்னைப் பிடித்திருப்பதுகண்டு மிரண்டு விழித்தாள் நிஷா..
“நிஷா.. முழிக்காம எந்திரி.. என்னால உன்னை புல்லா பேலன்ஸ் பண்ண முடியல..”, இப்பொழுது அதட்டாலக..
செல்வியின் குரலில் தடுமாறியவள் பதற்றத்துடன் எழ, “எதுக்கு இந்த பதற்றம்..??”, என்று மீண்டும் கொட்டுவிழுந்தது அவளிடமிருந்து..
வீட்டிற்குள் இருவரும் நுழைய, “நிஷா சீக்கிரம் போய் ட்ரெஸ் மாத்து.. பாரு.. புல்லா ஈரம்.. சளி பிடிச்சுக்கும் உனக்கு..”, அக்கறையாக..
செல்வியின் குரலுக்கு கட்டுப்பட்டாற்போல் தலையை உருட்டிய நிஷாவைக் கண்டு எப்பொழுதுமபோலவே இன்றும் சிரிப்பு வந்தாலும் அதை மறைத்து தனது கடுமையான முகமூடியை அணிந்துகொண்டாள் செல்வி..
அவசரமாக உடைமாற்றி தலைமுடி உலர்த்தி நிஷா தனது அறையைவிட்டு வெளியே வர அவளுக்காகக் காத்திருந்தது ஆவிபறக்கும் காபி..
எப்பொழுதும் போல் இன்றும் செல்வியின் அக்கறையில் மனம் நெகிழ மழையை இரசித்தவாறு காபியை பருகத்துவங்கினாள் நிஷா..
“காலேஜில் என்ன நடந்துச்சு நிஷா..??”, மற்றொரு காபி கப்புடன் தன்னருகில் அமர்ந்து செல்வி கேட்க இவள் எப்படி இப்படி இருக்கிறாள் என்ற வியப்பு நிஷாவிற்குள்..
“என்னைப் பற்றி பிறகு ஆராய்ச்சி செய்துகொள்ளலாம்.. இப்போ உங்க காலேஜில் என்ன நடந்துச்சுன்னு சொல்லு..”, என்றாள் செல்வி..
அடுத்த ஒரு நிமிடத்திற்குள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்திருந்தாள் செல்வியிடம்..
“எனக்கு அந்த இடத்தைப் பார்த்தால் இது ரொம்ப நாளா அங்க நடக்கறமாதிரி இருக்குது செல்விக்கா.. தெரிஞ்சே அவங்க ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணிக்கறாங்களோன்னு ஒரு பீல்..”, என்றிருந்தாள் நிஷா..
“நீ இதை இன்னைக்குத் தான் முதல் முறையாகப் பார்க்கிறாயா..??”
“நேரடியா இன்னைக்குத்தான் இதைப் பார்தேன்க்கா.. ஆனால் சில நாட்களாக அதனுடைய ஸ்மெல்.. ரொம்ப பரிச்சயமாய் இருக்குது..”
“பரிச்சயமா இருக்குதா..??”, புருவமுடிச்சுடன்..
“ஹ்ம்.. ஆமா.. என் பக்கத்தில் யாரோ அதை யூஸ் செய்வதுபோல்..”
“உன் கிளாஸ்ல யாராவது யூஸ் செய்யலாம்..”
“இருக்கலாம்க்கா.. பட் அது எப்படி சாத்தியம்..?? அதான் எனக்கு புரியவில்லை..”
“எது..??”
“க்ளாஸில் இருக்கும்பொழுதே யூஸ் செய்வதுதான்..”
“நீ மெடிக்கல் தானே படிக்கற..??”, கேலி கொஞ்சம் கலந்திருந்ததோ குரலில்..
அவள் கே(லி)ள்வி புரியாமல் முழித்துவைத்தாள் நிஷா..
“பதில் சொல்லுங்க மேடம்..”
“அக்கா.. நீங்க கேக்கறது புரியுது.. எங்களுக்கு இன்னும் ட்ரக்ஸ் பத்தி எல்லாம் கிளாசஸ் ஸ்டார்ட் பண்ணல..”, என்று ரோஷமாக உரைத்தவள், தெரியாத்தாலதான் உங்ககிட்ட கேட்கிறேன்.. அது எப்படி சாத்தியம்.. அதுவும் யாருக்கும் தெரியாமல்.. அதுதான் என் சந்தேகம்..”, என்று கேட்டாள்..
“சில ட்ரக்ஸ் உண்டு நிஷா.. பக்கத்தில் இருக்கும் நபருக்கு தெரியாமல் அதை நம்மால் உட்கொள்ள முடியும்.. போதை ஏற்பட ஒரு பாட்டில் முழுவதும் பருகவேண்டும் என்பதில்லை.. விரல் நகத்தில் கொஞ்சமாக அந்தப் பொடியை சேகரித்து அதனை உட்கொண்டாலே போதும்.. தன்னை மறந்த நிலைக்கு சென்றுவிடுவான் அவன்.. ஆனால் அதை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்திட இயலாது.. காரணம் அவன் உட்கொள்ளும் அந்த ட்ரக்..”
“பட் ஹவ் கம் தே ஆர் கெட்டிங் தி ட்ரக்ஸ் சோ ஈஸிலி..??”
“சிகரெட் மது புகையிலை எல்லாம் ட்ரக் வகைகள்தானே..?? அதெல்லாம் மார்கெட்டில் ஓபெனாக கிடைப்பதுபோல் தான் இது போன்ற போதை வஸ்துக்களும் கிடைக்கிறது..”
“என்ன சொல்றீங்கக்கா..?? இதெல்லாம் ரொம்ப ஈசியா கிடைக்கிறதா..??”, அதிர்வாக..
“அது எங்கு எப்படி எப்பொழுது கிடைக்கும் என்ற தகவல் உனக்குத் தெரிந்தால் அது ஈசிலி அவைலபிள் ஒன்றுதான்..”
“இதை ஒழிக்க பல நடவடிக்கைகள் எடுக்கபடுகிறதே.. அப்படி இருந்தும் இது அழியவில்லையா..??”
“எவ்வளவுதான் நடவடிக்கைகள் எடுத்தாலும் இட்ஸ் சீக்ரெட்லி ச்ப்ரெட்டிங் லைக் அ வைரஸ் நிஷா.. இதை முழுமையாக தடுப்பது என்பது கடினமான ஒன்று.. முதலில் எல்லாம் இதனை இருபதுகளுக்கு மேல் இருக்கும் நபர்கள்தான் தேடிப்போனார்கள்.. ஆனால் இப்பொழுது டீனேஜ் பிள்ளைகளுக்குக்கூட இந்த பழக்கம் இருக்கிறது.. ஒரு பெரிய நெட்வர்க்காகவே மாறிவிட்டது இது..”