(Reading time: 13 - 26 minutes)

“அப்போ இதனை தடுக்கவே முடியாதா..??”

“தடுக்கலாம்.. முழுமையாக ஒழித்திட முடியாது..”, என்ற செல்வி நிஷாவின் வாடிய முகம் கண்டு, “வருத்தப்படாதே நிஷா.. உன் நண்பர்களை இதிலிருந்து நாம் மீட்டுவிடலாம்.. ஏதாவது வழி இருக்கும்..”, என்றாள் சமாதானமாக..

பெருநூர் (கற்பனை)..

நொய்யல் ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் முருகனுக்கு சொந்தமான சிற்றூர்..

கிபி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவில் அது என்பதால் அங்கு எப்பொழுதும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் இருக்கும்..

புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் சிலை தடுப்புப் பிரிவு ஐஜி சக்திவேல் அங்கு வர அவருடன் செந்தாரிகை..

இருவரும் மௌனமாக கோவிலைச் சுற்றிவந்தனர்..

செந்தாரிகையின் விழிகள் அந்தக் கோவிலை இரசனையுடன் சிறைபிடித்துக்கொண்டிருக்க சக்திவேலின் விழிகள் ஒருவித தேடலுடன் பதிந்து மீண்டுகொண்டிருந்தது..

“செந்தாரிகை.. இட்ஸ் செவென் நாட் பைவ்..”, சக்திவேலின் குரல் அதலபாதாளத்தில் இருந்து கேட்க கோவில் சிலையைப் போல் புரியாமல் அவளும் ஒருநொடி சிலையாகி அவரை ஏறிட்டுப்பார்த்தாள் என்ன சொன்னார் இவர் என்பதாக..

“திருடுபோனது மொத்தம் ஐந்து சிலைகள் அல்ல ஏழு சிலைகள்..”, அழுத்தம் திருத்தமாக சக்திவேல் கூற செந்தாரிகையின் மனதில் இட்ஸ் கெட்டிங் வர்ஸ் என்பதாய் எண்ணம்..

அதையே அவள் முகமும் பிரதிபலிக்க, “இட் மே கெட் மோர் வர்ஸ்..”, என்றார் சக்திவேல் கண்களை மீண்டும் மீண்டும் அங்கும் இங்கும் சுழற்றியபடியே..

“வாட் டூ யூ மீன்..??”, புரியாமல் வந்துவிழுந்தது செந்தாரிகையின் கேள்வி..

“ஐ மீன்.. நிற்காமல் இங்கிருந்து கிளம்பவேண்டும்..”, என்றவர் வேகமாக ந(ஓ)டக்கத்துவங்கினார்..

அவரின் பின் இவளும் நகர யாரோ தங்களை கண்கானிப்பதுபோல் உணர்வு..

சட்டென்று நின்று அவ்விடத்தை கூர்ந்துநோக்க இருவர் மறைவது கண்ணில் பட்டது..

ஒருவிதமான புன்னகை அவளின் இதழுக்கிடையில் வந்தமர்ந்துக்கொள்ள சக்திவேலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முயன்றாள் அவள்..

சார்.. எப்படி ஏழு சிலைன்னு சொல்றீங்க..??”, சக்திவேல் காரை ஸ்டார்ட் செய்யும் முன் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டிருந்தாள் அவள்..

“கோவிலோட பழைய போட்டோஸ் கெடச்சுதுன்னு நான் சொன்னேன் உங்ககிட்ட.. நியாபகம் இருக்கா உங்களுக்கு..??”

“யா.. 2002 ல எடுத்த பிக்ஸ் கிடைத்திருக்கிறது என்று சொன்னீர்கள்.. நியாபகம் இருக்கு..”

“அந்த பிக்ஸ்ல இருக்க சிலைகளையும்.. இப்போ கோவிலில் இருக்கும் சிலைகளையும் கம்பேர் செய்து பார்க்கும்பொழுது வெளிப்புறத்தில் இருக்கும் இரண்டு சிலைகள் மிஸ்ஸிங்..”

“அது உலோக சிலைகளா..??”

“ஆமாம்.. சில அடி உயரங்கள்தான் இரண்டும்.. இரண்டும் தட்சிணாமூர்த்திக்கு இடப்புறம் வலப்புறம் இருக்கும் சிலைகள்..”

“தட்சிணாமூர்த்திக்கு அருகில் இருக்கும் சிலை என்றால்.. அது காணாமல் போயிருந்தால் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிந்திருக்குமே..”

“சாமியை நன்றாக உற்று கவனிப்பவர்களுக்கு மட்டுமே அது தெரிந்திருக்கும் செந்தாரிகை.. பிகாஸ் தட் ஸ்டாட்ச்யூ இஸ் ரிப்லேஸ்ட் பை அனதர் சிமிலர் ஒன்..”

“வாட்ட்ட்..??”

“எஸ்.. கொஞ்சம் கூட சந்தேகம் வராமல் உருவ ஒற்றுமை முதல் அனைத்தையும் தத்ரூபமாக வடித்துள்ளனர் அப்புதிய சிலையில்..”

“பட் சார்.. நீங்க இந்த சிலைகளை முதல் முதலில் பார்க்கிறீர்கள்.. எப்படி நீங்க இதை உறுதியாகச் சொல்கிறீர்கள்..?? புரியவில்லை எனக்கு..”

“பெருநூர் கோவிலோட சிறப்பம்சம் தெரியுமா செந்தாரிகை உனக்கு..?? ஐ மீன் அபவ்ட் தி ஸ்டாட்ச்யூஸ்..??”

இல்லை என்பதாய் தலையசைப்பு அவளிடம்..

“இங்குள்ள கடவுளின் சிலைகள் எதுவும் கற்சிலைகள் அல்ல.. அனைத்தும் ஒரே உலோகத்தால் ஆனவைகள்.. பட் நான் குறிப்பிடும் இரு சிலைகளும் செம்பால் ஆனவை.. புதிதாக செய்யப்பட்டிருக்கின்றன..”

“புதிதாக அதை மாற்றியுள்ளார்கள் என்றால் இங்கு ரெகுலரா சாமி கும்பிட வருபவர்களுக்கு அது எப்படி தெரியாமல் போனது..??”

“சிலையை எடுத்தவங்களோட இன்டலிஜன்ஸ்.. வேற என்ன சொல்ல.. பட் எனக்கு என்னமோ இன்னும் நிறைய சிலைகள் காணாமல் போயிருக்குமோ என்று சந்தேகமாக உள்ளது.. எதுக்கும் நான் என் டீமைவிட்டு அபீஷியலா இங்க எக்ஸமைன் பண்ண சொல்றேன்..”, என்றார் சக்திவேல்..

“ஓகே சார்..”, என்ற செந்தாரிகை, “இந்தக் கோவிலுக்குப் பின்னால் நொய்யல் ஆற்றைத் தாண்டி வேறொரு சிறு கோவில் இருக்கிறது.. அந்தக்கோவிலை அரசங்கோவில் என்று சொல்வார்கள்.. அதுவும் இந்த முருகன் கோவிலுக்குச் சொந்தம்தான்.. அங்கேயும் ஒரு க்ளான்ஸ் பார்க்கலாமா..??”, என்று கேட்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.