(Reading time: 8 - 15 minutes)

அப்போதைக்கு ஊடகங்களில் சாத்விக் திருமணம் செய்துக் கொள்ளப் போகும் பெண் அவள் தான் என்று சொல்லியிருக்கவில்லையென்றாலும், கூடிய சீக்கிரம் அதை பற்றி வெளியில் சொல்லவும், விரைவிலேயே நிச்சயதார்த்தம் செய்யவும் அவளது பெற்றோரும், சாத்விக்கின் பெற்றோரும் முடிவு செய்துள்ளனர். அதனால் சாத்விக்கிடம் பேச சொல்லி அவனுக்கென்று இருக்கு யாருக்கும் தெரியாத தனிப்பட்ட எண்ணை அவளது தந்தை அவளிடம் கொடுத்தார்.

அவளும் ஒரு சிறு ஆர்வத்தோடு தான் சாத்விக்கிற்கு தொடர்பு கொண்டாள். சில நொடிகளுக்கு பின் அழைப்பு ஏற்கப்பட்டு அவனது குரல் கேட்டது.

“ஹலோ நான் சுஜனா..” என்று அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சுஜனாவா சாரி நீங்க யாருன்னு எனக்கு தெரியல..” என்றவனது பேச்சில், கொஞ்சமாக அவள் மனதிற்குள் எழுந்த ஆர்வமும் அப்படியே அடங்கி போனது.

“என்னை தெரியவில்லையென்று சொல்கிறானே? உண்மையிலேயே என்னை அவனுக்கு தெரியவில்லையா? இல்லை விளையாடுகிறானா?” என்று அவள் சிந்தித்தப்படி இருக்க,

“ஹலோ யார் நீங்கன்னு கேட்டா பதிலையே காணோமே.. ஆமாம் என்னோட பர்சனல் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்ற அவனது கேள்வியில் நடப்புக்கு வந்தவள்,

“சாத்விக் நான் சுஜனா.. என்னை தெரியலையா? நம்ம வீட்ல நம்ம ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் பேசியிருக்காங்க.. இன்னைக்கு உங்க மேரேஜ் பத்தின நியூஸ் தான் ஹாட் நியூஸ்..” என்று சொல்லவும் மறுமுனையில் சிறிது நேரம் மௌனம்..

அவன் தொடர்பில் இருக்கிறானா? என்று தெரியாமல், “ஹலோ சாத்விக்..” என்று அவளே பேசவும்,

“சாரி வேற ஒரு டென்ஷன்ல உங்க பேரை மறந்துட்டேன்.. இப்போ ஞாபகம் வந்துடுச்சு.. நான் இப்போ கொஞ்சம் பிஸியா இருக்கேன்.. ஃப்ரீ டைம் கிடைக்கும் போது பேசலாம்..” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தான் அவன்,

அவனது பேச்சு அவளை தவிர்ப்பதற்காக இருப்பது போல் சுஜனாவிற்கு தோன்றியது. இருந்தும் இன்னொரு பக்கம் உண்மையிலேயே அவனுக்கு வேறு ஏதும் வேலை இருக்குமா? என்றும் யோசித்தாள். அடுத்து அவனே பேசுவதாக கூறினானே, அதுபோல் அவனாகவே பேசட்டும் அப்போது அவனிடம் பேசிக் கொள்ளலாம் என்று அவள் நினைத்திருக்க, அவனோ அவளிடம் அதன்பின் பேசவே இல்லை. இதோ இப்போது சிறிது நேரத்தில் அவன் வரப் போகிறான். அப்போதாவது இயல்பாக தன்னோடு உரையாடுவானா? என்று அவள் யோசித்தப்படி நின்றிருக்க,

“சுஜா..” என்ற குரலில், அவளை தான் அழைக்கிறார்கள் என்று தெரிந்து குரல் வந்த திசையில் நின்றிருந்தவனை திரும்பி பார்த்தவள், வியப்பில் ஆழ்ந்து போனாள்.

சற்று முன் யாரை நினைக்கக் கூடாது என்று வலுக்கட்டாயமாக ஒதுக்கினாளோ, இப்போது அவனை நேரில் பார்க்கவும், தன்னை மீறி மனதில் தோன்றிய மகிழ்ச்சியில் அவனை பார்த்து புன்னகைத்தாள்.

மையல் தொடரும்..

Episode # 03

Episode # 05

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.